Sidebar

26
Sat, May
0 New Articles
Friday, 02 December 2016 10:47

ஆ...! - 08

Written by

ஆ...!

(ஒர் இடைக்குறிப்பு: வாசகர்கள் சிலர் தமக்கும் நம் கதாநாயகன் போல மண்டைக்குள் குரல் கேட்பதாகவும், 'அதற்கு நிவாரணம் கதை முடிவதற்குள் கிடைக்கப்போகிறதா அல்லது எந்த டாக்டரிடம் காட்ட வேண்டும், மருந்து என்ன? என்று கேட்டு கடிதம், டெலிபோன் மூலம் விசாரிக்கிறார்கள். இது கற்பனைக் கதை. நான் மனோதத்துவனோ, எதிர்காலனோ எதுவும் இல்லை. அதனால் இந்தக் கதையில் நிவாரணம் எதிர்பார்க்காதீர்கள். குரல் கேட்பவர்கள் தயவுசெய்து அருகாமையில் உள்ள சைக்கியாட்ரிஸ்டுகளைப் பாருங்கள். நான் எழுதும் மருந்து மாயங்களை டாக்டர் அனுமதியின்றி விழுங்கி கைகால், உதடு முதலியன நடுங்கத் துவங்கினால் கண்டிப்பாக அதற்கு நான் பொறுப்பல்ல)

Friday, 02 December 2016 10:44

ஆ...! - 07

Written by

ஆ...!

'ஜயலட்சுமி டீச்சர் யாரு. திருச்சி கெயிட்டி டாக்கீஸ் எப்படி எனக்குப் பரிச்சயம்?' என்பதெல்லாம் புரியாத புதிராக இருந்தது. நான் பிறந்தது திருவல்லிக்கேணியில், சென்னையை விட்டு அதிகம் விலகிப் போனதில்லை. திருச்சிக்கு ஒரு முறை ஆர். இ.ஸியில் ஒருத்தரைப் பார்க்கப் போயிருக்கிறேன். "கெயிட்டி என்ற டாக்கீஸ் அங்கே இருக்கிறதா? தெரியாது. எதற்காக ஜயலட்சுமி டீச்சர் என்கிற பெயரும் திருச்சியும் அடிக்கடி ஞாபகம் வருகிறது? மேலும், அந்த ஜயலட்சுமிக்கு என்ன வயசு, முகம் எப்படி இருக்கும் என்பதெல்லாம் கூடத் தெரியாமல் அவள் பற்றிய எண்ணங்கள் வரும்போது ஒருவிதமான இச்சை மனதில் கவ்வுகிறது. சாம்பிராணிப் புகை வாசனையுடன் கொஞ்சம் விபூதி வாசனையும். மலைக்கோட்டையிலிருந்து தெரிந்த காவேரிப் பாலமும் என்று குழப்ப எண்ணங்கள், மனசில் பழத்தை ஊடுருவும் புழுபோல உறுத்தின.

Friday, 02 December 2016 10:14

ஆ...! - 06

Written by

ஆ...!

இடம் கதகதப்பாக இருந்தது. இருட்டில் வெல்வெட் கலந்திருந்தது. பசிக்கு தொப்புள் கொடி வழியாக ரத்தம் கிடைத்தது. இங்கே அங்கே உற்சாகமாக குட்டிக்கரணம் அடிக்க முடிந்தது. திறவாத கண்களின் இரண்டு திப்பிலென்ஸ் வழியே விழிக்கவே இல்லை. தூக்க சமுத்திரத்தில் வெளியுலக ஒசைகள் மழுப்பப்பட்டு வளராத செவிகளுக்குப் பதிலாக இருந்த ஊசி ஒட்டைகளின் மூலம் நுழைய.

Friday, 02 December 2016 10:10

ஆ...! - 05

Written by

ஆ...!

"லம்பார் பங்க்சருக்கும் ஜயலட்சுமி டீச்சருக்கும் என்ன சம்பந்தம்? என்று மனசு மூலையில் சிரிப்புக் கேட்டது. இது அந்தக் குரல் அல்ல. எனக்குள் உள்ள முரண்பாடுகளைக் கேட்கும் ஆத்மாவின் குரல். அந்தக் குரல் கொஞ்சநேரமாகக் காணோம். இருந்தும் அது வந்துவிடும் என்ற பயம் எப்போதும் வயிற்றில் கொடைக்கானல் மஞ்சு போலப் படர்ந்திருந்தது. பெரிய டாக்டர் என் முதுகின் எலும்புகளை எண்ணிப் பிசைந்தார். கூட வந்திருந்த குட்டி டாக்டருக்கு என் முதுகின் மேல் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். 'ரெண்டு லம்பார் வர்ட்டிப்ராவுக்கு இடையில் கரெக்டா ஸ்பாட்டைப் பிடிச்சாகணும். அங்கேதான் ஸ்பைனல் கார்டு ஒரு சென்டிமீட்டர் டயாமீட்டர் இருக்கும். நல்லா நிரடலாம். அது பாத்துக்கோ ராதிகா. ஸ்பைனல் கார்டை எலும்பு, டிஸ்க்குன்னு பத்திரமாகப் பாதுகாத்து வெச்சிருக்கார் கடவுள். அதில் இடையில் இந்த ஊசியைக் குத்தறபோது முதல்ல கிடைக்கவே கிடைக்காது. ப்ராக்டிஸ், இது ஒரு சித்திரக் கலை மாதிரி, ஊசி முனையால தேடணும். நீங்க திரும்பிக்குங்க சார், வலிக்காது. அனஸ்திஸியா கொடுத்திருக்கேன் இல்லை?"

Friday, 02 December 2016 10:02

ஆ...! - 04

Written by

ஆ...!

க்ஷண காலத்தில், நினைவிழப்பதற்கு முன். அந்த பஸ் எங்களைத் தவிர்க்க திடீர் திசைமாறி பிளாட்பாரம் நோக்கி ஹாலிவுட்தனமாகப் பாய்வதையும், ஸ்தம்பித்த மக்கள் இங்குமங்கும் வெளிச்சத்தில் கரப்பான் பூச்சிகளைப் போல் ஓடுவதையும், மாருதி காரின் ரவி பக்கம் பஸ்ஸுடன் உராய்வதையும், நாங்கள் சாக்லெட் பெட்டி போல் தூக்கியெறியப்படுவதையும் ஒரு 'ஆக்ஷன்ரீப்ளே மந்தத்தில் பார்க்க முடிந்தது. அதன்பின் என்மனமுழுதும் கறுப்பு மசி கொட்டியது.