19
Fri, Jan
0 New Articles

Yandamoori Virendranathதெலுங்கு எழுத்தாளர் “யண்டமூரி” விரேந்திரநாத் தனது படைப்பான இந்த புத்தகத்தில் Abstract பாணி கதை சொல்லும் முயற்சியை கையாள முயற்ச்சித்திருக்கிறார். Abstract பாணி என்பது சில நிகழ்ச்சிகளை கொஞ்சம் மிகைப்படுத்தி படிக்கும் வாசகர்களை அதிர்ச்சி அடையவோ அல்லது amuse செய்தோ தான் சொல்லவந்ததை வேறு விதமாக அவர்களது மனதில் பதிக்கும் முறை. வித்யாதரி புத்தக கடையில் த்ரில்லர் என்ற புத்தகத்தை வாங்கி அதில் வெறும் வெள்ளைத்தாள்கள் மட்டுமே இருப்பதை கண்டு பொழுதுபோக்காக தன் அனுபவங்களை எழுத ஆரம்பிக்கிறாள். சிறிய வயதிலிருந்து சூழ்நிலைகள் காரணமாக ஆண்களை வெறுக்கும் வித்யாதரியை ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருந்து காப்பாற்றி தன்னுடைய காதலை சொல்கிறான் அனுதீப். அவ்வப்போது தன் காதலை நிரூபிக்க சில சில அதிசயங்களை நிகழ்த்திக்காட்டும் அனுதீப்பிடம் வித்யாதரிக்கு காதல் தலைதூக்கும் போதெல்லாம் அந்த அதிசய நிகழ்ச்சிகளுக்கு logical reasoning மூலம் காரணம் கற்பித்துக்கொண்டு வித்யாதரி அவனை மேலும் மேலும் அவமானப்படுத்துகிறாள். கடைசியில் அதிசயங்களின் உச்சக்கட்டமாக உலகமெங்கும் மின்சாரத்தை நிறுத்திவிடுகிறான் அனுதீப். அந்த ஆச்சரியத்தில் இருந்து மீளும் வித்யாதரிக்கு மிகப்பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது. பல இடங்களில் இந்த புத்தகம் Mushy romance என்னும் அளவுக்கு காதல் காதல் காதல் என்று ஒரே லெக்சராக இருக்கிறது. கடைசியில் அந்த எல்லாமே காதல் என்பது சுயநலமில்லாத எதிர்பார்ப்பில்லாத அன்பு, காதல் என்பது காரணங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு உணர்ச்சி என்கிற cliche-க்களுடன் முடிகிறது. கதை Abstract முயற்சி என்பதால் அனுதீப் யாரென்பதை வாசகர்களுக்கு தெளிவுபடுத்த எழுத்தாளர் விரேந்திரநாத்தே வித்யாதரியை பார்த்து விளக்கம் கூறிவிட்டு அவளிடம் இருக்கும் “த்ரில்லர்” நாவலை எடுத்துக்கொள்வதாக முடித்திருக்கிறார். புது வகையான முயற்சி என்பதால் பாராட்டலாம் என்றாலும் நீளத்தையும், பல இடங்களில் வளவளவென்று தேவைக்கு மீறிய வசனங்களையும் குறைத்திருந்தால் இன்னும் எடுபட்டிருக்கும்.

SujathaIt is a long due... இந்த புத்தகத்தை படித்து ரொம்ப நாள் ஆனாலும் ஏனோ என் கருத்தை பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டுவிட்டது. பொதுவாக சுஜாதாவின் புத்தகங்கள் படித்து முடிக்கும்போது ஒரு வித பிரமிப்போடும், கதைகளத்தை பற்றிய புதிய ஞானத்தோடும் முடிப்பது வழக்கம். மாறாக இந்த மூன்று குறுநாவல்கள் (ரோஜா, ஜோதி, 6991) கொண்ட புத்தகத்தை படித்துமுடித்தபோடு ஒருவித சோக உணர்ச்சி நம் மனதை பிசைவதாக உணரமுடிகிறது. Quite unusual of Sujatha. (i)”ரோஜா” - துஷ்டனான ஒரு தொழிற்சங்க தலைவன் துரையால் கற்பழிக்கப்பட்டு இறந்துபோகும் இளம்பெண் லட்சுமியின் கொலையை துப்புதுலக்க வரும் இன்ஸ்பெக்டர் ராஜசேகருக்கு துப்பு கொடுப்பது ஒரு உதிர்ந்த ரோஜா மலர். ஏற்கனவே கற்பழிப்புகளை படித்தால் மன உளைச்சலுக்கு ஆளாகும் என்னை இந்த நாவல் பாதித்ததில் ஆச்சரியமில்லை. குறிப்பாக லட்சுமியின் குருட்டு தாத்தா அவளுடைய கல்யாணத்துக்கால சேர்த்து வைத்த காசு உண்டியலை சிதறடித்து போலீஸிடம் பேசும் காட்சி. கதை தான் இப்படி என்றால் முடிவு இன்னும் அதிர்ச்சிக்குள்ளாக்குவது. (ii) ’6991’ - சிறிய வயதிலிருந்து அழகாக இருக்கும் ஒரே குற்றத்துக்காக பல முறை பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகும் விமலாவின் மனப்போராட்டத்தை, பயணத்தை அவளுடைய பார்வையிலேயே, அதிக melodrama இல்லாமல் கொஞ்சம் sophisticated urban style-ல் சொல்லியிருக்கிறார். இதில் சுஜாதா ஓரளவுக்கு நம் மனதை தொடவும் செய்கிறார். (iii) ஜோதி - இந்த கதையை பற்றி அதிகம் நினைவில்லை. அதனால் pass. (புத்தக விவரம்: விசா பதிப்பகம், 120 பக்கங்கள், விலை: ரூ. 60/-) - {oshits} வாசகர்கள்!!!

Kurudhippunalஇது இந்திரா பார்த்தசாரதி எழுதி சாகித்ய அகாடெமி விருது பெற்ற நாவல். நடிகர் கமல்ஹாசன் கோவிந்த் நிஹாலனியின் ‘துரோஹ்கால்’ என்ர இந்திப்படத்தை தமிழில் “துரோகி” என்ற பெயரில் ரீமேக் செய்தபோது ரசிகர்கள் ஆட்சேபித்ததால் அதன் தலைப்பை“குருதிப்புனல்” என்று மாற்றிய போது தான் அந்த பெயரில் ஒரு புகழ் பெற்ற நாவல் இருப்பதை அறிந்துக்கொண்டேன். என்றாவது ஒரு நாள் அந்த நாவலை படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தை இன்றைய ரயில் பயணத்தில் தான் நிறைவேற்றிக்கொள்ள முடிந்தது. நம்புங்கள்... படத்தை (கதை வேறானாலும்) போல நாவலும் பரபரப்பாக இருந்தது. தஞ்சை கீழ்வெண்மணியில் நடந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு புணையப்பெற்ற இந்த கதை படிப்பவர்களின் மனதை உலுக்கிவிடும். அது என்ன கீழ்வெண்மணி சம்பவம்? Google-ல் தேடிக்கண்டு பிடிக்கும் பொறுப்பை உங்களுக்கு விட்டுவிடுகிறேன். மேலும் உங்களில் எத்தனை பேருக்கு - குருதிப்புனல் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியும்?

Parisukku Poஇது நான் படித்த 6வது ஜெயகாந்தனின் படைப்பு. அவருடைய சிறந்த படைப்புகளில் ஒன்று என்று அறிந்த பிறகே வாங்கினேன். மேல்நாட்டில் வாழ்ந்துவிட்டு பின் தன் தாய்நாட்டில் குடியேற விரும்பும் இசைக்கலைஞன் ஒருவன் கடைசியில் பாரீஸுக்கே போய்விடுவதாக முடிகிறது இதன் கதை. 1966-களில் எழுதப்பட்ட இந்த நாவல் இந்திய மேல்தட்டு சமூகத்தில் பழக்கவழக்கங்கள் ’நவீன முறை’ என்கிற பெயரில் மேற்கத்திய கலாச்சாரத்தை தழுவிக்கொண்டாலும், கருத்து ரீதியாக சில நூற்றாண்டுகள் பின்தங்கியே இருப்பதை சுட்டிக்காட்டுகிறார் ஜெயகாந்தன். ‘பாரீஸுக்கு போ’வில் ஜெயகாந்தன் வாழ்க்கையும் கலைகளும் நவீனமுற வேண்டும், அப்படி ஆகவேண்டுமென்றால் மனதளவில் எத்தகைய மாற்றங்கள் வரவேண்டும் என்று தன் கருத்தை நாவல் முழுவதும் வலியுறுத்துகிறார். ஜெயகாந்தனின் பாணியே கொஞ்சம் விஸ்தாரமாக எழுதுவது என்பதால் அவர் வார்த்தைகளை மனதளவில் படமாக விரித்து ரசிக்கவும், அவருடைய கருத்துகளை ஒத்துக்கொள்ளவும், மறுக்கவும் நிறைய வாய்ப்பளிக்கிறார்.

More Articles ...

Monthwise Archives

Powered by mod LCA

You may also like...!