Ramblings
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

Modern Girlசில வாரங்களுக்கு முன்பு என் முன்னாள் சகஊழியர் அனீஸ் தான் துபாய்க்கு இரண்டாவது implementation-க்கு செல்வதாக கிளம்புவதற்கு முதல் நாள் அழைத்து சொன்னார். அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை சொன்னேன். சமீபத்தில் என் அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் பேச்சுவாக்கில் என் முன்னாள் கம்பெனியில் இரண்டாவது implementation project கிடைத்து வேலையை துவங்கிவிட்டார்கள் என்று சொன்னேன். அதற்கு ஒரு ஊழியர் “என்னங்க... இன்னும் கொஞ்ச நாள் அந்த நிறுவனத்திலேயே இருந்திருந்தீர்கள் என்றால் இரண்டாவது implementation experience-ம் கிடைத்திருக்குமே. கோட்டை விட்டுட்டீங்களே!” என்று ஆதங்கப்பட்டார். என்னை விட அவர் அதிகமாக ஆதங்கப்பட்டது எனக்கு கொஞ்சம் ஆச்சரியமாகவே இருந்தது. எனக்கு அது அவ்வளவு பெரிய இழப்பாக தோன்றவில்லை. இதன் விளைவு தான் இந்த “ஒருவேளை..” பதிவு, மேலும் இன்னொரு ”ஒருவேளை” அனுபவத்தையும் சேர்த்து.


முன்பே சொன்னது போல எனக்கு கல்யாணம் ஆன கொஞ்ச நாட்களிலேயே என்னுடைய முதல் implementation-க்காக துபாய் போய் ஆறு மாதம் இருந்துவிட்டு வந்தேன். என்னுடையது பெரியவர்களால் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணம். எனவே அந்த ஆரம்ப கால அன்னியோனியம் இழைந்தோடும் தருணங்களை அனுபவிக்க முடியவில்லை. திரும்பி வந்து மூன்று மாதங்களில் எல்லாம் புட்டு சிங் (எங்கள் குழந்தை ஆதித்யா) பிறந்துவிட்டான். Implementation experience எப்போது வேண்டுமானாலும் கிடைக்கலாம் ஆனால் வாழ்க்கையின் முக்கியமான தருணங்களுக்கு “Ctrl+Y" (மீண்டும் செய்ய) வசதி இல்லை. இப்போது எனக்கு ”புட்டு சிங்” வளர்வதை, சிரிக்க பழகிக்கொள்வதை, உறங்கும் அழகை பார்ப்பதை விட வேறு எந்த இன்பமும், அனுபவமும் பெரிதாக தோன்றவில்லை. நான் வழக்கமாக சொல்வது ஒன்று தான் - “வேலையில் நாம் இல்லையென்றால் அந்த வேலையை செய்ய வேறு ஆள் கிடைப்பார்கள். We are easily replaceable at work. ஆனால் நம்முடைய சொந்த வாழ்க்கையில் நம்முடைய பங்கை, நாம் தான் வாழவேண்டும். நமக்கு பதிலாக வேறு ஆள் போடமுடியாது”. அதனால் தான் நான் எப்போதும் என் சொந்த வாழ்க்கைக்கு முதலிடம் கொடுக்கிறேன். மேலும் நான் அதே கம்பெனியில் இருந்திருந்தாலும் என்னை அனுப்பி இருப்பார்கள் என்பது நிச்சயமில்லை. அப்படியே அனுப்ப முன்வந்திருந்தாலும் ”தற்போது விருப்பமில்லை” என்று சொல்லும் சங்கடத்தை தவிர்த்ததும் சந்தோஷமே. என் நிகழ்காலம் மட்டுமே நிஜம் மற்றும் இனிமையானதும் கூட. கடந்த காலத்தில் உழலும் பழக்கமோ, எதிர்காலக் கனவில் வாழ்ந்து நிகழ்காலத்தின் இனிமையை அனுபவிக்க தெரியாத பழக்கமோ இல்லாததால் தான் என்னால் அந்த "Unconditional Happiness" எனக்கூடிய நிபந்தனையற்ற சந்தோஷத்தில் வாழமுடிகிறது. அதனால் நான் ”ஒருவேளை அங்கேயே இருந்திருக்கலாமோ” என்ற ஆதங்கம் எல்லாம் இல்லை. எனினும் இது தனிமனிதர்களுடைய் priorities-ஐ பொறுத்த விஷயம் ஆதலால் என் கருத்தை யார் மீதும் திணிக்க விரும்பவில்லை.

இதுவும் இரண்டு வாரங்களுக்கு முன்பு நிகழ்ந்த சம்பவமே. டவுன் பஸ்ஸில் போய்க்கொண்டிருந்தபோது கண்ட காட்சி. பெண்களுக்கான இருக்கையில் ஒரு சின்ன பையன் (8 / 10 வயதிருக்கும்) அமர்ந்திருந்தான். பக்கத்து சீட்டில் அவன் அம்மா (என்று நினைக்கிறேன்) அமர்ந்திருந்தார். அடுத்து வந்த பேருந்து நிறுத்தத்தில் ஒரு பெண்மணி ஏறினார். பேருந்தில் ஏறியதிலிருந்தே அவர் அலப்பரை தாங்கவில்லை. மொபைலில் சத்தமாக பேசிக்கொண்டு நின்றுக்கொண்டிருந்தவருக்கு அந்த பையனின் இருக்கை உறுத்தியது. ‘டேய் எழுந்திருடா!” என்று அந்த சிறுவனை அதட்டினார். அந்த பையன் அவன் அம்மாவை பார்க்க, அந்த பெண்மணிக்கு இன்னும் கோபம் அதிகமானது. கத்தி கலாட்டா பண்ணி அந்த பையனை இருக்கையிருந்து எழுப்பிவிட்டு உட்கர்ந்து பக்கத்தில் இருப்பவர்களை பற்றி கவலைப்படாமல் கத்திப்பேசிக்கொண்டு இருந்தார்.

{mosimage}நீங்கள் யாராவது கவனித்திருக்கிறீர்களா? பஸ்ஸில் ஒரு கர்ப்பினிப் பெண் ஏறினாள் எழுந்து இடம் கொடுப்பது ஆண்களே. எங்கேனும் முதலில் ஒரு பெண் எழுந்து இடம் கொடுப்பதை பார்த்திருக்கிறீர்களா? ஆனால் ஆண்களுக்கு பெண்கள் மீது இரக்கம் இல்லை என்று முதலில் கத்தி தங்களை காப்பாற்றிக்கொள்வார்கள். சம உரிமை என்று வாய் கிழிய கத்திவிட்டு பின்பு தனி வசதி வேண்டும் என்று தங்கள் sexuality-ஐ உபயோகப்படுத்திக் கொள்வது பெண்களின் வழக்கம். இதுவாவது பரவாயில்லை, நான் சமீபத்தில் பாண்டிக்கு செல்ல ரயில்நிலையத்தில் வரிசையில் நின்றுக்கொண்டு இருந்தேன். ஒரு இளம்பெண் டிக்கெட் கவுண்ட்டருக்கு அருகே (வரிசையில் நில்லாமல்) வரிசையில் நின்றுக்கொண்டிருந்தவர்களிடம் “எனக்கு ஒரு டிக்கெட் எடுத்து தர முடியுமா?” என்று கேட்டுக்கொண்டிருந்தாள். வரிசையில் நின்றுக்கொண்டிருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தபோதும் அந்த பெண் அசரவில்லை. விடாமல் கேட்டுக்கொண்டிருந்தாள். எனக்கு பயங்கர ஆத்திரம் வந்தது. அவள் தான் பெண் என்பதால் ஒன்று பரிதாபம் ஏற்படுத்தியோ அல்லது தன் இளமையை உபயோகப்படுத்தி sexuality-ஐ advantage எடுத்துக்கொள்ள முயன்றுக்கொண்டிருந்தது கேவலமாக இருந்தது. என் வரிசை வந்தபோது அந்த பெண் கையை நீட்டியபோது “நான் டிக்கெட் எடுத்து தர்றேன்.. நீ என்னோடு அந்த இருட்டில் ‘ஒதுங்குவியா’?” என்று கேட்க தோன்றியது. அவள் தன் sexuality-ஐ உபயோகப்படுத்திக்கொள்ள முன்வந்தால் ஆண்கள் அந்த நிலைமையை உபயோகப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் வாதம். ஆனால் நான் கேட்கவில்லை. ஒருவேளை அந்தப் பெண் அதற்கும் சரி என்று சொல்லிவிட்டால்...?

இது போல பெண்களை பல இடங்களில் பார்க்கலாம் - தியேட்டர் வாசலில், வங்கிகளில்... கொஞ்சம் டைட்டான டி-ஷர்ட்டும், ஜீன்ஸும் போட்டுக்கொண்டு, அல்லது நவநாகரீக உடையில் நுனி நாக்கு ஆங்கிலத்தில் கேட்பார்கள். அதுவும் ஆண்களிடம் மட்டும் தான் கேட்பார்கள். பெண்களிடம் கேட்டாள் பருப்பு வேகாது என்று அவர்களுக்கே தெரியும். அவர்களுக்கு மட்டும் தான் அவசரமா? மற்றவர்கள் எல்லாம் பொழுது போகாமல் உட்கார்ந்துக்கொண்டு இருக்கிறார்களா என்ன? அப்படியே வேலை செய்து கொடுத்தாலும் அவர்கள் எங்கேனும் ஐஸ் கிரீம் கடையிலோ அல்லது மொபைலிலோ அரட்டை அடித்துக் கொண்டு இருப்பார்கள். பதிலுக்கு ஆண்கள் வழிந்தால் பத்தினி போல “உனக்கு அக்கா தங்கை இல்லையா?” என்று சீறி விழுவார்கள். நீங்கள் உங்களை கண்ணியமாக நடத்திக்கொள்ளுங்கள் முதலில்... மற்றவர்கள் தானாகவே மரியாதை கொடுப்பார்கள்.

{oshits} வாசகர்கள் இந்த பதிவை படித்துள்ளனர்.

Related Articles