24
Thu, Aug
0 New Articles

mulpaadhai

அத்தை மறுநாள் புதுமணத் தம்பதிகளை மணையில் உட்கார வைத்து சத்யநாராயண பூஜை செய்ய வைத்தாள். ஊரில் எல்லோரையும் சாப்பிட அழைத்தார்கள். முதல்நாள் வண்டியை விட்டு இறங்கிய பிறகு பூஜை நடக்கும் வரையில் கிருஷ்ணன் என் கண்ணில் படவே இல்லை.

mulpaadhai

மூன்று நாட்கள் வேகமாக கழிந்துவிட்டன. மாமி, மாமாவின் அன்பான உரையாடலில், மதூவின் நட்புகலந்த பேச்சில் எங்களுடைய திருப்பதி பயணம் ஜாலியாகக் கழிந்தது. மாமி, மாமா, மதூ சென்னையில் இறங்கிக் கொண்டார்கள். மதூ எங்களை காரிலேயே மெலட்டூருக்கு போகச்சொல்லி வற்புறுத்தினான்.

mulpaadhai

கிருஷ்ணன் ஒரு அடி முன்னால் வைத்து அம்மாவின் கையை பலமாக பற்றிக் கொண்டான். "மாமி! மீனாவின் உடல் மீது இன்னும் ஒரு அடி விழுந்தால் கூட மரியாதையாக இருக்காது."
"வாயை மூடு!" அம்மா அவனை ஒரே தள்ளாக தள்ளிவிட்டாள். விரலை நீட்டி வாசலை காண்பித்துக் கொண்டே "போய்விடு. உயிர் மீது ஆசை இருந்தால், என் வேலைக்காரர்கள் உன்னை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளும் முன் இங்கிருந்து போய்விடு" என்று கத்தினாள்.

mulpaadhai

பொல பொலவென்று விடியும் போது மெல்லிய திரை போல் தூக்கம் என்னைத் தழுவியது. கொஞ்ச நேரம் தூங்கியிருப்பேனோ என்னவோ. பேச்சு சந்தடி கேட்டது.
"அக்கா... அக்கா..." என்ற குரலும், யாரோ ஓடிவரும் சத்தம் கேட்டதும் திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தேன். என் எதிரே வெளளை நிற கௌன் அணிந்துகொண்டு ஸ்வீட்டீ நின்றிருந்தாள். என்னைப் பார்த்ததும் "அக்கா!" என்று ஓடி வந்து என் கழுத்தை கட்டிக் கொண்டாள். ஸ்வீட்டீ என்னுடைய ஒன்று விட்ட சித்தியின் மகள். சித்தப்பா நெய்வேலியில் பெரிய வேலையில் இருந்தார். ஸ்வீட்டீயும் என்னைப் போலவே சித்திக்கு ஒரே மகள். சின்ன வயதில் பரங்கிப் பழம் போல் இருந்ததால் அம்மா அவளை ஸ்வீட்டீ என்று அழைத்தாள். அவள் பெரியவள் ஆன பிறகும் அதே பெயர் நிலைத்துவிட்டது. வசுந்தரா என்ற பெயர் இருப்பது யாருக்குமே தெரியாது. இப்போ அவளைப் பார்க்கும் போது ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. ஏற்கனவே பூசிய உடல்வாகு. இப்போ காற்றடித்த பலூன்போல் உப்பிவிட்டதோடு கழுத்து இருப்பதே தெரியவில்லை. பெரிய சைஸ் மூக்குக் கண்ணாடி அணிந்திருந்தாள்.

mulpaadhai

காலையில் பெரிய பெரிய சட்டுவங்களும், கரண்டிகளுமாக நான்கு சமையல் காரர்கள் வந்து சேர்ந்ததும் வீட்டில் சந்தடி தொடங்கிவிட்டது. நாளை நடக்கவிருக்கும் நிச்சயதார்த்தத்திற்காக இன்றே வீட்டில் பட்சணங்களை, இனிப்பு வகைகளை தயாரிக்க அம்மா முடிவு செய்தாள். சோபாவில் படுத்திருந்த நான் சோம்பலை முறித்துக் கொண்டே எழுந்து கொண்டேன். தலைமை சமையல்காரர் ஜமீந்தார் வீட்டுக் கல்யாணத்தில் தான் சமைத்தபோது பாராட்டி தங்கப்பதக்கம் கொடுத்த கதையை சொல்லிக் கொண்டிருந்தார்.