Sidebar

26
Sat, May
0 New Articles
Monday, 05 December 2016 04:34

ஆ...! - 20 Featured

Written by மகேஷ்வரன்
Rate this item
(0 votes)

ஆ...!

அந்த வெள்ளைக்காரன் என்னை ஏற இறங்கப் பார்த்து "கமான் டினேஷ்... டோண்ட் பிஸில்லி" என்றான்.

"நான் சர்மா' என்றேன்.

வெள்ளைக்காரன், ஓட்டல்காரருடன் பேசினான்.

'திருச்சி நகரமா இது?' என்று பிரமிப்பாக இருந்தது எனக்கு எவ்வளவு மாறிப் போச்சு' இவர்கள் எல்லாம் யார். நான் எப்படிஇங்கு வந்தேன்' என்பது ஓரத்தில் வியப்பாக இருந்தது. அந்த வெள்ளைக்காரன் தன்னை பீட்டர்ஸன் என்று சொல்லிக் கொண்டான். என்னை தினேஷ் தினேஷ் என்று கூப்பிட்டது எனக்கு உறுத்தியது.

"நான் தினேஷ் இல்லை. சர்மா' என்று மூன்று தடவை சொல்லிப் பார்த்து விட்டேன். எனக்கு ஜயலட்சுமியைப் பார்க்க ஆசையாக இருந்தது. எங்கே அவள்? " ஜயலட்சுமி எங்கே?" என்று கேட்டேன். டாக்டரைக் கூப்பிட்டு வந்தான் பீட்டர்ஸன், எல்லோரும் சேர்ந்து என்னைப் பிடித்துக் கொண்டார்கள். நான் திமிறினேன். பிரயோசனப்படவில்லை. பீட்டர்ஸன், காவல்காரன், டாக்டர்கூட வந்தவன் என எல்லோரும் சேர்ந்து என்னைப் பிடித்துக் கொள்ள. டாக்டர் ஊசி போட்டார்.

"தினேஷ் ஜஸ்ட்ரிலாக்ஸ். வி ஆர்கோயிங் ஹோம்" என்றான் பீட்டர்ஸன் சாந்தமாக.

"ஜயலட்சுமி' என்றேன்.

அந்த மருந்தின் தாக்கத்தால் தூக்கம் கண்ணைச் சுழற்றியது. மெட்ராஸுக்கு உடனே கூட்டிட்டுப் போயிரலாம் டாக்டர்' என்று கூறினான் பீட்டர்ஸன்.

அவர்கள் என்னைப் பெரிய கப்பல் போல் காரில் அழைத்துக் கொண்டு போனது லேசாக ஞாபகம் இருக்கிறது. கண் முழித்துப் பார்த்போதுஜயலட்சுமி " எப்படி இருக்க?' என்றாள். ஆஸ்பத்திரி போல இருந்தது. ஜயலட்சுமி கதவோரத்திலிருந்து என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"ஜெய்யூ, எப்டி இருக்கே நீ?"

"நான் தேவகி' என்றாள்.

"ஜெய்யூ வந்துட்டியா கிட்ட வா.... இது என்ன இடம்?"

"ஆஸ்பத்திரி'
 
"கிட்டவா ஜெய்பூ"

அருகில் இருந்த டாக்டர் " கிட்ட போகாதீங்க" என்றார் தேவகியிடம் எனக்கு கோபம் வந்தது. எழுந்திருக்க முயற்சிபண்ணினேன். அவர்கள் எனனைத தடுத்தார்கள். ஜெய்பூவைத் தொட்டுப் பார்க்க வேண்டும் போல் இருந்தது. அநத ராட்சசி என்னை விஷம் வைத்துக் கொன்றவள் என்பது எனக்குத் தெரியும் இருந்தாலும் அவளைத் தொட்டுப் பார்க்க வேண்டும் போல ஆசை ஏறபடடது. தொட்டுப் பார்த்துவிட்டுப் பிறகு கொல்லலாம். என்று உத்தேசித்தேன்.

'ஜாக்கிரதை. நிதி கிடைத்தாற்போல் வாய்ப்பு கிடைத்திருக்கிறது எல்லாரும் நான் தினேஷ் என்றுதான் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். நான தினேஷ் இல்லைசர்மா என்று சொன்னால் யாரும் நம்பப் போறதில்லை. ஆனால தினேஷ் போலவே இருந்துவிடலாம். என் வேலை என்ன? இந்தச் சண்டாளியைக் கொல்ல வேண்டியது. அவ்வளவு தானே!

"டாக்டர், இவர் இப்ப தன்னை சர்மா சர்மாங்கறார். என்னை ஜெய்யூங்கறார்."

"அது வந்து ஒருவித ஹலுஸினேஷன். பாதி இங்கயும் பாதி அங்கயுமா இருந்தவர் இப்ப முழுசாவே அந்தநிலைக்கு மாறிட்டார்ம்மா. எதுக்காக அவரை திருச்சி போக அனுமதிச்சீங்க? மை காட் எல்லாரும் ரொம்ப கேர்லஸ்ஸா இருந்திருக்கீங்க."

டாக்டர் என்னைப் பார்த்து "ஹாய் ஐம் டாக்டர் மேகநாத்" என்றார்.

நான் "என் பேர் சர்மா, சிந்தாமணி ஸ்கூல்ல சம்ஸ்க்ருத வாத்தியார். இவ ஜெய்யூ என் ஆம்படையாள்" என்றேன்.

அவர் புன்னகையுடன் "அப்படியா நீங்க இப்ப தினேஷ் இல்லையா?"

'இல்லைன்னு எத்தனை தடவை சொல்லிப் பார்த்தாச்சு யாரும் நம்ப மாட்டேங்கறா."

“உங்களுக்கு கம்ப்யூட்டர் எல்லாம் ஞாபகம் இல்லை?"

"அப்டின்னா?"

'சம்ஸ்க்ருதம் ஏதாவது சொல்லுங்களேன்?"

'ஸர்வதர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ அஹம் த்வாஸர்வபாபேப்யோ மோகடியீஷ்யாமி மா சுச ' எல்லா தர்மங்களையும விட்டுட்டு எங்கிட்ட மட்டும் சரணமடைஞ்சா நான் உன்னை எலலாப பாவங்களிலிருந்தும் விடுதலை பண்ணிடறேன். வருத்தப் படாதேன்னு பகவத்கீதையில பகவான் சொல்றார். இந்தக் காரியத்தை மட்டும் முடிச்சுட்டு பகவான்கிட்ட நிச்சிந்தையா போய்டலாம்னு இருக்கேன்.

அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். தேவகி அழுதாள்.' என்ன டாக்டர். என்ன என்னவோ பேசறாரே. என்னைப் பேர் சொல்லி கூப்டமாட்டேங்கறாரே?"

"கூப்பிடறேனே ஜெய்யூ ஜெய்யூ இது எந்த ஊர்?திருச்சி இல்லையா?"

"நான் ஜெய்பூ இல்லை" என்று அலறினாள் பயத்தோடு,

"நீ ஜெய்பூதான்' என்றேன். ஞாபகம் இருக்கா பாலத்தடியில்.... எனக்குப் புகட்டினியே, நீயும் பண்டரியும் சேர்ந்து ட்ரிக் பண்ணி கரூர்லருந்துவந்து. என்னை மணல்மேட்டில மல்லாக்கப்படுக்க வெச்சியே. மறக்க முடியுமா?"

"ஐயோ, என்ன சொல்றீங்க?' என்றாள் தேவகி.

'தேவகி, நீங்க வீட்டுக்குப் போங்க. இது எங்களுக்கே குழப்பமா இருக்கு"

'தினேஷ்! நீங்க என்ன பண்ஹீங்க. கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் பண்ணிக்குங்க. அதுக்கு இந்த ஊசி போட்டுக்கிட்டா.

'எனக்கு ஊசி வேண்டாம்" என்று சொல்லுமுன்னேயே ஒரு பெண் வந்து என் புஜத்தைத் தடவி சுருக்கென்று போட்டுவிட்டாள். எனக்கு வலித்தாலும் முழித்துக்கொண்டிருக்க விரும்பினேன். கண்ணைக் சுழற்றுவதற்குள் டாக்டர்கள் பேசுவது கேட்டது

"நான் அப்பவே சொன்னேனே. என். எம்.ஆர் ரெஸனன்ஸ் இமேஜிங் எடுத்தாகணும்னு. சில வேளையில லீஷன்ஸ் எல்லாம் ஸி டி ஸ்கான்ல தெரியறதில்லை. அதையும் எடுத்துடலாம்."

'ரொம்ப முக்கியம்.... இந்த ஆளை இனிமே தனியாவே விடக்கூடாது. இவர் கிட்ட இந்த நிலைல என்னென்ன வயலன்ஸ் இருக்கும்னு செல்லவே முடியாது. பெரிய ஆபத்து. அவரைப் படுக்கையோட கட்டிப் போட்டுர்றது பெட்டர்' என்றார்.

நான் அதற்குள் தூங்கிப் போய்விட்டேன்.

லேசான குரல் கேட்டது.

'சர்மா மாமா, கொஞ்சம் இடம் கொடுக்கரீங்களா?"

"யாருப்பா?"

"நான்தான் தினேஷ்.... தினேஷ்'

"சே... நான் ஜெய்யூவைப் பழி வாங்கிட்டு வந்துர்றேனே. கவலையே படாதே. கொஞ்சநாள் மிதந்துண்டு இரு" என்றேன்.

"ப்ளீஸ் மாமா அவளைக் கொன்னுடாதீங்க."

"யாரை?"
 
"தேவகியை'

"தேவகியை யாருப்பா கொல்லப் போறான். கொல்லப் போறது ஜெய்யூவை... பார்த்துண்டே இரு, எல்லாம் நல்லபடியாத்தான் நடக்கும். தெரியுமோல்யோ! இப்ப வந்து தொந்தரவு பண்ணாதே'

'குளுர்றது மாமா."

'பழகிப் போய்டும். நான் படாத குளிரா? பாம்பு பல்லு பட்டாப்பல குளிர்'

"எனக்குத் தாகமா இருக்கு, குளுர்றது. அசைக்க முடியலை. எப்பப் பார்த்தாலும் மயிர் எரியற வாசனை."

"எல்லாம் சரியா போய்டும்.துரோகமில்லாத, உபத்திரவமில்லாத லோகம் அது வந்துர்றேன், உன்னை பழையபடிக்குக் கொண்டு வந்துடறேன்.

' ஐயோ! ஏதாவது எசகேடா சொல்லிட்டா நம்ம ரெண்டு பேரையும் சேர்த்து கொன்னுடுவா மாமா."

'மாட்டாப்பா'

"தேவகி.... தேவகி'

"அவளுக்கு கேக்காது. சும்மா கத்தாதே."

அவன் குரல் சோகமாக அழுகை கலந்து கேட்டது.

"என்னை யாரும் காப்பாத்தறவா இல்லையா?"

'இல்லை. நான் தீர்மானிக்கிற வரைக்கும் அவன் அங்கதான் தொங்கணும். அங்கதான் உலாத்திண்டு இருக்கணும். அமானுஷ்யமா, காத்தா. நான் எத்தனை வருஷம் இருந்தாச்சு, ஸ்திரீ சம்போகம், சிரசாசனம் எதும் இல்லாம வெத்து குரலா எத்தனை வருஷம் இருந்தேன். சந்தர்ப்பத்தைத் தவறவிடக் கூடாது."

அதுக்கப்புறம் ஏதும் ஞாபகமில்லாமல் தூங்கிப்போய் கொஞ்ச நேரம் அல்லது கொஞ்சநாள் கழிச்சு எழுந்தேன். ராத்திரி வேளையா இருக்கும்போல தெரிந்தது. என்னை ரூம்ல கட்டிப் போட்டிருந்தார்கள். அந்த ரூம் கதவு சார்த்தியிருந்தது. ஒரு கதவில் கண்ணாடிபேர்ந்திருந்தது. அதைத்தட்டிப்பார்த்தேன். விழுந்தது. கதவவைத் திறந்துட்டேன். மெதுவா வெளில வந்துட்டேன். மெள்ள நடந்தேன். கொஞ்சம் போனதும் நெடுக வந்தா மாதிரி தெரிஞ்சது. இங்கயும் அங்கயும்எல்லாரும் கதவுகளும் சார்த்தியிருந்தன. மெள்ள பார்த்துண்டே வந்தேன். ஒரு ரூம்ல ஜெய்யூ உட்கார்ந்த வாக்கில தூங்கிண்டு இருக்க, சாத்துக்குடிபழம், டம்ளர்லஜலம் எல்லாம் பக்கத்தில வெச்சிருந்தது. அடுத்த ரூம்ல நான் இருக்கேன்னு இந்த ரூம்ல இளைப்பாறிண்டு இருக்காள்னு தெரிஞ்சது. ஜெய்யூவைப் பார்த்ததும் எனக்கு அத்தனை ஞாபகமும் வந்தது. இவளை முதல்ல ஸ்கூல்ல நியமிக்க கரஸ்பாண்டண்ட்டுக்கு ரெகமண்டேஷன் கொடுத்தது. அவ என் கிட்ட நன்றி சொல்ல வந்தது. பலாப்பழத்தை எடுத்துண்டு அவ அப்பாவை கரூர்ல போய் பார்த்தது. அவருக்கு நஞ்சை நிலமா நாலு ஏக்கர் எழுதி தர்றேன்னு நான் சொன்னது. அவர் கல்யாணத்துக்குச் சம்மதிச்சது. புகளூர்ல கல்யாணம். ஜெய்பூவைத் திருச்சிராப்பள்ளில கொண்டு வந்து குடித்தனம் வெச்சது. ஸ்கூலுக்குப் போற வேலையை விட்டுருன்னு நான் சொன்னப்போ முதல்ல அவ முரண்டு பண்ணது. அந்தப் பையன் கோபாலன்.... இப்ப தினேஷ், தினேஷ்ங்குறாளே அந்த கோபாலன் தான். அவன்கிட்ட எத்தனை வேலை வாங்கியிருக்கா, 'இங்க போ..... இதப் பண்ணு.... அதைப்ச்பண்ணுன்னு.... எத்தனை வேலை..... எத்தனை வேலை. அப்புறம் பண்டரி கடன்காரன்! முதல்ல அவன் எங்க இருக்கான்னு பார்க்கணும் அதுக்குள்ள இவ.... என்மனைவி, என்அழகான ராட்சசி. இவளை நான் ஜாக்கிரதை... ஜாக்கிரதை.... தேவகின்னுதான் கூப்பிடணும்."

"தேவகி"ன்னேன்.

அவ திடுக்கிட்டு முழிச்சுண்டு "நீங்க எப்படி வெளியே வந்தீங்க? கதவு சார்த்தியிருந்ததே' என்றாள்.

"உன்னைப் பார்க்கணும்னு தோணித்து. வந்துட்டேன்."

"எப்படி இருக்கு உங்களுக்கு?"

"சரியா போச்சு தேவகி. இனி அந்த சர்மா தொந்தரவு இருக்காது. நான தினேஷ்தான் தினேஷ்தான். எங்கிட்ட இனிமே நீ பயப்பட ண்டாம் தேவ.... தேவகி. நாம பிரிஞ்சிருந்து எத்தனை நாள் ஆச்சு?"

தேவகி இன்னும் என்னைச் சந்தேகமாகத்தான் பார்த்தாள்.

"மூணு நாள்தானே ஆறது"

"அதுவே எனக்கு ஒரு யுகம் போல இருக்கு. தேவகி, இங்க உக்காரட்டுமா? பயம் தெளிஞ்சுதா?

"உக்காருங்கோ.... உங்ககிட்ட எனக்குப் பயம் இல்லை, மெள்ளப் பேசுங்கோ. அம்மா எழுந்துடுவா'

இதான் அம்மாவா? சரியா கவனிக்கலை!

"வா, தேவகி அந்தப் பக்கம் படுக்கை காலியா இருக்கு."

திரைக்குப் பின்னால் இருந்த படுக்கையில் போய் தேவகி உட்கார நான் அவள பக்கத்தில் உடகார்ந்து அவள் கையைப் பற்றினேன். தடுக்கவில்லை மெள்ள அவள் கழுத்தை வருடினேன்.

"யாராவது எழுந்துரப் போறா. அழுத்தாதீங்க. வலிக்கறது..... ஆ...!"
 

Read 221 times Last modified on Monday, 05 December 2016 04:35
More in this category: « ஆ...! - 19 ஆ...! - 21 »

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.