Kanavu thozhirchalaiசுஜாதாவின் இந்த திரையுலகத்தில் நடப்பதாக எழுதப்பட்ட நாவலை முதலில் படிக்க கொஞ்சம் கசப்பாக தான் இருந்தது. அதனால் தான் முதல் அத்தியாயத்தை மட்டும் படித்துவிட்டு அப்படியே விட்டுவிட்டேன். தன் நாவலின் முதல் அத்தியாயத்தை திரையுலக பிரமுகர்களான இயக்குநர் மகேந்திரன், நடிகை லட்சுமி ஆகியோருக்கு படிக்க கொடுத்துவிட்டு, அதை பற்றிய தன்னுடைய உரையாடலை முன்னுரையில் போட்டிருக்கிறார் சுஜாதா. ’சினிமாவுக்கு சென்ஸார் அவசியமா?’, ‘அமெரிக்காவில் உள்ளது போல நீலப்படங்களை திரையிட தனி தியேட்டர்கள் வேண்டும்’ ஆகிய வழக்கமான வாதங்களை கொண்ட உரையாடல் என்றபோதும், எழுத்தில் கவர்ச்சியாக இருப்பது திரையில் ஆபாசமாக தோன்றும் என்றும், எழுத்தும் திரையும் வெவ்வேறு ஊடகங்கள் என்று நினைவில் கொண்டபிறகே படைப்புகளை படைக்கவேண்டும் என்ற ஒரு சுவாரசியமான வாதத்தை முன்வைக்கிறார். ஒரு எழுத்தாளருக்காக சென்னை அண்ணா சாலையில் கட்-அவுட் வைக்கப்பட்டது இந்த ஆனந்த விகடனில் வெளியான இந்த நாவலுக்காக தானாம். ‘கனவு தொழிற்சாலை’ எழுதப்பட்ட 70 களின் இறுதியில் அது path breaking-ஆக இருந்திருக்கலாம் ஆனால் இப்போது அது பழகிவிட்டது.

சுஜாதாஇந்த புத்தகத்தை பற்றி சொல்லும் முன்பு எனக்கு சொல்லத்தோன்றியது ஒன்றே ஒன்று. இயக்குநர் மணிரத்னத்துக்கும் சுஜாதாவுக்கும் பொதுவான ஒரு விஷயம் - இருவருடைய படைப்புக்களும் காலத்தை மீறி நிற்பவை. அதனால் தானோ என்னவோ இருவருக்கும் ”ரோஜா, பம்பாய், தில் சே..., கன்னத்தில் முத்தமிட்டால்..” என நன்றாக பொருந்திப்போனது. சுஜாதாவின் 'கொலையுதிர்காலமு'ம் அந்த வரிசையில் இடம்பெற்றதே. இது எழுதப்பட்டது 1981-ல் என்றபோதும், 28 ஆண்டுகளுக்கு பிறகு படிக்கும்போது அடுத்த நூற்றாண்டுக்கும் பொருந்துவதாக இருப்பது இதன் சிறப்பு. வழக்கம் போல ஒரு தொழிநுட்பத்தை எடுத்துக்கொண்டு சுஜாதாவால் அதை சுற்றி பின்னப்பட்ட ஃபார்முலா கதை. ஆச்சரியம் என்னவென்றால் அந்த தொழில்நுட்பம் இன்றும் வளர்ந்து வரும் நிலையிலேயே இருக்கிறது என்பது தான். அப்படியென்றால் சுஜாதா தொழில்நுட்பத்தை பொறுத்தவரை எத்தகைய தொலைநோக்கு பார்வை கொண்டவர் என்று யூகித்துக்கொள்ளலாம். இருப்பினும் ‘கொலையுதிர்காலம்’ஒரே நிகழ்வை விஞ்ஞானத்தையும், பிசாசுகளை மையப்படுத்தும் பைசாசத்தையும் கொண்டு விவரிக்க முற்பட்டு அதை படிப்பவர்களின் முடிவுக்கே விட்டிருப்பதிலும் ஒரு cult status-ஐ அடைகிறது. தங்கள் நம்பிக்கையை படிப்பவர்கள் ஏற்றுக்கொள்ளலாம். இத்தனை பீடிகைகளுக்கு உள்ளாகும் ‘கொலையுதிர் காலம்’ தான் என்ன?

பத்து செகண்ட் முத்தம்டில்லியில் நடந்த 1983 ஆசிய விளையாட்டு போட்டியின் போது சுஜாதா எழுதிய இந்த கதை ஒரு காதல் கதை அல்ல. உலகளாவிய பந்தயங்களில் கலந்துக்கொள்ளும் விளையாட்டு வீரர்கள் தங்களுக்கு கிடைக்கும் அந்த சில விநாடிகளுக்காவே தங்களுடைய வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணிக்கிக்கின்றனர். அவர்களுடைய சிந்தையும், உடம்பும் விளையாட்டையன்றி வேறு எதுவும் யோசிப்பதில்லை. அப்படிப்பட்ட ஒரு பெண் ரசி என்கிற தமிழரசி, தன் கோச் மற்றும் மாமாவான ராஜ்மோகனின் மேற்பார்வையில் உலக சாதனையை நிகழ்த்தும் முயற்ச்சியில் இருக்கிறாள். இடையில் ரிப்போர்ட்டர் மனோ மூலம் அவள் மனதில் காதல் நுழைகிறது. ராஜ்மோகனின் அளவுகடந்த கண்டிப்பும், சாதனை நிகழ்த்தும் முனைப்பும் காயப்படுத்தியிருந்த தமிழரசியின் மனதுக்கு இந்த காதல் அமிர்தமாக இனிக்கிறது. விளையாட்டிலிருந்து கிட்டத்தட்ட ஓய்வு பெற்றுவிடும் மனநிலைக்கு போகிறாள் ரசி. தடுமாறிய ரசியின் விளையாட்டு ஆர்வத்தை மீண்டும் விளையாட்டுக்கு திருப்ப ஒரு பெறும் விலை கொடுக்கப்படுகிறது. மொத்தமே 2-3 நாட்களில் நடப்பதாக எழுதப்பட்ட இந்த நாவல் கீழே வைக்க தோன்றாத அளவுக்கு விறுவிறுப்பாகவும், மனதை தொடுவனவாகவும் உள்ளது. விசா பதிப்பாளர்கள் வெளியிட்டுள்ள இந்த 104 பக்கங்களும், ரூ. 50/- விலையும் கொண்ட புத்தகம், நிச்சயம் உங்களை கவரும்.

24 ரூபாய் தீவுசுஜாதாவின் '24 ரூபாய் தீவு' - ஒரு த்ரில்லர் / துப்பறியும் / தனி மனித துயரம் என்று எந்த வகையிலும் 'categorise' செய்ய முடியாத அற்புதமான நாவல். இது குமுததில் தொடர்கதையாக வெளிவந்த போதே கன்னடத்திலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றதாம். அதை தொடர்ந்து கன்னடத்தில் 'ஒண்டித்வளி' என்ற பெயரில் ஏகப்பட்ட வணிகரீதியான மாற்றங்களுக்கு உட்பட்டு திரைப்படமாக எடுக்கப்பட்டு தோல்வியடைந்ததாம். இந்த நாவலை 'அப்படியே' எடுத்தால் நன்றாக இருக்கும் என்று கமல்ஹாஸன் அடிக்கடி சொல்வார் என்று சுஜாதா தன் நாவலின் முன்னுரையில் எழுதியிருக்கிறார். 120 பக்கங்களில் ஒரு நிருபரின் அபாயகரமான வாழ்க்கையை அச்சு அசலாக நம் கண் முன்னாடி கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார் சுஜாதா. நம்புங்கள்... இந்த நாவலை படிப்பது ஒரு roller-coaster ride-க்கு சமானம்.

{mosimage}

பக்கம் பக்கமாக எழுதப்படுபவையே இலக்கியம், மக்களிடம் எடுபடும் என்ற மாயையை தன் நேரடியான எழுத்துக்களால் முறியடித்து தமிழ் எழுத்துலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவர் சுஜாதா. இன்றும் பல இளைஞர்களின் ஆதர்ச நாயகனாக விளங்குபவர் சுஜாதா. இவர் பேரை போட்டாலே படித்த இளைஞர்கள் யோசிக்காமல் புத்தகங்களை அள்ளிக்கொண்டு போகிறார்கள் என்பது பதிப்பாளர்களின் கருத்து. அத்தகைய ஒரு role model இன்று நம்மைவிட்டு எட்டாத உயரத்துக்கு போய்விட்டார் என்பது உண்மையிலேயே வருத்தமான விஷயம். இன்று காலை ஆஃபீஸுக்குள் நுழைந்தவுடனே திரு. சுஜாதா நம்மை விட்டு போய்விட்டார் என்பதை கேள்விப்பட்டேன். ஏதோ ஒரு சோகம் நெஞ்சை அழுத்தியது. அவர் ஆத்மா சாந்தியடைய என் பிரார்த்தனைகள். என்னை போன்ற வாசகர்களுக்கு உங்கள் மறைவு ஒரு ஈடுசெய்ய முடியாத இழப்பு. ஏதோ ஒரு வகையில் உங்கள் பாதிப்பு எங்கள் வாழ்க்கையில் எப்போதும் இருக்கும் - உங்கள் எழுத்துக்கள் மற்றும் திரைப்படங்கள் மூலமாக..

பிரிவோம் சந்திப்போம்மனதில் நின்ற, higher benchmarks ஏற்படுத்திய ஒரு நாவலுக்கு sequel எனப்படும் இரண்டாம் பாகம் எழுதுவது எவ்வளவு கஷ்டம் என்பதை எண்டமூரியிடம் கேளுங்கள். மனிதர் 'துளசிதளத்'தில் score செய்து, அதை 'மீண்டும் துளசிதளத்'தில் தொலைத்தார். இப்போது சுஜாதாவின் 'பிரிவோம் சந்திப்போம்' இரண்டாவது பாகத்தை படிக்கலாமா? வேண்டாமா? என்று ஏகப்பட்ட குழப்பங்கள். கடைசியாக 'சரி! புத்தகத்தை வாங்கிவிட்டோம் எனவே படித்து தான் வைப்போமே' என்று படிக்க ஆரம்பித்தேன். எனது 'worst fears come true' போல ஆரம்பித்த நாவல், கடைசியில் மனதில் சிம்மாசனமிட்டு உட்கார்ந்து கொண்டது. எனக்கு முன்பு என் அம்மா இதனை படித்துவிட்டார். எனவே அவரிடம் நிறைய இதனை பற்றி பேசினேன். A worthy sequel for a successful prequel.

சுஜாதாOne thing leads to another... and we end up experiencing new pleasures.. சுஜாதாவின் 'பிரிவோம் சந்திப்போம்' நாவலின் முன்னுரையில் அதன் நாயகி நிதியை 'பிரிவோம் சந்திப்போம்' மதுமிதாவுடன் ஒப்பிட்டு இருப்பார். எனவே கோவையில் புத்தகம் வாங்க போனபோது 'பிரிவோம் சந்திப்போம்'-இன் இரண்டு பாகங்களையும் வாங்கினேன். சுஜாதாவிடம் இருந்து ஒரு hard hitting stark நாவலை எதிபார்த்த எனக்கு இனிய அதிர்ச்சி. 24 வயதில் வரும் முதல் காதலை அதன் அப்பாவித்தனம் குறையாமல், பிரமிப்பு நீங்காமல், மிக அழகாக, தெளிந்த நீரோடையின் நடையை போல சலசலத்திருக்கிறார்.

இரண்டாவது காதல் கதைஇது வைத்தியிடம் இருந்து தொற்றிக்கொண்ட பழக்கம். ஏதெங்கிலும் பயணத்தின் நினைவாக புத்தகங்கள் வாங்கி அந்த பயணத்தை பத்திரப்படுத்துவது. இந்த முறை கோவை சென்றபோது சென்ட்ரலில் உள்ள ஹிக்கின்போத்தம்ஸில் வாங்கியது சுஜாதாவின் 'இரண்டாவது காதல் கதை'. இதன் நடை சுஜாதாவின் 'அனிதாவின் காதல் கதை'யை ஒத்திருந்தாளும், இம்முறை கதையின் களம் Board Room Politics-ல் மையம் கொண்டுள்ளது. வாழ்க்கையை பட்டாம்பூச்சியை போல சிறகடித்துக்கொண்டு மகிழ்ச்சியாக நடமாடிக்கொண்டிருக்கும் நிதியின் வாழ்க்கையில் காதல் நுழைகிறது, கூடவே எதிர்ப்புக்களும். வாழ்க்கையை போல கட்டுப்பாடான ஆசானும் இல்லை. நிதியின் வாழ்க்கையில் இரண்டாம் காதல் நுழைகிறது. வழக்கமான தனது விறுவிறுப்பான நடையில், சுஜாதாவின் முத்தியரையோடு ஜிவ்வென பறக்கிறது இந்த 'இரண்டாவது காதல்'.

சுஜாதாSujatha does it again. This time he takes up the problems urban college goers have and had portrayed it in a realistic manner that makes you realise with the brutal facts. As the name suggests it is about the pleasure of touch, one night stands, that brings along with complications like unwanted pregnancy, Sexually transmitted diseases (STD) and its implications over the psyche of the concerned individuals. The best of a Sujatha's novel is that the incidents are not sugar coated but offered as a bitter pill tough to swallow. Here also Sujatha does the same with the protagonists Akalya, Sridhar & Raghu.

அனிதாவின் காதல்கள்Anitavin Kaadhalagal, which translates into Anita's affairs, may sound lurid initially but once you complete it you find the title wholly misleading. Written by Sujatha, it portrays the love story of a simple vulnerable, young girl who has been used to tranquil and calm living style. When she happens to meet the man who sweeps the ground off her feet with love the world around her changes but she couldn't. By the time she could adjust herself to that hectic pace, a rough wave topples her life and she is left stranded. Meanwhile she comes across four young men who are desperate to get her and their proposals.