Relationshipsநீங்கள் ஒரு உறவில் இருக்கிறீர்கள்.. அந்த உறவின் ஆரம்ப நாட்களை நினைவு கூரமுடியுமா? முதல் முதலில் உங்கள் நண்பரை பரிச்சயம் செய்துக்கொண்ட நாள், மெதுவாக போன் நம்பர்களோ இல்லை முகவரியோ பரிமாறிக்கொண்ட தருணங்கள், முதல் கடிதம், முதல் போன் கால்... நினைத்தாலே சிலிர்ப்பாக இருக்கும். இது காதலர்களுக்கு மட்டும் என்று சொல்லவில்லை... எந்த ஒரு உறவாயினும் - சாதாரண சக ஊழியராகவோ இல்லை வகுப்பு தோழராகவோ வந்த நண்பர் உங்கள் வாழ்வின் முக்கிய நண்பராக மாறிய காலகட்டம்... எல்லா உறவுகளும் அதே இடத்தில் நின்றுவிட்டால் எவ்வளவு அழகாக இருக்கும்? நமக்கு மட்டும் சக்தி இருந்தால் காலச்சக்கரத்தை அங்கேயே நிறுத்திவிடமாட்டோமா? கிட்டத்தட்ட எல்லாருக்குமே தான் இது பொருந்தும். ஆனால் நிஜ வாழ்க்கையில் அப்படியா நடக்கிறது? வாழ்க்கையின் ஏதோ ஒரு கட்டத்தில் அந்த உறவின் மேலே ஒருவித Taking for granted/அலுப்பு/வெறுப்பு என நிலைகள் மாறிக்கொண்டு தானே இருக்கிறது? இல்லையென்றால் என் பல காதல் திருமணங்கள் விவாகரத்திலும், பல பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களிடம் பகைமை பாராட்டும் வழக்குகளை நம்முடைய வழக்கு மன்றங்களிலும், தினசரி வாழ்க்கையிலும் காண நேர்கின்றன.

Homosexualsவலைமனையில் எழுதுவதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் - நமது கருத்தை ஒத்துப்போகும் / வெட்டிப்போகும் நபர்களின் நட்பு கிடைக்கும். சில வருடங்களுக்கு முன்பு ஓரினச்சேர்க்கையாளர்கள் குறித்த பதிவை படித்துவிட்டு ஒரு நண்பர் பதில் அனுப்பினார். கல்லூரி முடித்திருப்பதாக சொன்னார் "நீங்கள் Brokeback Mountain பார்த்திருக்கிறீர்களா?" என்று கேட்டிருந்தார். அதில் இரு ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு இடையேயான உறவை சொல்லியிருப்பார்கள் என்றும் "ஓரினச்சேர்க்கை பாவம் அல்ல" என்றும் எழுதியிருந்தார். "ஒருவருடைய sexuality என்பது தனி மனிதர்களின் விருப்பம்... அதை சரி என்றும் தவறு என்றும் சொல்லும் உரிமை எனக்கு இல்லை... அந்த விவாத நிகழ்ச்சியில் பாதிக்கப்பட்டதாக நம்பிய இளைஞரை குறித்து எனக்கு தோன்றியதை எழுதினேன்" என்றும் சொன்னேன். மேலும் ஓரினச்சேர்க்கையை வெறுக்கவோ / ஆதரிக்கவோ செய்யும் அளவுக்கு எனக்கு அது பற்றிய ஆழமான அபிப்பிராயம் எல்லாம் கிடையாது. ஆனால் ஓரினச்சேர்க்கை உறவால் வாழ்க்கையின் பிற்பகுதியில் எந்த ஒரு பயனும் இல்லை என்பது எனது கருத்து. பிறகு வழக்கமாக எனது பதிவுகளை படித்துவிட்டு கருத்துகளை பகிர்ந்துக்கொள்வார்.

Radioரொம்ப நாள் ஆச்சு... பதிவு எழுதி! இந்த காலகட்டத்துல என்னோட கூகுள் ரேங்க் எல்லாம் கீழே இறங்கி போனதை கூட கவனிக்க முடியாத அளவுக்கு சமயப்பற்றாக்குறை. அப்படி என்ன வெட்டி முறிக்கிறேன்னு கேக்காதீங்க... அப்புறம் அழுதுடுவேன்... ஆமாம்! முன்னாடி எல்லாம் எதை பார்த்தாலும், படிச்சாலும் என்னோட நண்பர்கள் கிட்டே (அது நீங்க தாங்க) பகிர்ந்துக்கணும்னு எழுதுவேன்... கொஞ்ச நாளா மரத்துப்போச்சு. திரும்ப எழுதணும்னு நினைக்கிறப்போ என்ன எழுதறதுன்னு தெரியலை. சந்தியா கிட்டே சொன்னப்போ அவங்க "ரேடியோ" பத்தி எழுதுங்களேன்னு கரு எடுத்து குடுத்தாங்க. அதை டெவலப் பண்ணி உங்ககிட்டே பகிர்ந்துக்குறேன்.

My professional websiteஉங்களுக்கு நீங்கள் கல்லூரியில் படித்த Maslow theory of hierarchy நினைவிருக்கிறதா? மனிதனின் முதல் / அடிப்படை தேவை - வாழ்வாதாரம் சார்ந்த உணவு, உடை தேவைகள் பூர்த்தியடைந்த பிறகு அடுத்த கட்டமான உத்தியோகம், பணம் சார்ந்த தேவைகளை மனம் நாடுமாம். அதுவும் பூர்த்தியடைந்த பிறகு அங்கீகாரம், அதிகாரம் ஆகியவற்றில் மனம் செல்லுமாம். நமது வாழ்வின் ஒவ்வொரு செயலிலும் இந்த Hierarchy அல்லது படிக்கட்டு பின்னணியில் இருப்பதை பார்க்கலாம். படிகளை கடப்பதில் ஒவ்வொரு மனிதனுக்கும் வெவ்வேறு காலங்கள் ஆகலாம், அது அவருடைய மனநிலை மற்றும் தேவைகளை பொறுத்த விஷயம். எனது வாழ்வில் நானும் கிட்டத்தட்ட அந்த மாதிரியான ஒரு சந்தியில் நிற்கிறேன்.

Vaithy and me

வலைமனை பக்கம் வந்து மாதம் ஒன்று தாண்டியாயிற்று. எழுதமுடியாத அளவுக்கு busy என்றும் சொல்ல முடியாது. அதே சமயம் எழுதும் அளவுக்கு அனுபவங்கள் கிட்டவில்லை என்றும் சொல்லமுடியாது. காரணம் - பொன்னியின் செல்வன் ஐந்தாம் பாகம், முள்பாதை ஆகிய புத்தகங்கள் படித்தாயிற்று, மசினகுடி காட்டுக்கு ஒரு முறை சென்று வந்தாயிற்று, எனது desktop-போடு சண்டைபோட்டு Windows 7-க்கு upgrade செய்தாயிற்று. எனினும் எழுத ஒரு சோம்பேறித்தனம். எனது வேலையில் ஏற்பட்ட சலிப்பினால் ஒரு மாற்று career option-ஐ முயற்சித்துக்கொண்டிருப்பதும், என் மனம் முழுவதும் அதிலேயே சென்றிருப்பதும் ஒரு காரணம். இந்த மனித மனம் இருக்கிறதே அது கொஞ்சம் விசித்திரமானது தான். எப்போதும் ஒரு தேடலிலேயே ஓடிக்கொண்டு இருக்கிறது. “அப்பாடா” என்று அயர்ந்து உட்கார்ந்தால் துரு பிடித்துவிடுகிறது. நம்முடைய தேடல் இத்தோடு முடிந்துவிடும் என்று ஒவ்வொரு முறையும் நினைக்கிறது ஆனால் நடந்தபாடு இல்லை.

Buttu with Hutch dogபொதுவாக Indian parenting is overtly protective என்கிற அபிப்பிராயம் எனக்கு உண்டு. இது தலைமுறை சம்பந்தப்பட்ட விஷயம் என்று இவ்வளவு நாளாக நினைத்திருந்தேன். ஆனால் புட்டுவின் வருகைக்கு பிறகு எனக்கு ”இது தலைமுறை சம்பந்தப்பட்ட விஷயமல்ல மாறாக உணர்வு சம்பந்தப்பட்ட விஷயம்” என்று தோன்றுகிறது. இந்த protective குணங்கள் எல்லாம் காலப்போக்கில் தானாக வருவது என்று புரிந்து கொள்ள வாழ்க்கையில் அந்த கட்டத்துக்கு போகவேண்டியிருக்கிறது.

Vijay and meசில நேரங்களில் சில விஷயங்கள் ஏன் நடக்கின்றன என்று நமக்கு புரியாது ஆனால் அவை நடக்கும்போது அது நமக்கு மகிழ்ச்சியூட்டுவனவாக அமைந்துவிடுகிறது. சமீபத்தில் எனக்கும் அப்படி ஒரு சம்பவம் நடந்தது. எனது ஆஸ்திரேலியா வாழ் நண்பரை பற்றி சொல்லியிருக்கிறேன் அல்லவா? கடைசியாக அவர் கடந்த வருடம் சென்னைக்கு வந்தபோது எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். அதற்கப்புறம் அவரை எப்போது பார்ப்பேன் என்பது தெரியவில்லை. ஒருவேளை நான் ஆஸ்திரேலியா போனால் பார்க்கக்கூடும் என்று இருந்தோம். எனது Aussie PR வேலைகள் தடைபட்டு மீண்டும் கடந்த டிசம்பர் மாதம் தாக்கல் செய்யப்பட்டபோது ஆஸ்திரேலியா இன்னும் இரண்டு வருட தூரத்தில் இருப்பதாக தோன்றியது. திடீரென்று விஜய் நான்கு நாட்களுக்கு சென்னைக்கு அவரது பள்ளியின் alumni meeting-க்கு வருவதாக சொன்னபோது எனக்கு பயங்கர சந்தோஷம்.

Broken Marriageஅவன் பெயர் சேகர் என்று வைத்துக்கொள்வோம். அவனும் என்னுடைய அலுவலகத்தில் வேலை பார்க்கும் இளைஞன் தான். எனக்கு பிடித்த சக ஊழியர் வட்டாரத்தில் சேகரும் உண்டு. காரணம் சேகரின் சில குணநலன்கள் - மிக எளிமையானவன். அவனை பொறுத்தவரை WYSIWYG - What you see is what you get. Diplomatic-ஆக முன்னால் ””Hey Dude" என்று சிரித்துப் பேசிவிட்டு பின்னாலே “போறான் பாரு பா**ட்” என்று திட்டமாட்டான். உலகிலேயே இரண்டு வகையான மனிதர்கள் தான் உண்டு - அவன் நேசிப்பவர்கள் & அவன் நேசிக்காதவர்கள். அதனாலோ என்னவோ அவனுடைய நண்பர் வட்டம் மிக சிறியது. ஒரு வருடம் முன்பு தான் அவனுக்கு மீனாவுடன் கல்யாணம் ஆகியிருந்தது.

கல்யாண கலாட்டா - 1இது ஒரு புதிய Category - ஆக ஆரம்பிக்கிறேன். எனது பதிவுகளை தொடர்ந்து படித்து வருபவர்களுக்கு எனது வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையும் பிரதிபலிப்பதை உணரலாம். அந்த வகையில், திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆன நிலையில், திருமணத்தை பற்றி, என்னுடைய மற்றும் என்னை சுற்றி இருக்கும் நண்பர்களின் திருமண வாழ்க்கையை பற்றி நான் கவனித்ததை, எனது கருத்துகளை பதிய முற்படும் முயற்சி தான் இந்த category-ல் வரும் பதிவுகள். எந்த திருமணமும் Perfect இல்லை என்பது தான் நான் கற்றுக்கொண்ட முதல் பாடம். மிகவும் ideal திருமண வாழ்க்கை புத்தகங்களிலும், திரைப்படங்களில் மட்டுமே சாத்தியம். இத்தனையையும் மீறி எவரேனும் தங்கள் திருமண வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என்று சொன்னால் அவர்கள் fake செய்கிறார்கள் என்பதே உண்மை. அதற்காக பிரச்சினைகள் இருக்கும் திருமணங்கள் தோல்வி அடைந்தவை என்று அர்த்தமில்லை. மாறாக பிரச்சனைகளை தீர்க்க இருவரும் முழு மனதோடு முயலும் திருமணங்களே வெற்றி பெறுபவை. அந்த வகையில் என்னால் பிரச்சினை என்ற கண்டுபிடிக்கப்பட்ட சில சம்பவங்களை சொல்கிறேன்.

Aadhiஎங்கள் புட்டுவை நாங்கள் செல்லமாக “குட்டி பூ” என்று கூப்பிடுவது உண்டு. அவன் பிறந்த சமயத்தில் அழகிய புஷ்பம் போல மெலிதாக, அழகாக இருந்ததால் அப்படி கூப்பிட ஆரம்பித்தோம். அப்படி கூப்பிடுவது இன்னும் தொடர்கிறது. இதில் ஒரு நகைச்சுவையான சம்பவம் நடந்தது. அகிலாவின் அக்கா ஒரு நாள் நாங்கள் அவனை ”குட்டிப்பூ” என்று அழைப்பதன் காரணத்தை துப்பறிந்து கண்டுபிடித்துவிட்டாராம். நானும் அகிலாவும் கல்யாணம் ஆனதும் ஒன்றாக முதலில் பார்த்த படம் “பூ”. அதன் ஞாபகமாக நாங்கள் புட்டுவை “குட்டிப்பூ” என்று அழைக்கிறோமாம். எனக்கு சிரிப்பாக வந்தது. ஒருவேளை நாங்கள் அதே சமயத்தில் வெளிவந்திருந்த “வாரணம் ஆயிரம்” படத்தை முதலில் பார்த்திருந்தால் அவரது Logic-ல் ஆதியை “குட்டிப்பூ”வுக்கு பதிலாக ”குட்டி யானை” என்று கூப்பிட வேண்டியிருந்திருக்குமோ? (வாரணம் = யானை) புட்டூ... Great escape!!! அப்புறம்... புட்டுவின் அழகு அவன் கண்கள். “வித்யா பாலனுடைய கண்களுக்கு பிறகு நான் பார்த்த பேசும் / 'expressive" கண்கள் புட்டுவுடையது” என்று அடிக்கடி சொல்வதுண்டு. அப்படிப்பட்ட வித்யாவால் சமீபத்தில் ஒரு சின்ன ஆறுதல்.