It had been a while I had traveled alone to a tourist spot. Athirappilly (அதிரப்பிள்ளி) falls (I had been thinking it as Athirampally [அதிரம்பள்ளி] all these years) has been my object of fantascy for a very long time... since my college days. But looks like it had been jinxed for me. Whenever we planned to go there, it never materialised. All of a sudden last week I thought of going to Chalakudy, come whatever may, and visit the Athirappilly falls. Infact the plan was more of furtive thing opposed to my rooftop shoutings. Finally the D-day arrived.

OkadaIt had been really a long time away from the blog. Meanwhile I joined a new company in Chennai and immediately got into an ongoing implementation project. SAP Consultants will know how demanding and consuming the implementation projects are, that too when you join a project that already somebody was working on, the catching up is still more exhausting. Before I could realise, within 20 days of joining I travelled to Nigeria as a part of the assignment. Never in my wierd dreams I have thought that I'll travel to the dark continent at some point of my life. So the travel itself was almost a shock. Also it happened so suddenly that I didn't get time even to pick my camera from home. So this time my LG Optimus P500 came to rescue.

Kurumbappatti Zooஆதி பயங்கர claustrophobic. அவனுக்கு வீட்டுக்குள்ளே இருப்பது சுத்தமாக பிடிக்காது. வெளியே போவது என்றால் அவனுக்கு இயற்கை சார்ந்த இடங்களை ரொம்ப ரசிப்பான். குறிப்பாக நீர்நிலைகள், காடு என இருக்கவேண்டும் அவனுக்கு. கூட வந்தவர்களை தூக்க சொல்லாமல் அவனே ஓடி ஆடி பயங்கரமாக enjoy செய்வான். எனக்கு அவனிடம் மிகவும் பிடித்த அம்சமே அது தான். ஆடு, மாடு, கோழி என எதை பார்த்தாலும் அப்படியே டேரா போட்டுவிடுவான். கடந்த முறை சேலம் வந்தபோது அவனை கிளியூர் நீர்வீழ்ச்சிக்கு அழைத்து சென்றபோது ஐயா செம ஆட்டம். ஒகேனக்கல்லிலும், மதுரை அழகர் மலையிலும் தலைவர் அடித்த லூட்டிகள் சுவாரசியம். நான் இயற்கையை ரசிப்பதைவிட அந்தந்த இடங்களில் அவன் முகத்தில் தென்படும் குதூகலத்தை ரசிப்பது இன்னும் இனிமை. அதனால் இந்த வாரம் சேலம் வந்தபோது அவனை எங்காவது இயற்கை சூழ்ந்த இடத்துக்கு அழைத்துச் செல்லவேண்டும் என்று தோன்றியது. அப்போது என் அக்கா அவனை குரும்பப்பட்டியில் உள்ள உயிரியல் பூங்காவுக்கு அழைத்துப்போ என்று suggest செய்தார். ஆனால் மிருகங்கள் அதிகமில்லை என்பதையும் சொன்னார். சரி! போய் தான் பார்ப்போமே என்று தோன்றியது.

hogenakkalஐய்யோ!!! ஒரு இடத்துக்கு போய்வந்த அனுபவதை எழுதுவதற்கு நேரமில்லை... காரணம் உடனே அடுத்த பயணம் அமைந்து விடுகிறது என்று செல்லமாக அலுத்துக்கொள்ளும் அளவுக்கு சமீபத்தில் பயணங்கள் அமைந்து வருவது கடவுளின் அனுக்கிரகம் என்று தான் சொல்லவேண்டும். சில பயணங்கள் ‘சரி’ என்ர ஒற்றை வார்த்தையில் திடீரென்று அமைந்துவிடுவதுண்டு. மதுரை போய்வந்த அடுத்த வார இறுதியில் ரயிலில் சேலம் போய்க்கொண்டு இருந்தோம். அப்போது யதேச்சையாக ஹொகேனக்கல் பற்றிய பேச்சு வந்தது. அப்போது அகிலா ‘நாளைக்கு ஒகேனக்கல் போகலாமா?’ என்றாள். எனக்கு ஒரு நிமிடம் ஒன்றுமே உரைக்கவில்லை. பின்பு சுதாரித்துக்கொண்டு ‘சரி’ என்று சொன்ன உடனே அடுத்த பயணத்திட்டம் முடிவானது. பெரிசுகள் இல்லாமல் சிறிசுகள் பட்டாளம் மட்டும் கிளம்புவது என்பது எனது முடிவு. வீட்டில் என் அம்மா, அண்ணி எல்லாம் மிக ஆர்வமாக கிளம்ப தயாராக, கொஞ்சம் கஷ்டப்பட்டு அவர்களை “இம்முறை வேண்டாம்... நாங்கள் அங்கே இடத்தை அறிந்துக்கொண்டு வருகிறோம், நாம் அடுத்த முறை சிரமமின்றி போகலாம்” என்று சொல்லி சமாளித்து சென்றோம்.

Madurai Tripஆமை புகுந்த வீடும், IT industry புகுந்த ஊரும் உருப்படாது என்பது பழமொழி. முன் பாதியை கேட்டிருக்கிறேன், ஆனால் இது என்ன இடைச்செருகல் என்று நீங்கள் கேட்பது என் காதில் விழாமல் இல்லை. நான் IT துறையில் இருந்தாலும், பொதுவாக அது ஒரு ஊர் மீது ஏற்படுத்தும் (எதிர்மறையான) தாக்கத்தை வெறுப்பவன். சமீபத்தில் மதுரை சென்றிருந்தபோது எனக்கு இந்த எண்ணம் இன்னும் வலுப்பட்டது. மதுரை என்றால் வீச்சருவாள், வன்முறை என்று தமிழ் சினிமாக்கள் ஏற்படுத்திய பிம்பத்திலிருந்து நிறைய வேறுபட்டிருப்பதாக தோன்றியது. மதுரையில் கிடைத்த அந்த vibe எனப்படும் அலைவரிசை பொருத்தம், அந்த ஊரின் தாளகதியில் (rhythm) ஒரு வித மண் வாசனையுடனான உயிர்ப்பும் இருப்பதாக உணர்வு. இத்தனைக்கும் இது எனக்கு இரண்டாவது பயணம்.

கொடிவேரி அணைநம்மவர்கள் திரைப்படங்களில் வரும் நடிகர்களை மட்டுமல்ல, படத்தில் வரும் Location-களை கூட கொண்டாடுகிறார்கள் என்பது புதிதான விஷயமல்ல. ஆனால் atleast அந்த காரணத்தினால் நம்மவர்கள் பல இடங்களுக்கு சென்ரு வருவது நல்ல விஷயம். அதனால் நான் அதை குறித்து புகார் வாசிக்கப்போவதில்லை. சமீபத்தில் நாங்கள் கோபிச்செட்டிப்பாளையத்தை அடுத்துள்ள கொடிவேரி அணைக்கு போன அனுபவம் தான் இது. ஏதோ Plan செய்து, அது நடக்காமல், எதிர்பாராத விதமாக கடந்த ஞாயிற்றுக்கிழமையில் கொடிவேரி அணையில் கால் பதித்தோம் - எனது சகோதரர் அமிர்தராஜ் உபயத்தில்.

Dharasuram Templeதாராசுரம் - தஞ்சையை போலவே எனக்கு ரொம்ப நாள் தண்ணி காட்டிக்கொண்டு இருந்த கோவில். முதல் முறையாக இதன் பெருமையை எனது UK நண்பர் திரு. இயான் வாட்கின்சன் (Ian Watkinson) மூலம் தான் அறிந்தேன். கேரளா சுவரோவியம் (Murals) வகுப்புக்கு இருவரும் சென்றிருந்தபோது எனக்கு சிற்பக்கலையின் மீது ஈடுபாடு உள்ளதை தெரிந்துக்கொண்டு அவர் தாராசுரம் கோவில் பற்றி சொன்னார். அன்றிலிருந்து எனக்கு அந்த கோவிலுக்கு போகவேண்டும் என்று ஆர்வமாக இருந்தது. ஒரு முறை தஞ்சைக்கு போகும்போது தாராசுரத்துக்கும் போகவேண்டும் என்று பலமுறை யோசித்து இருக்கிறேன். கடைசியாக தாராசுரம் போனது மிக மிக அழகான அனுபவமாக விரிந்தது. காரணம் - எனது கல்லூரித் தோழன் LMS உடன் போனது தான். அடுத்த நாள் நாங்கள் கங்கைகொண்டசோழபுரத்துக்கும் போனோம். இந்த பதிவு இந்த இனிய பயணத்தை பற்றியது.

Tanjore Temple - Click the image to read furtherஎனது ”புது வருஷ ஆசை” பதிவில் இந்த வருஷமேனும் தஞ்சாவூர் கோவிலுக்கு போய்விட்டு வரவேண்டும் என்று சொல்லியிருந்தேன் அல்லவா? கடந்த வருடம் 5 முறைகள் டிக்கெட் புக் செய்துவிட்டு கடைசி நேரத்தில் கேன்ஸல் செய்யவேண்டியிருந்தது. கடைசி முறை கிளம்பும் அன்று பயங்கர ஜுரம் வந்து டிக்கெட்டை கேன்ஸல் கூட செய்யமுடியாமல் தஞ்சை எனக்கு டேக்கா கொடுத்துக்கொண்டிருந்தது. எனது தஞ்சை நண்பனிடம் “இனிமேல் தஞ்சைக்கு எப்போது வருவேன் என்று தெரியவில்லை” என்று சொல்லி மனது விட்டுவிட்டேன். ஆனால் நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்குமாம். திடீரென்று கடந்த வியாழக்கிழமை குடும்பத்தோடு தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலுக்கு போக நேர்ந்தது. ஒருவேளை குடும்பத்தோடு தான் நான் வரவேண்டும் என்று கடந்த வருடம் என்னை பெருவுடையார் தன்னை பார்க்க வரவிடாமல் செய்தாரோ என்னவோ ?

Punishment

This is the way the petty thieves and 'defiants' are punished in the England villages. The 'defiants' are thrashed with rotten eggs and tomatoes. Sometimes they'll punish this way even for a week.

TussadsMadam Tussads wax museum is getting famous for its replica of world famous personalities from various fields. However it got the attention here in India with the inclusion of Bollywood personalities. The Madam Tussads has a huge collection of personalities starting with the Movie zone of the floor 1 and then goes to the sports, music, politicians and premiere events. Because of the huge flow of Indian tourists, the sign boards are also seen in Hindi. To be frank I didn't enjoy the trip to Tussads because of very huge crowd. After a while I lost intrest and just rushed out. Besides the wax statues there is a 4D (IMAX) show that can be watched wearing a pair special glasses. The cartoon characters just pop out of the screen, punch our backs, even rains on us. Quite an amazing experience. This show is available for an upgrade of GBP 2.50. Buying tickets to Tussad is economical in combination with other attractions like London Eye and Cruise Travel. Click the thumbnail to see some of the photos taken in the Tussads.

London TubeIt was a nice travel from Bangalore to London. I was able to catch up with my favourite Radhakrishnan, darling Jishore and other team members of Jaleel in Dubai through phone from Dubai Airport. Dubai was still haunting me to come back. Even the travel was with all Vidya Balan movies back to back :-). Chat with friends, Vidya Balan movies, some sleep and sweet memories of Buttu... what else I can need for a good travel? It was around 7:20 PM local time I landed in London's Gatwick Terminal. Atlast I touched the UK soil. For a long time I didn't feel that excitement of visiting a new place. Why? It is in the later part of this post. Also the roads resembled a lot like Dubai and it reminded me why Emaritis were obsessed with European style of living.

 

Click the image to read furtherவிதி வலியது என்பதை ஒத்துக்கொண்டே ஆகவேண்டும். சேலம் பெண்ணை கல்யாணம் செய்துகொள்வதற்கு பதிலாக காலத்துக்கும் “கன்னி”யாகவே இருப்பேன் என்று வீரவசனம் பேசிய நான் கடந்த இரு மாதங்களாக வார இறுதிகளில் தவறாமல் சேலத்துக்கு போய்வந்துக் கொண்டிருக்கிறேன். எல்லாம் புட்டுவின் கைங்கரியம் தான். எனினும் இந்த பதிவு அவற்றை குறித்து அல்ல. பொதுவான வார இறுதி பயணத்தை குறித்து தான். சனிக்கிழமை காலையில் பெல்லந்தூர் - சேலம் ஃபாஸ்ட் பேசஞ்சரில் தான் எங்கள் வார இறுதி பயணம் தொடங்கும். சில நாட்களுக்கு பிறகு பஸ்ஸில் போகலாமா என்று அகிலா கேட்டாலும் நான் மறுத்துவிடுவதற்கு காரணம் - தொப்பூர்.