28
Wed, Jun
0 New Articles

Karu. Palaniappanஇன்று வெற்றிகரமாக 100+ வது முறையாக 'பிரிவோம் சந்திப்போம்' படத்தை பார்த்தேன். DVD-யில் தான். 2 முறை தான் தியேட்டரில் பார்த்தேன். ஏனோ இந்த படம் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. அதில் வரும் சாலாவின் (சினேகா) தனிமையை நானும் அனுபவித்து  இருக்கிறேன். அதனாலோ என்னவோ எத்தனை முறை பார்த்தாலும் இந்த படம் அலுப்பதே இல்லை. இப்போதெல்லாம் என் அறையில் default-ஆக இந்த படம் தான் ஓடுகிறது. சில சமயங்களில் ஒளிச்சித்திரம் போல அது பாட்டுக்கு ஓடிக்கொண்டிருக்கும், நான் என் வேலையை பார்த்துக்கொண்டு இருப்பேன். சினேகாவுக்கு அடுத்தபடியாக மிக அருமையாக நடித்திருப்பது டாக்டராக வரும் ஜெயராம். அந்த மலையாள subtlety தமிழ் குணச்சித்திர நடிப்புக்கு கொஞ்சம் புதுசு. மலையாளத்திலும் பெரிதாக படம் இல்லாத ஜெயராமுக்கு தமிழில் குணச்சித்திர நடிகராக அடுத்த படம் அஜித்தின் 'ஏகன்'. ஷாருக்கானின் 'மெயின் ஹூம் நா' படத்தின் ரீமேக் தான் இந்த 'ஏகன்'.

{mosimage}

கடவுளே... என் பிரார்த்தனையை கேட்டதற்கு நன்றி.. கொஞ்ச நாள் முன்பு தான் "எங்கே அந்த தேவதை?" என்று புலம்பிக்கொண்டிருந்தேன். இப்போது என் பிரார்த்தனைகளுக்கு பதிலளிக்கும் விதமாக ஒரு அற்புதமான பெண்ணை திரையுலகத்திற்கு கொடுத்து உள்ளாயே! உன் கருணையை எப்படி புகழ்வேன்? அன் மனசை கலைத்த அந்த கேரளத்து பெண் குட்டி நடித்த முதல் படம் இன்னும் ரிலீஸாகவில்லை, ஆனால் அதற்குள் அந்த பெண்ணுக்கு இணையத்தில் அப்படி ஒரூ ரசிகர் கூட்டம். புகழ் பெற்ற மலையாள இயக்குநர் லால் ஜோஸ் இயக்கி விஷுவுக்கு வெளியாக இருக்கும் "முல்லா" என்ற படத்தில் திலீப்புக்கு ஜோடியாக அறிமுகமாகிறார் 'மீரா நந்தன்'. களையான முகத்தை கண்டால் நம்ம ஆட்கள் விடுவார்களா? பூபதி பாண்டியன் தன் "நானும் சந்தியாவும்" என்ற படத்துக்கு புக் பண்ணிவிட்டாராம். குறித்து வைத்துக் கொள்ளுங்கள்... இந்த பெண் நிச்சயம் அடுத்த மீரா ஜாஸ்மினாக பட்டையை கிளப்ப போகிறாள்.

{mosimage}

இந்த வாரம் தொலைகாட்சியில் உலவிக்கொண்டிருந்த போது கலைஞர் தொலைகாட்சி குழுமத்தின் 'இசையருவி'யின் நேரலையை பார்த்தேன். தமிழ் இசை சேனல்களில் உருப்படி என்றால் அது 'இசையருவி' என்று சொல்லலாம். காரணம் அவர்களின் பாடல் தெரிவுகள். சன் மியூசிக், ஜெயா மேக்ஸ் போல இல்லாமல் இனிமையான பாடல்களை, குறிப்பாக இந்த தலைமுறைக்கு தெரியாமல் இருக்கும் அற்புதமான & அபூர்வமான மெலடிகளை பார்க்க முடிந்தது. சில தொகுப்பாளர்கள் பேசும் நேரம் தவிர மற்ற நேரத்தில் ரிமோட் கண்ட்ரோலுக்கு அதிகம் வேலை வைக்காமல், அலுக்காமல் பார்க்ககூடிய சேனல் இது தான். மேலும் திவ்யா போன்ற 'புத்திசாலி' & நல்ல தமிழ் பேசும் தொகுப்பாளினிகள் இசையருவியில் இருப்பது கூடுதல் ப்ளஸ். இந்த பெண் 'என்ன சமைச்சீங்க, படம் பார்த்தீங்க' என்ற ரீதியில் பேசாமல், படிப்பு, மனோநலம், சமூகம் என்று 'அறிவார்த்த ரீதியில்' பேசுவது நன்றாக உள்ளது. திவ்யாவுக்கு 'பெப்சி' உமா போல நீண்ட நாள் தொலைகாட்சியில் இருக்கும் வாய்ப்பு உள்ளது. The best among all Tamil VJs. சன் மியூசிக்கில் வரும் 'புது பாடல்களை' கேட்பது காதுக்குள் ஈயத்தை காய்ச்சி ஊற்றுவது போல நாராசமாக இருக்கிறது.

{mosimage}

எப்போடா 'கல்கத்தா நியூஸ்' சென்னைக்கு வரும்? நான் 'நியூஸ் பேப்பரை' சொல்லைங்க! சமீபத்தில் மலையாளத்தில் வந்த திரைப்படத்தை பற்றி. புகழ் பெற்ற இயக்குனர் ப்ளெஸ்ஸியின் இயக்கத்தில் மீரா ஜாஸ்மின், திலீப், விமலா ராமன், இந்திரஜித் முதலானோர் நடித்த படம் திரைக்கு வந்து தோல்விப்படமாய் சுருண்டும் போனது. ஆனாலும் மீரா நடித்த மலையாள படம் என்றால் அம்மணிக்கு அழுத்தமாக கதாபாத்திரம் இருக்கும். அக்கா அதிலே கலக்கியும் இருப்பாங்க.. அதனாலேயே அந்த படத்தை பாக்கனும்னு ரொம்ப ஆவலா ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 'இந்த வாரமாவது சென்னையிலே ரிலீஸ் ஆகியிருக்கா'ன்னு ஆர்வமா பேப்பரை பாக்குறேன். படம் தான் வந்த பாடா இல்லை. இன்னைக்கு தான் ஒரு இணைய தளத்திலே 'கல்கத்தா நியூஸ்' பாடல்களையெல்லாம் டவுன்லோட் பண்ணி பார்த்தேன். ஆகா! அம்மணியின் அழகை காண கண் கோடி வேண்டும்

More Articles ...

Subcategories

Monthwise Archives

Powered by mod LCA

You may also like...!