Sidebar

26
Sat, May
0 New Articles
Monday, 05 December 2016 04:32

ஆ...! - 19 Featured

Written by மகேஷ்வரன்
Rate this item
(0 votes)

ஆ...!

சட்டென்று எல்லாமே ஒரு ஒழுங்கான வடிவத்துக்குள் வந்து விழுந்து விட்டது போல உணர்ந்தேன். என் கல்யாண தீர்மானத்தின் அவசரம்; வந்தேன், பார்த்தேன், மணந்தேன். யோகி ஐவனேவ் டில்லியில் 'சில பேரைப் பார்த்தவுடனே பிடித்துப்போவது 'பூர்வ ஜன்மத் தொடர்பு' என்று சொன்னபோது எனக்கு ஒரு மாதிரி நெருடல்ாக இருந்ததும். அப்போது பீட்டர்ஸன் யோசனையில் ஆழ்ந்து என்ன என்று விவரமாகச் சொல்லாததும். எல்லாம் ஒரு ஒழுங்குக்கு வந்துவிட்டது.

ஜயலட்சுமியின் முழு உருவப் போட்டோவைப் பார்த்ததும் ஜயலட்சுமி, தேவகியைப் போல இருந்தாள். இல்லை. தேவகி, ஜயலட்சமியைப் போல இருந்தாள். 'என்னடா இது, இவளை எங்கேயோபார்த்த ஞாபகமாக இருக்கிறதே எங்கே. எங்கே?' என்று மண்டையைப் போட்டு குழப்பிக் கொண்டிருந்தது தீர்ந்துவிட்டது. ஜயலட்சமி, தேவகி. அந்த முக அமைப்புக்கும் சாயலுக்கும் இருந்த ஒற்றுமையால்தான் தேவகியைப் பார்த்தவுடன் கல்யாணத்துக்க சம்மதித்திருக்கிறேன்.

அப்படியென்றால் நான் யார்.?

கோபாலனா?

சே மூடநம்பிக்கை. கம்ப்யூட்டர் விற்பன்னன். ஸாஃப்ட்வேர் சரளன். நான் போய் முன் ஜன்மம், மறு பிறவி என்றெல்லாம் நம்புவதா? அபத்தம்

பின் திருச்சி சிந்தாமணி சர்மாவின் குரல் எப்படி என் மண்டைக்குள் கேட்கிறது....?

அதைவிட இப்போது என் பயம் திசை திரும்பிவிட்டது. சர்மா என்னுள் வரப்போகிறான். என்னை ஆக்கரமிக்கப் போகிறான். எதற்கு.? ஜயலட்சமியைப் பழிவாங்குவதற்கு.

'கரெக்ட். இது உனக்குப் புரிய இத்தனை நாளாச்சா கோபாலா? உன் மனைவி தேவகிதான் ஜெய்யு. அவளை நான் கொன்னே ஆகணும்டா பிள்ளையாண்டானே அவ வாழைத்தண்டுக் கழுத்தை கட்டை விரலால நிரடி 'விண்ட் பைப்" இருக்கு பாரு. சுவாசக் குழல், அதை நெரிச்சுட்டம்னா, என்ன ஆகும்? முழிபிதுங்கும். அப்படியே. கறுப்பு முழி, பாப்பா உள்ள போய் ரெண்டு கண்ணும் வெள்ளையாயிடும் வாய் ஒரம் இருக்கு பாரு. அங்கு எச்சில் வழியும். நுரை தள்ளும். நாக்கை கடிச்சுக் கொஞ்சம் ரத்தம் வழியும். அதை நாம பார்க்க வேண்டாமா? ஜயலட்சுமி உன்னையும் ஏமாத்தினா, என்னையும் ஏமாத்தினா! நம்ம ரெண்டுபேரையும் நிலாச் சாப்பாட்டுக்க வரச்சொல்லிட்டு என்ன பண்ணா தெரியுமா கோபாலா.'
 
வேண்டாம்....., வேண்டாம்..... தெரிய வேண்டாம்"

'தெரிஞ்சுக்கோ. அப்பத்தான்நாம் ரெண்டு பேரும் சேர்ந்துண்டு பழி முடியும் நீ கொன்னா போறாது. நானும் கொல்லனும் அநதக கிராதகியை எப்படித் துடிச்சேன் தெரியுமா..? பண்டரி தயங்கறான், இவ தயங்கமாட்டேங்கறா!' -

நான் அவசர அவசரமாக மாத்திரைகளை விழுங்கி தண்ணீரால் துரத்தினேன். 'போ.... போ.... பேசாதே போ'

'கோபாலா வேளை வந்தாச்சு, இன்னும் ஒரே ஒரு படிதான் தாண்டனும் நான் காத்திருக்கேன் கோபாலா! நான் உள்ள வந்துடறேன்....அதில இருக்குற சுகம் எதிலயும் கிடையாது கோபாலா, அதான்..... பழிவாங்கறது!.என்னுடைய தாகம் அது.... என்னுடைய தீராத ஆசை. தீராத கோபம் தணடனை தரபடத் துரோகம் அது..... புகைலயும் சுடுகாட்டு வரட்டிமுட்டைத் தணல்லயும் மஞ்சிலயும், பஞ்சிலயும். பச்சை மண்ணில குழந்தைகளைப் புதைச்ச பிற்பாடு ஏற்படுமே லேசான ஒரு கதகதப்பு. அதுல, கண்ணீர்ல, வலிகல்ல, அடிபட்ட ஒலங்கள்ல, ஆஸ்பத்திரி துடிப்புக்கள்ல. நிராகரிப்புகள்ல....  உலகத்தினுடைய ஒவ்வொரு ஊர்லயும் நடக்கிற ஒவ்வொரு துரோகங்களுடைய மொத்தமான வடிவத்தில. .... நாங்கள்ளாம் இதில் தான் ரெண்டும் கெட்டான் வாழ்க்கை நடத்திண்டிருக்கோம். எனக்கு மேலே போக.. நிம்மதி கிடைக்க இந்த ஒரே ஒரு காரியம் செய்தாகணும் நிறைவேறாத இந்தத் தாகம் தீர்ந்தாகணும்.

மாத்திரை சாப்பிட்டுக் கொஞ்ச நேரத்துக்கு என்னைத்துரத்தலாம் நீ... ஆனா, மறுபடி வந்துருவேன். கொஞ்சம் கொஞ்சமா மாத்திரையோட விளைவு கம்மியாகும். அப்புறம் நூறு மாத்திரை முழுங்கினாலும் என் கிட்டேயிருந்து தப்பிக்க முடியாது...."

நான் பாத்ரூம் சென்று வாளித் தண்ணீரை தலையில் கொட்டிக் கொண்டேன். சர்மாவின் குரல் அடங்க அரை மணி ஆயிற்று அதுவரை கோர்வையில்லாமல் விதவிதமான வாக்கியங்கள் கேட்டுக் கொண்டிருந்தன.

இந்திரன் தந்த உயிர்
சந்திரன் தந்த உயிர்
கதிர்முகன்தந்த உயிர்
காளிதந்த உயிர்

அம்பு பட்டது, அரிவாள் பட்டது, கொம்பு பட்டது. கொடுவாள் கண்டச்சிலந்தி, நாக்குச்சிலந்தி, நரம்புச்சிலந்தி, மூக்குச்சிலந்தி, மூளைசசிலநதி, பக்கப் பிளவை, தொண்டை நோவு. கருப்பன் கருங்கரத்தி செங்கரத்தி.

"ஸ்டாப் இட்." என்று காதைப் பொத்திக் கொண்டு அலறினேன். மெளனம்!

முகத்தை நனைத்திருந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டு உடனே ஓட்டல் வாசலில் இருந்த டெலிபோனை நாடி பீட்டர்ஸனுக்குக் போன்

'தினேஷ் வேர் ஆர் யு'

"திருச்சியில் பீட்டர் ஐம் இன் ட்ரபிள். நீ உடனே. உடனே வந்து என்னைக கூட்டிச் செல்ல வேண்டும். நான் என்ன நிலையில் இருந்தாலும் எப்படிப் பேசினாலும் அது கோர்வையாக இருந்தாலும் அபத்தமாக இருந்தாலும் உடனே காரை எடுத்துக்கொண்டு வா ஐந்து மணி நேரம் கூடத் தாங்க மாட்டேன்' என்று ஓட்டல் விலாசத்தைத் தந்தேன்.

"ஏதாவது தெரிந்ததா?"

'ஏறக்குறைய முழுவதும் தெரிகிறது. நான் இருக்கிறேன். நான் கொல்ல இருக்கிறேன்."

'யாரை?"

"தேவகியை'

"மைகாட் இஸ் ஷி வித்யு?"

'இல்லை"

"உடனே வருகிறேன். தினேஷ் ஏதாவது ட்ராங்குவிலைஸர் போட்டுக் கொண்டு தூங்கிவிடு. அது முக்கியம்."

"பீட்டர்....ப்ளீஸ். எனக்கு உபதேசம் தேவையில்லை. உதவி பீட்டர் ப்ளீஸ் ஹெல்ப் மீ" என்று அழுதேன்.

"என்ன ஸார் உடம்பு சரியில்லையா?" என்றார். ட்ரங்க்காலுக்காகப் பணம் வாங்கிக் கொண்டு ரசீது தந்தவர். "ஏன் அழறீங்க?"

'உடம்பு, மனசு ஒண்ணும் சரியில்லை சார்."

"ஒரு நடை சமயபுரம், குணசீலம் போயிட்டு வந்துடுங்கோ. பதினஞ்சு நிமிஷத்துக்கு ஒரு பஸ் போறது.

"தாங்க்ஸ்' என்று அவரை நோக்கி சோகையாகச் சிரித்துவிட்டுப் புறப்பட்டேன்.

என்ன செய்வது? ஒட்டல் அறைக்குப் போய் படுத்து விடலாமா ஸெர்னேஸ் இக்வானில் ஏதாவது கிடைத்தால் விழுங்கிவிட்டு...

படுத்துத் தூங்கிவிட்டால் தூங்கும் சமயம் சர்மா வந்து என்னை ஆக்கிரமித்துவிட்டால்?

மெள்ள நடந்தேன். ஒரு ஓட்டல் முன் வாசலில் காபிக்காக க்யூ நின்று கொண்டிருந்தார்கள் எதிர்த்தாற்போல் ஐஸ்கிரீம் பழரசங்கள், ஃபர்னிச்சர் நாற்காலிகள், ட்ராவல் ஏஜெண்ட், லாட்டரிச் சீட்டு, டெம்போ வாடகை, பத்தமடைப் பாய் என்று கலந்து கட்டியாக என் மனம் போல் குழப்பமாக வியாபாரம் நடந்து கொண்டிருந்தது. திருச்சியின் இந்த விநோத இயக்கத்தில் தியானம் செலுத்தி என்னை நானே மறக்க முற்பட்டேன். மெயின்கார்டு கேட் என்று சொல்லப்படும் பழைய கோட்டை வாசலுக்கு நடந்தேன். அங்கிருந்து பர்மா பஜார் கிட்டத்தில் இருந்தது. வெளிநாட்டுக் குப்பைகளை விற்றுக் கொண்டிருந்தார்கள். தெப்பக் குளத்தின் பச்சையில் பிளாட்பாரத்து ஜோஸ்யர்கள் பூதக்கண்ணாடி மூலம் கிராமத்துக் கைகளை ஆராய்ந்து கொண்டிருந்தார்கள். நான் கடிகாரத்தைப் பார்த்தேன். இந்நேரம் அவர்கள் புறப்பட்டிருப்பார்கள். ஆபீஸிலிருந்து கண்டெஸா காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டால் சுமார் மூன்றரை மணி நேரத்தில் வந்துவிடலாம். அதுவரை எப்படியாவது வெளியுலகத்தை விட்டு விலகாமல் 'அதை'ப் பற்றி நினைக்காமல் சமாளித்து விடணும். இது முக்கியம்.... முக்கியம்.

பிஷப் ஹீபர் மைதானத்தில் கால்பந்து ஆட்டம் நடந்து கொண்டிருந்தது. கேட் அருகில் டிக்கெட் வாங்கிக் கொண்டு உள்ளே போய் காலரியில் உட்கார்ந்தேன். மந்தகதியில் சென்று கொண்டிருந்தது ஆட்டம். ஒவ்வொருத்தரும் பந்தை சுதந்திரமாகக் கையாண்டு (அல்லது காலாண்டு) தக்க சமயத்தில் எதிராளிக்கு இழந்தார்கள். கோல் கீப்பர் கைக்கு பந்து வந்த போதெல்லாம் தன் கட்சிக்காரர்களை அதிகாரம் பண்ணி இங்கே போ அங்கே போ' என்ற கை காட்டிக் கொண்டிருந்தான். இரண்டும் லோக்கல் கட்சிகளாக இல்லாததால் யார் ஜெயித்தால் என்ன என்கிற மனநிலையில் பார்வையாளர்கள் இருந்தார்கள். என்னருகில் இருந்தவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்.

"என்ன போயிருந்தியா?"

"போனேன். ஆளு இல்லை. திருநாக்கா போயிட்டான். தோப்புக்கு வரச் சொன்னான். பஸ்ஸு எடுத்து அங்கிட்டு போறதுக்குள்ள ஆளு பொறப்பட்டுட்டான்."

"பணம் தாரானா இல்லியா?"

"தாராங்கறான். ஆனா, தண்ணி காட்டறான்."

"கெயிட்டில இந்திப் படம்னாங்க."

"கெயிட்டி தியேட்டர் எங்க இருக்குதுங்க..? என்றேன்.

'இங்கதான் சிங்காரத் தோப்புல....'

சிங்காரத் தோப்பு. அந்தப் பெயரே என்னை வசீகரித்தது. ஏதோ ஒரு கட்சி கோல் போடுகிற தறுவாயில் கூட்டம் கொஞ்சம் உஷ்ணம் பெற்றுக் கூச்சலிடத் துவங்க, நான் எழுந்துவெளியே வந்துவிட்டேன்.

"சிங்காரத்தோப்பு. கெயிட்டி தியேட்டருக்குப் போவணுங்க" என்றேன் ஆட்டோ ரிக்ஷாக்காரரிடம்,

அவர் என்னை ஏற இறங்கப் பார்த்து.' நடந்து போங்க. கிட்டத்திலதான் இருக்கு." என்றார்.

பத்து ஆளுக்கு ஒருவராக விசாரித்துக் கொண்டு கெயிட்டி தியேட்டரை அணுகினேன். அதன் முகமே தெரியாமல் கடைகள் மறைக்க, ஏறக்குறைய ஒளித்து வைக்கப்பட்டிருந்த அந்தத் தியேட்டருக்கு டிக்கெட் வாங்கி உள்ளுக்குள் நுழைந்தேன்.

இருட்டில் சல்மான்கான் பாடிக் கொண்டிருந்தார். உஷ்ணம் என்னைப் போர்த்தியது. முதுகுப் பக்கம் செங்குத்தாக இருந்த நாற்காலியில் உட்கார்ந்தேன். இங்கே நான் வந்திருக்கிறேன் இந்த ஷேப், வடிவம், இந்த நெருக்கம் பரிச்சயமானது. ஜயலட்சுமியுடன் வந்திருக்கிறேன். ராஜ்கபூரின் UD பார்க்க. என்ன படம்? 'ஆ' படத்தை விட அவள் முகத்தைத்தான் அதிகம் பாத்துக கொண்டிருந்தேன். இருட்டில் திரை வெளிச்சத்தின் ஏற்ற இறக்கத்துக்கு ஏறப அவள மூக்கு வைரம் பளிச்சிட நெற்றிப் புருவம் தாடைக்குக் கீழே சற்று அழுத்தம்....

ஒரு முறை ஜயலட்சுமி டீச்சர் என்னைத் திரும்பிப்பார்த்தாள்.

"என்னைப் பார்க்காதே, சினிமாவைப் பாரு'

'டீச்சர் எதுக்காக என் கையை எடுத்து உங்க கைல வெச்சுப் பத்திரப்படுத்தினீங்க?"

'ரெண்டு பேரையும் கொன்னா.....! உன்னையும் கொன்னா, என்னையும் கொன்னா.... தெரியுமா? எப்படிக் கொன்னா, சொல்லட்டுமா! உன்னை எதுக்குக் கொல்லணும்.....?

பண்டரி என்னைப் பிடிச்சுண்டபோது நீ என்ன பண்ணே? நீயும்தான் என்னைப் பிடிச்சுண்டே ரெண்டு பேரும் என்னை."

நான் சட்டென்று எழுந்து நின்றேன்.

'உக்காரு..... உக்காரு....." என்ற விசிலுடன் அதட்டல் கேட்க.

'உடம்பு சரியில்லைங்க' என்று பல கால்களை மிதித்துக் கொண்டு வெளியே வந்தேன்.

ஆட்டோ ரிக்ஷாவில் ' என்ன ஓட்டல்ங்க.... பேரு சொல்லுங்க....' என்று கேட்டார் டிரைவர்.

'வந்து.... வந்து.... இங்கதாம்பா கிட்டக்க."

ஓட்டல் பெயர் மறந்துவிட்டது

"பேர் சொன்னாத்தானே!"

'நீங்க போங்க. ஓட்டல் முகப்பு அடையாளம் ஞாபகம் இருக்கு. டெலிபோன் பூத் இருக்கும். இது என்ன ஊர், திருச்சிதானே?"

"தங்கற ஒட்டல்ங்களா?"
 

"ஆமாங்க.... இன்னிக்கு என்ன தேதி?"

அந்த வட்டாரத்தை மூன்று முறை சுற்றியும் ஒட்டல் தென்படவில்லை. பெயர் ஞாபகமில்லை. என் வயிற்றில் கலக்கம் அதிகமாகியது. ஏதோ ஒரு தீர்மான கணத்தை நோக்கி விரைவாகச் சென்ற கொண்டிருக்கிற அசசம, பரபரப்பு, ஐஸ்கிரீம் போல என் நினைவுகள் மண்டைக்குள்ளிருந்து கரைந்து வழிந்து கொண்டிருக்க....

'ஓட்டல் பில்லு, கல்லு..... எதாச்சியும் பைல இருக்குதா பாருங்க."

நான் பைக்குள் துழாவ, எஸ்டீடிக்குக் கொடுத்த ரசீது இருந்தது " இந்த அட்ரஸ், ஓட்டல் வாசல்ல இருந்த டெலிபோன் பூத்து!"

அவன் அதைப் பார்த்து ' ஜயலட்சுமி விலாஸ்.... முன்னேயே சொல்லக்கூடாதா" என்று ஆட்டோவைத் திருப்பினான்.

ஒட்டலை அடையும்போது வாசலில் நின்று கொண்டிருந்த ஒரு வெள்ளைக்காரன், " தினேஷ் நான் வந்து விட்டேன். எங்கே போனே?" என்றான்.

"நான் தினேஷ் இல்லை. சர்மா.... ஆ!"

Read 217 times Last modified on Monday, 05 December 2016 04:34
More in this category: « ஆ...! - 18 ஆ...! - 20 »

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.