Click the image to read furtherரொம்ப நாட்களுக்கு மட்டை போட்டுவிட்டு கடைசியாக ”அங்காடி தெரு”வை பார்த்தபோது மனசு கல்லாக பாரமானதை தவிர்க்கமுடியவில்லை. படம் முழுவதும் ரத்தமும் சதையுமாக யதார்த்தமான மனிதர்கள். “களவானி” ஒரு இன்ப அதிர்ச்சி - வரிவிலக்கு பெறுவதற்காக தமிழில் பெயர் வைத்துவிட்டு புதுமுகங்களை வைத்து எடுக்கப்படும் பலான படமோ என்ற சந்தேகத்தில் நான் ஒரு பொருட்டாகவே கருதாத படத்தை, இணையதளத்தில் (கதையை படிக்காமல்) நல்ல விமர்சனங்களை படித்தபிறகு பார்த்தபோது ஒரு இனிய அதிர்ச்சி. அனுஷ்கா விபச்சாரியாக நடிக்கும் “தாகம்” என்று போஸ்டர் அடித்து தியேட்டரில் தெலுங்கிலேயே ஓடும் “வேதம்” அந்த ஒரு கேவலமான “இழுப்பு”க்கு தகுதியில்லாத அருமையான கலைப்படைப்பு. பட்ட காலிலேயே படும் என்பதற்கு உதாரணமாக “சொம்பு”, “சின்ன தளபதி” ஆகியோரின் நடிப்பில் தமிழில் உருவாகிக்கொண்டிருக்கிறதாம் இந்த “வேதம்”. இனி இவை குறித்த என்னுடைய குறுங்கருத்துக்கள்.

Click the image to read furtherமணிரத்னத்தின் படங்கள் வெறும் படங்கள் அல்ல.... அவை ஒரு event by itself. ராவணன் படத்துக்கு எதிர்பார்ப்புகள் வேகமாக எகிறிக்கொண்டிருந்த சமயத்தில் அவரை வெறுக்கும் ரசிகர்கள் கூட “கிழிப்பத”ற்க்கேனும் படத்தை பார்க்கத் துடித்துக்கொண்டிருந்தார்கள். இந்நிலையில் வெளியான ராவண் / ராவணன் படத்துக்கு முதல் விமர்சனமான "SRK payroll”ராஜா சென் முதல் நடுநிலையான தரண் ஆதர்ஷ் வரை எல்லாருமே சொல்லி வைத்தது போல கிழித்தெடுக்க எனக்கு கொஞ்சம் ஆர்வக்குறைவு ஏற்பட்டது உண்மையே. ஆனால் இந்த ஞாயிற்றுக்கிழமை மிக மிக யதேச்சையாக என் அண்ணா குடும்பத்தினரோடு சேலம் கீதாலயாவில் பார்த்தபோது படம் “அசாதாரணமான எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறிவிட்டதே தவிர அத்தனை மோசமான படம் அல்ல” என்று தோன்றியது. அழகான தருணங்கள், மிக திறமையான Technicians, பழமையை உடைக்க வாய்ப்பளிக்கும் அற்புதமான கதைக்களம் என எல்லாம் இருந்து மணிரத்னம் அசாதாரணமாக கோட்டை விட்டிருப்பது தான் பரிதாபம். இது என்னை ஏன் “ராவணன்” ஈர்த்தது / வெறுப்படித்தது என சொல்லும் பதிவு.

Click the image to read furtherமணிரத்னம் - ஏ.ஆர் ரகுமான் கூட்டணியின் 9வது இசைப் படைப்பு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையில் சமீபத்தில் வெளியானது. முதலில் ஹிந்தியின் “ராவண்” ஏப்ரல் 24ம் தேதியும், பின்னர் தமிழ் / தெலுங்கில் மே மாதம் முதல் வாரத்தில் வெளியான இதன் இசை வழக்கம்போல எதிர்மறையான விமர்சனங்களுக்கு ஆளானது. ஆனால் ஏ.ஆர் ரகுமானின் இசை என்பது மதுபானத்தை போல. குடித்த சில ரவுண்டுகளுக்கு பிறகு தான் போதை ஏறும். அது போல ரகுமானின் இந்த பாடல்கள் நம் மீது வளர கொஞ்சம் சமயம் எடுத்துக்கொண்டது உண்மை தான். முதலில் ஹிந்தியில் கேட்டபோது எல்லாமே ஒரே பாடல் போல தோன்றியது. ஹிந்தி பதிப்பின் வரிகளை எழுதியது மாபெரும் கவிஞரான குல்ஸார் ஆனபோதும் சமயமின்மை காரணமாக வரிகளை கூர்ந்து கவனிக்க முடியவில்லை. ஆனால் தமிழ் பதிப்பு வந்தபோது (நன்றி: அழகான வரிகளை எனக்கு முன்னோட்டமாக சொன்ன அரவிந்தன்) அந்த பாடல் எந்த சூழலுக்கு வந்திருக்கு என்று யூகிக்க ஆரம்பித்தபிறகு பாடல்களின் தனித்துவம் புரிய ஆரம்பித்துவிட்டது. மொத்தம் 6 பாடல்கள், அவற்றில் மிக எளிதாக 3-4 தேறும். நான் வரிசை படுத்தியிருப்பது எனது விருப்பத்தின் அடிப்படையில்.

Vishnuvardhanபசங்க படத்துக்கு நான் எழுதிய பதிவில் தமிழில் குழந்தைகளை மையப்படுத்தி கடைசியாக வந்த Mainstream தமிழ் படம் “அஞ்சலி” என்று எழுதியிருந்தேன். அதற்கு அனன்யா அக்கா அஞ்சலிக்கு பதிலாக நடிகை லட்சுமி இயக்கிய ”மழலைப்பட்டாளம்” தான் தமிழின் கடைசி குழந்தைகள் படம் என்றும், சந்தர்ப்பம் கிடைத்தால் நான் அதை கட்டாயம் பார்க்கவேண்டும் என்று சொல்லியிருந்தார். நேற்று அதன் DVD-ஐ பார்க்கும் சமயம் கிடைத்தது. கன்னட நடிகர் விஷ்ணுவர்த்தன், சுமித்ரா ஆகியோருடன் ஒரு பெரும் மழலை பட்டாளமே நடித்திருந்த இந்த படம் பயங்கர ஏமாற்றத்தையே தந்தது. படத்தை இயக்கியது பெண் இயக்குநராக இருந்தும் கதாநாயகி “கன்னி”யாக தான் இருக்கவேண்டும் என்ற இலக்கணத்தில் கதை ஆரம்பித்ததுமே புஸ்ஸென்று போய்விட்டது. தன் சகோதரி பிள்ளைகளை தன் பிள்ளையாக வளர்க்கும் சுமித்ராவை, அந்த பிள்ளைகளுக்கே ”அது நம் அம்மா அல்ல” என்று அடையாளம் தெரியவில்லையாம். விஷ்ணுவர்த்தன் மட்டும் 6 பிள்ளை பெற்றவராக இருக்கலாமாம் ஆனால் அவரை கல்யாணம் செய்துக்கொள்ளும் சுமித்ரா மட்டும் கன்னி கழியாதவராக இருக்கவேண்டுமாம். கதாநாயகி அல்லவா? சரி.. பெரியவர்கள் விஷயத்தை விட்டுவிட்டு குழந்தைகள் விஷயத்துக்கு வரலாம் என்று பார்த்தால் எல்லாம் நாடகத்தனமான over acting. விசு அல்லவா இதன் திரைக்கதை ஆசிரியர், பின்னே எப்படி நாடக வாசனையை தவிர்க்கமுடியும்? விஷ்ணுவர்த்தனுக்கு ‘டெல்லி’ கணேஷ் குரல் கொடுத்திருப்பதால், படம் முழுக்க ‘டெல்லி’யே நடித்திருப்பது போன்ற ஒரு தோற்றம். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்க்க ஆரம்பித்திருந்தால் 30 நிமிடத்திலேயே படத்தை நிறுத்தியிருப்பேன். (அகிலாவும் இந்த படத்தை பார்த்துக் கொண்டிருந்தபடியால்) கஷ்டப்பட்டு 2:30 மணி நேரத்தை ஓட்டிவிட்டு, படம் முடிந்தவுடன் ”பசங்க” DVD-ஐ போட்டு damage control-இல் இறங்கினேன். சும்மா சொல்லக்கூடாது... பசங்க... பசங்க தான்.

Thamizhpadam’பசங்க’ படத்துக்கப்புறம் நான் சமீபத்தில் மிகவும் ரசித்து பார்த்த தமிழ் படம் இந்த “தமிழ் படம்”. ஆங்கிலத்தில் பிரபலமாக உள்ள Spoof என்கிற ‘நக்கலடிக்கும்’ genre-ஐ தமிழுக்கு கொண்டு வந்துள்ள புதுமையான முயற்சி. இவ்வளவு காலமாக மக்களை ‘பொழுதுபோக்கு’ என்கிற பெயரில் எப்படியெல்லாம் ஏமாற்றி மூளையை மழுங்கடித்துக் கொண்டிருந்தது இந்த தமிழ் திரையுலகம் என்று நினைக்கும் போது மெலிதாக ஒரு கோபம் வருவதை தவிர்க்க முடியவில்லை. இவர், அவர் என்று பாரபட்சமில்லாமல் மானாவாரிக்கு எல்லோரையும் ஓட்டி வாரியிருப்பது உண்மையிலேயே சுவாரசியம். இந்த படத்தை பார்த்துவிட்டு தமிழ் திரையுலகத்தினர் கோபத்தில் இருப்பதாகவும், அதை தயாரித்தது ‘பெரிய இடம்’ என்பதால் பொத்திக்கொண்டு இருப்பதாக படித்தபோது சிரிப்பு தான் வந்தது. தவறை சுட்டிக்காட்டினால் கோபம் வருவது இயற்கை தானே? இந்த படத்தில் வரும் காட்சிகளின் மூலப் படத்தை பார்த்த / அறிந்தவர்களுக்கு மட்டுமே இதை அனுபவிக்க முடியும் என்பதால் இந்த படத்தை என்னுடைய மற்ற மொழி நண்பர்களுக்கு காண்பிப்பதில் சிக்கல். Spoof-ஆக வரும் காட்சிகளை தமிழ் இயக்குநர்கள் சீரியஸாக எடுத்துக்கொண்டு அடுத்த படங்களில் ஹீரோயிஸ காட்சிகளாக புகுத்தி கழுத்தறுப்பார்களோ என்ற பயமும் வருகிறது.

{mosimage}

கொஞ்ச நாட்களாக பார்த்த படங்களை பற்றி ஒன்றும் எழுதவில்லை... பெரிதாக காரணமில்லை - வெறுமனே சினிமா குறித்த பதிவுகள் குவிந்துவிட கூடாது என்கிற கவனம் தான். பின்பு பல படங்கள் ஒன்றாக சேர்ந்துவிட்டபடியால் ஒவ்வொன்றை பற்றியும் சுருக்கமாக சொல்லிவிடலாம் என்று முடிவு செய்து போட்ட பதிவு. என்னென்ன படங்கள் நான் சமீபத்தில் பார்த்தது? தமிழில் - ஊட்டி வரை உறவு, மறுபடியும், மலையாளத்தில் - வாஸ்தவம், தலப்பாவு, ஹிந்தியில் - Woh Kaun Thi, Anupama, Arth. மலையாள - வாஸ்தவம் / தலப்பாவு மற்றும் தமிழ் ஊட்டி வரை உறவு தவிர மற்றவை எல்லாம் veoh.com-ல் இருந்து Download செய்யப்பட்டவை. முன்பே சொன்னது போல - பல அரிய படங்கள் எல்லாம் veoh-ல் கிடைத்தது. எனவே இந்த பதிவு Veoh-க்கும், Google Videos-க்கும் மற்றும் இதை upload செய்த புண்ணிய ஆத்மாக்களுக்கும் சமர்ப்பனம்.

{mosimage}

I am building an online library of my all time favourite movies - Mahesh Talkies. It is still in developing stage. You can view the movies but I am yet to add the synopsis, cast & crew details for each movie. Watch this space... {oshits} readers

{mosimage}

கிட்டத்தட்ட 90’களின் இறுதியில் கே. பாலசந்தரின் மின் பிம்பங்கள் தயாரித்து சன் டி.வி.யில் தொடராக வந்த ‘ரமணி vs ரமணி’யின் முதல் பாகத்தில் வாசுகியும், பப்லு என்கிற பிருத்விராஜும் நடித்து இருந்தனர். 90-களில் GenX எனப்படும் இளைய தலைமுறையின் பிரதிபலிப்பாக, மேல்தட்டு குடியை சேர்ந்த, படிப்பிலும், சம்பாத்தியத்திலும் இணையான புதுமணத் தம்பதியாக வாசுகியும், பிருத்விராஜும் கலக்கியிருந்தனர். பின்னர் கே.பி-க்கும் சன் டி.வி-க்கும் மோதல் ஏற்பட்டதை அடுத்து மின்பிம்பங்களின் அனைத்து தொடர்களும் ராஜ் டி.வி-க்கு மாற்றப்பட்டபோது இந்த ‘ரமணி vs ரமணி - I' மீண்டும் ராஜ் டி.வி-யில் ஒளிபரப்பப்பட்டது. கிட்டத்தட்ட 10-12 வருடங்களுக்கு மேலே ஆனாலும், இன்றும் புதிதாக இருக்கிறது இந்த தொடர். தற்போது ’ஜீ தமிழி’ல் ஒளிபரப்பாகிரது போல. இதில் வரும் வாசுகியை எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. “தொலிபிரேமா” என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகனின் தங்கையாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த வாசுகி, அந்த படத்தின் ஒளிப்பதிவாளரை காதலித்து கல்யாணம் செய்துக்கொண்டு ஒரேயடியாக காணாமல் போய்விட்டார். இந்த நாடகத்தின் அத்தியாயங்களை நான் Yahoo! Videos Playlist- இல் upload செய்துள்ளேன். இந்த தளத்தில் சொடுக்கி பார்த்து ரசியுங்கள். - {oshits} பார்வைகள்.

{mosimage}

இன்னும் முழுதாக படம் முடியவில்லை, எனினும் என்னால் எழுதாமல் இருக்க முடியலை - ‘ஆனந்த தாண்டவம்’ அதன் மூலமான சுஜாதாவின் ‘பிரிவோம் சந்திப்போம் - பாகம் 1 & பாகம் 2 ’ நாவலின் கால் தூசிக்கு கூட வரவில்லை. உணர்வுப்பூரமாக நிதானமாக ரசித்து படிக்கப்பட்ட காட்சிகள் திரையில் அவசரம் அவசரமாக நகர்வதை ரசிக்கமுடியவில்லை. வசனங்கள் எல்லாம் அப்படியே நாவலிலிருந்து எடுக்கப்படுள்ளன - கொஞ்சம் கூட update செய்யப்படாமல்... கொஞ்சம் கொஞ்சம் மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன ஆனால் அவை அத்தனை சுவாரசியமாக இல்லை. இரண்டாவது பாதியில் காமெடி காட்சிகள் என்கிற பெயரில் சுருட்டப்பட்ட குப்பை காட்சிகளை பார்த்தால் சுஜாதா தற்கொலை செய்துக்கொண்டு இருப்பார். கதையை ’பிரிவோம் சந்திப்போமி’ற்கு விசுவாசமாக கதை நடப்பதாக சொல்லப்பட்ட இடங்களிலேயே படமாக்கப்பட்டுள்ளது போல, பேசாமல் 80களில் நடப்பதாக periodic படமாக எடுத்திருந்தால் கொஞ்சமாவது authenticity மிஞ்சியிருக்கும். இந்த க்ளாஸிக்கலான நாவலை திரைப்படமாக்க முயற்சித்த ஏ.ஆர் காந்திகிருஷ்ணாவின் முயற்சியை திட்ட மனசில்லை, எனினும் இன்னும் கொஞ்சம் மெனக்கட்டு இருக்கலாம். மதுமிதா-வாக தமன்னா - அம்மணி நன்றாக நடித்து இருந்தாலும் அந்த கதாபாத்திரத்தின் அப்பாவித்தனத்துக்கு மாறாக கொஞ்சூண்டு உருவ முதிர்ச்சி & கேணத்தனம் தெரிகிறது. ரத்னாவாக ருக்மிணி விஜயகுமார் பாந்தமாக நடித்திருக்கிறார். புதுமுகம் சித்தார்த் - I hate that malayali guy. தமிழ் சினிமாவில் நடிக்க தமிழ் பசங்களே கிடைக்கலையா? ஜீவாஷங்கரின் கேமிரா பாபநாசத்தை, ஊட்டியையும் மிக அழகாக match செய்து காண்பித்திருப்பதற்கு ஒரு ஷொட்டு. சுமாரான பாடல்கள் என்ற போதும் குறிப்பிடக்கூடிய பின்னணி இசை (உபயம்: ஜி.வி. பிரகாஷ்குமார்) - {oshits} பார்வைகள்....

{mosimage}

ரொம்ப வருஷங்களுக்கு அப்புறம் வந்துள்ள உண்மையான பசங்க படம்.. தமிழில் ராமநாராயனன் இயக்கத்தில் பாம்பு, மாடு, யானைகளோடு ஷாம்லி நடித்த படங்களை தவிர்த்துவிட்டு கடைசியாக எப்பொழுது ஒரு mainstream குழந்தைகள் படம் வந்தது என்று யோசித்தால் நினைவுக்கு வருவது மணிரத்னத்தின் ‘அஞ்சலி’ தான். அதில் கூட குழந்தைகள் தங்கள் வயதுக்கு மீறிய நடவடிக்கைளோடு கொஞ்சம் கூடுதலாகவே கடுப்படித்து இருந்தனர். சமீபத்தில் எந்த வித முகாந்திரமும் அல்லது பரபரப்பும் இல்லாமல் இறங்கிய ‘பசங்க’ தமிழின் நல்ல பசங்க திரைப்படத்தில் ஒன்றாக காலத்துக்கும் பெயர் பெற்று நிற்கும். இந்த பதிவுக்கு போகும் முன்பு இதன் தயாரிப்பாளர் சசிகுமாரிடமும், இயக்குநர் பாண்டிராஜிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்த படத்தை நான் இணையத்தில் இருந்து டவுன்லோடு செய்து பார்த்தேன். இது போன்ற நல்ல முயற்சிகளுக்கு ஆதரவு தராவிட்டால் எப்படி நாமும் நல்ல படங்களை எதிர்பார்க்கமுடியும்? ஆனால் இந்த ‘பசங்க’ படம் இங்கே துபாயில் வெளியாகவில்லை. எனவே எனக்கு வேறு வழியுமில்லை.

காதல் வேதம்90-களின் இறுதி இந்திய (ஹிந்தி) பாப் இசையின் முக்கிய காலக்கட்டம் என்று சொல்லலாம். அந்த சமயத்தில் Non Films எனப்படும் திரைப்படம் சாராத இசை வகை ஓரளவுக்கு பிரபலமாக விளங்கியது. திரைப்படத்தின் சூழலுக்கு ஏற்ப மட்டுமே இசையமைத்து ஒரு கட்டுக்குள் இருந்த இசையமைப்பாளர்களுக்கும், independent இசையமைப்பாளர்களுக்கும் ஒரு விடுதலையாக இருந்தது இந்த இந்திய பாப் இசை. எனினும் தெற்கில் இந்த பாப் முயற்சிகள் பெரிதாக நிகழவும் இல்லை & வெற்றி பெறவும் இல்லை. அந்த சமயத்தில் வெளிவந்த ஹரிஹரனின் கஜல் சார்ந்த ஆல்பமான ‘ஹல்கா நஷா (மெல்லிய மயக்கம்)’, ஹரிஹரனின் தெற்கத்திய மவுசை கணக்கில் கொண்டு ‘காதல் வேதம்’ என்ற பெயரிலும் வெளிவந்தது. அழகான உயிர்ப்புள்ள பாடல்கள் இருந்தபோதும் பெரிதாக ஹிட்டாகவில்லை. நேற்று அனீஸிடம் இருந்து அந்த ஆல்பத்தின் பாடல்களை பெற்றவுடன், இதை உங்களோடு பகிர்ந்துக்கொள்ளவேண்டும் என்று தோன்றியது. இதோ இந்த ஆல்பத்தின் பாடல்கள் உங்களுக்காக...

ஆனந்த தாண்டவம்

நேற்று மாலை சுஜாதாவின் ‘பிரிவோம் சந்திப்போம்’ நாவலின் இரண்டு பாகங்களையும் ஒரே மூச்சில் (பல நாட்களாக தான்) படித்து முடித்தேன். இந்த நாவல் ‘ஆனந்த தாண்டவம்’ என்ற பெயரில் படமாகிக்கொண்டு இருக்கிறது என்றும், இதில் சித்தார்த், தமன்னா, ருக்மிணி (’பொம்மலாட்டம்’ புகழ்) மற்றும் கிட்டி ஆகியோர் இதில் நடித்திருப்பதாக படித்து இருந்ததால் இம்முறை இந்த நாவலை படிக்கும் போது எனக்கு அந்தந்த முகங்களே முன்னின்றது. ‘ஆனந்த தாண்டவ’த்தின் நடிகர் நடிகையர் தேர்வை படித்தவுடன் எனக்கு தோன்றிய சில apprehensions இம்முறை விலகியது. குறிப்பாக ரத்னா கதாபாத்திரத்துக்கான ருக்மிணி ஒரு அற்புதமான தேர்வு. இந்த நாவலின் மிகச்சிறந்த கேரக்டர் என்று பார்த்தால் அது நிச்சயமாக இந்த ரத்னா கதாபாத்திரம் தான். அதனால் தான் நான் இந்த கதாபாத்திரத்துக்கான நடிகர் தேர்வை மிக ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருந்தேன். இந்த பெண்ணும் ஒரு NRI & நாட்டிய தாரகை ஆனதாலோ என்னவோ, she looked every inch of Rathna. ஒழுங்காக நடித்திருப்பின் இந்த starcast அற்புதமான அனுபவத்தை பார்வையாளர்களுக்கு கொடுக்க கூடும். இந்த படத்தை ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன். தமிழிலும் தெலுங்கிலும் ஒரே நேரத்தில், ஒரே பெயரில் வெளிவருகிறதாம்.