24
Thu, Aug
0 New Articles
Friday, 02 December 2016 09:59

ஆ...! - 03

Written by

ஆ...!

டாக்டர் கொடுத்த ஊசியில் தூக்கம் இருந்திருக்க வேண்டும். போட்டதும் கால் மணிக்குள் ஆளை அசத்தி விட்டது. நிம்மதியாக கனவில்லாமல் தூங்கினேன். என்ன. அங்கங்கே கொஞ்சம் கக்கலும் கரைசலுமாகப் பிம்பங்கள் தெரிந்தன. அமுக்குவான் வந்தது. திமிறிக் கொண்டு விடுபட்டேன். காலை கண்களுக்குள் வெயில் பரவ, தேவகி ஜன்னல் கதவைத் திறந்தாள். என்னருகில் வந்து கழுத்தைத் தொட்டுப் பார்த்து "சரியாப் போச்சு இல்லயா?" என்றாள்.

Friday, 02 December 2016 09:52

ஆ...! - 02

Written by

ஆ...!

சென்ற அத்தியாயத்தில்: அதைக் கனவா, குரலா என்று நான் இன்னும் தீர்மானிக்கவில்லை. என் பெயர் தினேஷ்குமார். கணிப்பொறி இயலில் எம்.எஸ். திருமணம் தேவகி என்கிற பெண்ணுடன், நாற்பத்தெட்டு செகண்டில் தீர்மானித்தது. நல்ல வேலை, நல்ல பெண்டாட்டி, நல்ல ரசனை எல்லாம் இருந்தும், போன சனிக்கிழமை தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தேன். அதன் முழு வர்ணனை சென்ற அத்தியாயத்தில் அதன் காரணத்தை ஆராயும்பொருட்டு டைரி எழுத ஆரம்பித்தேன் முதலில் என் மண்டைக்குள் எப்போது குரல் கேட்டது?. ஷெல்லியின் வரிகளிலிருந்து தான் துவங்கியதாக ஞாபகம்  Such Harmonious Madness! வீட்டில் தனியாக இருக்கும்போது அந்தக் குரல் என்னை மாடிக்கு அழைத்தது. போனால் பாரப்பெட் கவரில் நிற்கச் சொன்னது. நின்றால்...குதி"

Friday, 02 December 2016 09:45

ஆ...! - 01

Written by

ஆ...!

வாழ்க்கையில் சில விஷயங்கள் ஓசைப்படாமல் அறிமுகமாகின்றன. சில திருப்பங்கள் அறிவிப்பில்லாமல் நுழைகின்றன. சில மாறுதல்கள் அனுமதியில்லாமல் தம்மை நுழைத்துக்கொண்டு விடுகின்றன. சில ரத்தங்கள் சத்தமில்லாமல் சிந்துகின்றன.

பருவங்கள் மாறுவதுபோல் உருவங்கள் மாறுகின்றன. நம்பிக்கைகள் நாளைய சூரியோதயத்துடன் விழுந்து விடுகின்றன. பக்தி நாஸ்திகமாகிறது. தன்னம்பிக்கைகள் பயமாகின்றன.

appusami

"கொம்பைச் சீவறானா? எதுக்குடா, ரசம்?" பதறினார் அப்புசாமி.

ரசகுண்டு சுவாரசியமாகத் தட்டியில் எழுதிக்கொண்டே சந்தேகம் கேட்டான்.

"ஏன் தாத்தா, 'வீர'வுக்கு 'ற' வா? 'ர' வா?"

appusami

அப்புசாமி இரண்டு மூன்று நாளாகவே மனைவியைப் பலவிதமான கோணங்களில் எட்ட இருந்து ரகசியமாகவும் வெளிப்படையாகவும் கவனித்துக் கொண்டிருந்தார்.

"வாட் ஹாப்பண்ட் டு யூ... ரெண்டு நாளாக உங்கள் பார்வையே சரியில்லை. எதையோ பார்த்துப் பயந்துகிட்ட மாதிரி முழிக்கிறீர்கள ?" என்றாள் சீதாப்பாட்டி. "என்னவாவது வம்புகிம்பிலே மாட்டிக் கொண்டிருக்கிறீர்களா? யாருக்காவது பைசா தரணுமா?"