எவன் எதிர்த்தா என்ன? மயிறா போச்சு...

Ramblings
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கடந்த மாதம் தமிழகமே தன்னெழுச்சியாக தலைமை இல்லாமல் ஜல்லிக்கட்டுக்காக போராடிக்கொண்டிருந்த வேளையில் நான் எனது client side business partner- ஆஸ்திரேலியாவை சேர்ந்தவரிடம் இந்த போராட்டத்தை பற்றி சொல்லிக்கொண்டிருந்தேன். அது 4வது நாள். அவரிடம் மாணவர்கள் அமைதியாக போராடிக்கொண்டிருந்த வேளையில் காவல் துறை மெரீனா கடற்கறையில் மின்விளக்குகளை அணைத்துவிட்டதையும், அதற்கு பதிலாக மாணவர்கள் தங்கள் மொபைல் அலைபேசிகளில் உள்ள டார்ச்சை கொண்டு வெளிச்சமூட்டிய காட்சியை பற்றி சொல்லிக்கொண்டிருந்தபோது எனக்கு மயிர்கூச்செரிந்தது. அவரிடம் 7ம் நாள் முடிவில் காவல்துறை வன்முறையை கொண்டு அந்த போராட்டத்தை ஒடுக்கியதை சொன்னபோது - I feel sorry for those people என்று சொன்னார்.

நான் அவரிடம் சொல்லாமல் விட்ட விஷயம் ஒன்று உள்ளது. இப்படி மாணவர்களும், மக்களும் போராடி வாங்கிய வெற்றியை சில துரோகிகள் சசிகலா என்ற சதிகலாவின் காலடியில் வைத்து அவளது முயற்சியின் காரணமாகவே இந்த வெற்றி கிடைத்ததாக என் இனத்துக்கு இழைக்கப்பட்ட அநீதியை எப்படி சொல்வது?

ஆனால் இப்போது தமிழகத்துக்கு நேர்ந்துள்ள மானபங்கத்தை காணும்போது கோவில்கள் நிறைந்துள்ள தமிழகத்தில் உண்மையிலேயே தெய்வம் என்ற ஒரு சக்தி இருக்கிறதா என்ற கேள்வி தான் எழுகிறது. அரசியல்வாதிகள் ஊழல் செய்துவிட்டு தங்கள் மீது வழக்குகள் பாய்ந்து கைது செய்யப்பட்டாலோ இல்லை கைது செய்யப்படும் நிலைமை வந்தால் வழக்கறுத்தீஸ்வரர் கோவிலுக்கு சென்று பூஜை புனஸ்காரங்கள் செய்து வெளியே வந்துவிடுகின்றனர். திருப்பதி கோவில் அறங்காவலராக நியமிக்கப்பட்ட சேகர் ரெட்டியின் ஊழல் கண்டு நாடே தமிழகத்தை எள்ளி நகையாடியது. அப்படியென்றால் தெய்வங்களுக்கு தன்னை பூஜித்தால் போதும், பூஜை செய்பவன் எத்தகைய மகாபாவத்தை செய்தாலும் அவனை காப்பாற்றுவதற்கு தான் இருக்கிறதா? அப்படியென்றால் தருமம், நியாயம் என்ற போதனைகள் எதற்கு?

எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தார்போல மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டு வேலைக்காரி சசிகலா முதல்வராக பதவியேற்கும் நிலை வந்துள்ளது. அப்படியென்றால் வேலைக்காரிகள் என்றால் கேவலமா என்று சண்டைக்கு வராதீர்கள். அந்த பெண்மணிக்கு தான் முதல்வராகவேண்டும் என்ற அரிப்பு இருந்தால் மக்கள் மன்றத்தில் போட்டியிட்டு ஜனநாயக முறைப்படி வெற்றிப்பெற்று கட்சிப்பணியாற்றி தன்னை நிரூபித்த பிறகு பின்னர் முதலமைச்சராக வரட்டும். ஆனால் இப்படி புழக்கடை வழியாக திருட்டுத்தனமாக ஆண்மை இல்லாத எம்.எல்.ஏ-க்களை மிரட்டி முழு ஆதரவு இருப்பதாக காட்டிக்கொண்டு மக்கள் அவளை வெறுக்கிறார்கள் என்பது பரிபூரணமாக தெரிந்து எதை பற்றியும் கவலைப்படாமல் பதவி, அதன் மூலம் கிடைக்கும் அதிகாரம் மட்டுமே முக்கியம் என்று அலையும் கழிசடையை தமிழகம் தலைவியாக ஏற்குமே எனில் அது தமிழகத்தின் மற்றும் தமிழர் வரலாற்றில் ஒரு கரும்புள்ளியே.



அவளை முழுமனதாக தேர்ந்தெடுத்ததாக சொல்லும் வெள்ளையும் சொல்லையும் அணிந்து கொண்ட தே**** பசங்களை எம்.எல்.ஏ-க்களாக தேர்ந்தெடுத்த மக்களுக்கு நிச்சயம் ஒரு தண்டனை தான். தனது பதவியை காப்பாற்றிகொள்ள தன் குடும்பத்து பெண்களை மறுயோசனை இன்றி கூட்டிக்கொடுக்ககூடிய சாக்கடைகளை நாம் வீதியில் ஓடவிட்டது நமது தவறு தான். ஆனால் அதற்காக இந்த சதிகலா தமிழக முதலமைச்சரானால் அது தெய்வம் ஒன்று இருந்தால் அது தமிழக மக்களுக்கு இழைக்கும் மிகப்பெரிய அநீதி. எங்கெல்லாம் அதர்மம் தலைதூக்குகிறதோ அங்கெல்லாம் நான் அவதரிப்பேன் என்று பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் சொன்னதை படித்திருக்கிறேன். இந்த சமயத்தில் ஏதேனும் அற்புதம் நிகழ்த்தி தமிழ்கத்தை காப்பாற்றவில்லை என்றால் (1) இது அநீதி இல்லை என்று தெய்வம் சொல்கிறது அல்லது (2) தெய்வம் என்ற ஒன்றே இல்லை. இதில் எது நடக்கிறது என்று பார்ப்போம்.

Change.org petition - https://www.change.org/p/pls-sign-and-share-president-pls-stop-sasikala-from-becoming-tamilnadu-cm-dissolve-tn-govt?recruiter=677751713&utm_source=share_petition&utm_medium=copylink