22
Mon, Jan
0 New Articles

Click the image to read furtherமறைந்த எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸின் கன்னி முயற்சி - நாவல் எழுதுவதில். இது இவர் திரைக்கதையாசிரியராக செய்த முயற்சி கைகூடாததால் நாவலாக மாற்றி தன்னுடைய முதல் நாவலாக எழுதினாராம் ஸ்டெல்லா. ஆனால் இந்த கதையை நான் திரைப்படமாக பார்த்திருக்கிறேன். அதை பற்றி கடைசியில் சொல்கிறேன். தலைப்பே சொல்லிவிடும் - இது ஒரு காதல் கதை என்று. இது ஒரு முக்கோண காதல் கதையும் கூட. குற்றாலத்திலிருந்து சென்னை வரும் வைத்தியநாதன், அவனது மேலாளர் சூர்யா (பெண்), அவனது சக ஊழியை ஆனந்தி என மூவரிடையே பின்னப்பட்ட காதல் வலை தான் - ஒரு முறை பூக்கும். இறுதியில் யாருடைய காதல் ஜெயித்தது என்பது தான் முடிவு. ஒரு சிறந்த எழுத்தாளருடைய கன்னி முயற்சி என்பதை தவிர பெரிதாக சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இதில் எதுவும் இல்லை.

சாருலதாஇம்முறை சென்னை புத்தக கண்காட்சியில் நான் அதிகம் வாங்கியது ரவீந்த்ரநாத் தாகூரின் படைப்புக்களின் தமிழ் மொழிபெயர்ப்புக்கள். (இம்முறை சென்னை புத்தக கண்காட்சிக்கு போனது பற்றி ஒரு பதிவு இடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே இருக்கிறேன் ஆனால் நேரம் தான் கிடைக்கமாட்டேன் என்கிறது). சென்னைக்கும் பெங்களூருக்கும் இடையே மாறி மாறி சுற்றிக்கொண்டிருந்ததாலும், புது வீடு ஒழுங்குபடுத்திக்கொண்டிருப்பதாலும், படிக்கவும் அதிகம் சமயம் கிடைக்கவில்லை. எனினும் ஒரு சிறிய புத்தகமாக பார்த்து எடுத்து படித்தேன். அது ரவீந்த்ரநாத் தாகூரின் - சாருலதா. வங்காளத்தில் “நஷ்டநீர்ஹ்” (உடைந்த கூடு) என்ற பெயரில் வெளிவந்து, பின்னர் 1964-ல் திரு. சத்யஜித் ரே அவர்களால் “சாருலதா” என்ற பெயரில் எடுக்கப்பட்டு பல விருதுகளை அள்ளியதாம். இன்றும் தனக்கு மிகவும் திருப்தி தந்த (என்னை அந்த படத்தை மீண்டும் எடுக்க சொன்னால் எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே எடுக்கும் அளவுக்கு நிறைவான படம் - சத்யஜித் ரே) படைப்பாக சத்யஜித் ரே-யால் சிலாகிக்கப்பட்ட பெருமை இந்த சாருலதாவுக்கு மட்டுமே உண்டு. இதன் கதை என்ன? உறவுகளில் உள்ள சிக்கல்களை, அதன் complexity-ஐ காமத்தை மீறிய ஈர்ப்பை இயல்பாக சொல்கிறது இந்த குறுநாவல்.

Sagarasangamamதெலுங்கு எழுத்தாளர் எண்டமூரி விரேந்திரநாத் எழுதி, தமிழில் கௌரி கிருபானந்தன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட இந்த நாவலை சமீபத்திய பயணத்தில் தான் படித்தேன். பெங்களூரில் இருந்து வரும்போது ஏறிய அந்த பாடாவதி Express Bus-க்கு நன்றி. என் வழக்கமான கொள்கைக்கு எதிராக ஒரு புத்தகத்தை முழுமூச்சாக படிக்க நேர்ந்தது அந்த பயணத்தில் தான். அதனால் தானோ என்னவோ அந்த நாவலின் தாக்கத்தை முழுமையாக என்னுள் இறக்கிக்கொள்ள முடிந்தது. படித்து முடித்தவுடனேயே கௌரி அவர்களுக்கு SMS மூலம் எனது கருத்தை அனுப்பினேன். அவ்வளவு பிடித்திருந்தது அந்த புத்தகம். எனினும் முழுவதுமாக உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அதை பற்றிய பதிவு வேண்டாம், ஒரு 3-4 நாட்கள் கழிந்த பின்பும் அப்படியே உணர்ந்தால் தோன்றியதை எழுதலாம் என்று சிறு அவகாசத்தின் பின்பு எழுதப்படும் பதிவு இது. பயங்கர பில்டப் கொடுக்கிறேன் எனவே இது ஒரு path breaking நாவலாக இருக்கும் என்றெல்லாம் கற்பனை செய்துக்கொள்ளாதீர்கள். It is a 60-70s styled drama with an old world charm. சில சமயங்களில் பின்னோக்கி செல்வதும் ஒரு இனிமையான அனுபவமே.

ஐந்தாவது அத்தியாயம்சமீபத்தில் படித்த சுஜாதாவின் (சற்று பெரிய) சிறுகதை தொகுப்புகளில் ஒன்று - “ஐந்தாவது அத்தியாயம்”. இதில் “ஐந்தாவது அத்தியாயம்” மற்றும் “ஓரிரவில் ஒரு ரயிலில்” என இரு கதைகள் இருந்தன. இதில் என்னை கவர்ந்தது “ஓரிரவில் ஒரு ரயிலில்”. சக்திவாய்ந்த இந்து தலைவரான சுவாமி ராஜ் பண்டிதருக்கு பாதுகாப்பாக வரும் அஷோக்குக்கு சுவாமிஜி அருள்வாக்கு சொல்கிறார் - அவனுடைய வருங்கால மனைவி, இரண்டாவது எழுத்தில் தொடங்கும் பெயர் கொண்டு, அதே ரயிலில் வருகிறாள் என்று. ஆச்சரியமாக அஷோக்கின் நண்பனுடைய தங்கையான பிருந்தாவும் அதே ரயிலில் வர... அந்த ஓரிரவில் நடக்கும் சம்பவங்களை சுவாரசியமாக விவரிக்கும் குறுநாவல் - ”ஓரிரவில்..”. அடுத்த கதையான “ஐந்தாவது அத்தியாயம்” கணேஷ் - வசந்த் தோன்றும் ஒரு கொலை த்ரில்லர். தனது வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் ஒரு தொடர்கதையில் வருவதாகவும், அதில் ஐந்தாவது அத்தியாயத்தில் தான் கொல்லப்படுவதாக அறிவிக்கப்பட்டிருப்பதால் தனது உயிருக்கும் ஆபத்து வரும் என்று அபூர்வா வக்கீல்களான கணேஷ் - வசந்தை அணுக.. குறித்த தினத்தில் கொலையும் நடந்துவொடுகிறது. (எனக்கு) கொஞ்சம் குழப்பமாக கதையாக முடிகிறது. மேலும் இதில் பல லாஜிக் ஓட்டைகள் இருப்பதால் என்னை பெரிதாக ஈர்க்கவில்லை. உங்களில் யாரேனும் இந்த “ஐந்தாவது அத்தியாய”த்தை படித்திருந்தீர்கள் என்றால் கொலைகாரர் யாரென்று பின்னூட்டமிடவும்... ப்ளீஸ்!!! {oshits} வாசகர்கள் இந்த பதிவுக்கு

More Articles ...

Monthwise Archives

Powered by mod LCA

You may also like...!