21
Mon, May
0 New Articles

Panimalai

 

ரொம்ப நாளுக்கு அப்புறம் படித்த புத்தகம் இது. எனக்கு எண்டமூரியின் மீது ஏதோ ஒரு நம்பிக்கை. முதல் சில பக்கங்களிலேயே இது “பெண்மை” பற்றி பேசும் புத்தகம் என்று தெரிந்தாலும், அவருடைய “பந்தம் பவித்ரம்” போல இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் படித்தேன். அந்த கல்லூரியின் கடைசி நாளில் வைஜெயந்தி, அனுராதா, விசாலி மற்றும் பார்கவி ஆகியோர் சில வருடங்களுக்கு பிறகு குறிப்பிட்ட இந்த நாளில் இதே மரத்தடியில் மீண்டும் சந்தித்து தங்கள் வாழ்க்கை எப்படி போகிறது, என்னென்ன அனுபவங்கள் ஏற்பட்டன என்று பரிமாறிக்கொள்ளவேண்டும் என்று முடிவு செய்வதோடு கதை ஆரம்பிக்கிறது. அப்போதே நமக்கு தெரிந்துவிடுகிறது இது பெண்கள் எப்படி “ஆணாதிக்க” சமுதாயத்தில் கஷ்டப்பட்டு முன்னுக்கு வரப்போகிறார்கள் என்ற கதையாக இருக்கும் என்று. நான் ஏற்கனவே episode format பிரியன் என்பதால் ஆர்வமாக படிக்க ஆரம்பித்தேன்.

Pallavan Pandyan BhaskaranShift-ல் வேலை செய்யும்போது எப்போதுடா regular time-ல் வருவோம் என்று மனம் துடிதுடிக்கும். இப்போது மாலைகளில் வீட்டுக்கு வருவது என் அம்மாவுக்கு சங்கடமாக உள்ளது. காரணம் - அவர்களது மெகா சீரியல்கள் பார்ப்பது தடைபடுகிறது. வயதானவரை எதற்கு கஷ்டப்படுத்தவேண்டும் என்று என்னை அறைக்குள் சிறை வைத்துக்கொள்வதால் சில சமயம் SAP-ல் என்னை update செய்துகொள்வது, புத்தகம் படிப்பது என்று ஏதோ பொழுதுபோகிறது. அந்த வகையில் இன்று ஒரே மூச்சில் 328 பக்கங்கள் படித்து முடித்த புத்தகம் - “இந்திரா சௌந்தர்ராஜன்” எழுதிய “பல்லவன் பாண்டியன் பாஸ்கரன்”. இ.சௌ-வின் புத்தகங்களை படித்தவர்களுக்கு அவருடைய ஆன்மீக த்ரில்லர்களின் layout தெரிந்துவிடும். அதிலிருந்து அச்சு அசல் மாறாத அடுத்த assembly production இந்த “பல்லவன் பாண்டியன் பாஸ்கரன்”.

Marmadesamகிட்டத்தட்ட 90-களின் பிற்பகுதியில் - சன் டி.வி வீடுகளில் காலூன்ற ஆரம்பித்த சமயம் - cable TV connection இருந்த நகர்ப்புறங்களையும், டவுன்களையும் சொல்லப்போனால் கிட்டத்தட்ட முக்கால்வாசி தமிழகத்தை வியாழக்கிழமைகளில் பயமுறுத்தி முடக்கிய “பெருமை” கே.பாலசந்தரின் “மின் பிம்பங்க”ளுக்கும், இந்திரா சௌந்தர்ராஜன் - நாகா கூட்டணிக்கு மட்டுமே உண்டு. அவர்களது கைவண்ணத்தில் உருவான “மர்மதேசம்” தொடர் மூலம் தமிழக வாசகர்களின் முதுகுத்தண்டை உறையவைத்துக்கொண்டிருந்தது. முதலில் வந்த “ரகசியமாய் ஒரு ரகசியம்” ஒரு நாயை கொண்டு பயமுறுத்திக்கொண்டிருந்தது என்றால் அடுத்து வந்த “விடாது கருப்பு” ஒரு குதிரையை வைத்து தமிழ் நேயர்களை முடக்கிக்கொண்டிருந்தது. கடந்த முறை புத்தகங்கள் வாங்க போனபோது இது “விட்டுவிடு கருப்பா” என்ற பெயரில் புத்தகமாக பார்த்தேன், வாங்கினேன்.

Yandamoori Virendranathதெலுங்கு எழுத்தாளர் “யண்டமூரி” விரேந்திரநாத் தனது படைப்பான இந்த புத்தகத்தில் Abstract பாணி கதை சொல்லும் முயற்சியை கையாள முயற்ச்சித்திருக்கிறார். Abstract பாணி என்பது சில நிகழ்ச்சிகளை கொஞ்சம் மிகைப்படுத்தி படிக்கும் வாசகர்களை அதிர்ச்சி அடையவோ அல்லது amuse செய்தோ தான் சொல்லவந்ததை வேறு விதமாக அவர்களது மனதில் பதிக்கும் முறை. வித்யாதரி புத்தக கடையில் த்ரில்லர் என்ற புத்தகத்தை வாங்கி அதில் வெறும் வெள்ளைத்தாள்கள் மட்டுமே இருப்பதை கண்டு பொழுதுபோக்காக தன் அனுபவங்களை எழுத ஆரம்பிக்கிறாள். சிறிய வயதிலிருந்து சூழ்நிலைகள் காரணமாக ஆண்களை வெறுக்கும் வித்யாதரியை ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருந்து காப்பாற்றி தன்னுடைய காதலை சொல்கிறான் அனுதீப். அவ்வப்போது தன் காதலை நிரூபிக்க சில சில அதிசயங்களை நிகழ்த்திக்காட்டும் அனுதீப்பிடம் வித்யாதரிக்கு காதல் தலைதூக்கும் போதெல்லாம் அந்த அதிசய நிகழ்ச்சிகளுக்கு logical reasoning மூலம் காரணம் கற்பித்துக்கொண்டு வித்யாதரி அவனை மேலும் மேலும் அவமானப்படுத்துகிறாள். கடைசியில் அதிசயங்களின் உச்சக்கட்டமாக உலகமெங்கும் மின்சாரத்தை நிறுத்திவிடுகிறான் அனுதீப். அந்த ஆச்சரியத்தில் இருந்து மீளும் வித்யாதரிக்கு மிகப்பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது. பல இடங்களில் இந்த புத்தகம் Mushy romance என்னும் அளவுக்கு காதல் காதல் காதல் என்று ஒரே லெக்சராக இருக்கிறது. கடைசியில் அந்த எல்லாமே காதல் என்பது சுயநலமில்லாத எதிர்பார்ப்பில்லாத அன்பு, காதல் என்பது காரணங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு உணர்ச்சி என்கிற cliche-க்களுடன் முடிகிறது. கதை Abstract முயற்சி என்பதால் அனுதீப் யாரென்பதை வாசகர்களுக்கு தெளிவுபடுத்த எழுத்தாளர் விரேந்திரநாத்தே வித்யாதரியை பார்த்து விளக்கம் கூறிவிட்டு அவளிடம் இருக்கும் “த்ரில்லர்” நாவலை எடுத்துக்கொள்வதாக முடித்திருக்கிறார். புது வகையான முயற்சி என்பதால் பாராட்டலாம் என்றாலும் நீளத்தையும், பல இடங்களில் வளவளவென்று தேவைக்கு மீறிய வசனங்களையும் குறைத்திருந்தால் இன்னும் எடுபட்டிருக்கும்.

More Articles ...

Page 1 of 3

Monthwise Archives

Powered by mod LCA

You may also like...!