15
Fri, Dec
0 New Articles
முள் பாதை

முள் பாதை

முள்பாதை - தெலுங்கில் யத்தன்னபூடி சுலோசனாராணி அவர்கள் மீனா என்ற பெயரில் எழுதிய நாவல் தமிழில் சமீபத்தில் கௌரி கிருபானந்தன் அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. இது தூர்தர்ஷனில் செவந்த் சேனல் நிறுவனத்தாரால் மறக்கமுடியவில்லை-2 என்ற பெயரில் தொலைகாட்சித் தொடராகவும் வந்தது. இது தெலுங்கில் 1972-ல் மீனா என்ற பெயரில் நடிகை விஜயநிர்மலா அவர்களால் இயக்கி நடித்து வெளிவந்ததாம்.

mulpaadhai

அத்தை மறுநாள் புதுமணத் தம்பதிகளை மணையில் உட்கார வைத்து சத்யநாராயண பூஜை செய்ய வைத்தாள். ஊரில் எல்லோரையும் சாப்பிட அழைத்தார்கள். முதல்நாள் வண்டியை விட்டு இறங்கிய பிறகு பூஜை நடக்கும் வரையில் கிருஷ்ணன் என் கண்ணில் படவே இல்லை.

mulpaadhai

மூன்று நாட்கள் வேகமாக கழிந்துவிட்டன. மாமி, மாமாவின் அன்பான உரையாடலில், மதூவின் நட்புகலந்த பேச்சில் எங்களுடைய திருப்பதி பயணம் ஜாலியாகக் கழிந்தது. மாமி, மாமா, மதூ சென்னையில் இறங்கிக் கொண்டார்கள். மதூ எங்களை காரிலேயே மெலட்டூருக்கு போகச்சொல்லி வற்புறுத்தினான்.