இருமுகன் - அறு(வை)முகன்

Tamil
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தமிழ் சினிமாவில் science thriller-ஐ பார்த்து ரொம்ப நாளாச்சு.. கடைசியா பார்த்த நல்ல sci-fi என்ன என்று யோசித்தால் எனக்கு நினைவுக்கு வருவது "எந்திரன்" மட்டுமே..அதனால் sci-fi என்கிற ஆர்வத்தோடு இந்த 'இருமுகன்'-ஐ பார்க்க உட்கார்ந்தால்..... ஆ!!!! படம் செம ஜவ்வு.. அடுத்த காட்சியிலே என்ன நடக்கும், யார் என்ன பேசுவாங்க என்பதை என் குட்டிப்பையன் ஆதி கூட பட்பட்டென்று சொல்லிவிடுவான். அவ்வளவு amateurish.

 

இந்த படத்துல விக்ரம்-ஐ பார்த்ததும் எனக்கு தோனின ஒரே ஒரு கமெண்ட்.. "என்னா தாடி?"... நானும் போன ஒரு வருஷமா தாடி வளர்க்க முயற்சிபண்ணிட்டு இருக்கேன் ஆனா இந்த ஆளுக்கு மட்டும் எப்படி இவ்ளோ அடர்த்தியா வளர்ந்திருக்குன்னு பொறாமையே வந்திடுச்சு.. Dude-னு நினைச்சுக்கிட்டு முண்டா பனியனோடவும், biceps-ஓடவும், மீசையில்லாத தாத்தா மாதிரி இருக்குற விக்ரம் கூட டூயட் ஆடிட்டு உடனே நயன்தாரா 'செத்துப்'போனதும், கொடுத்த (மூன்று கோடியாமே சம்பளம்) காசுக்கு அவ்வளவு சீக்கிரம் சாக விட்டுட மாட்டாங்க.. அதனால திரும்ப வந்திடுவாங்கன்னு மனசு சொல்றதால இடைவேளை கார்டு போடுறதுக்கு நயன்ஸ் தன்னோட well toned back-ஐ காட்டிக்கிட்டே வரும்போது நமக்கு ஒன்னுமே தோனலை.. வந்துட்டியான்னு அங்கலாய்ச்சுக்க தான் முடியுது.

5வது படிக்கிற பிள்ளை அழுத்தம் திருத்தமா பேச்சுப்போட்டியிலே பேசுறது போல நித்யா மேனன் தன்னோட வசனங்களை "கண்டிப்பா" சொல்லும்போது என் உதட்டோரம் ஒரு சிரிப்பு ஒதுங்குவதை தவிர்க்க முடியலை. இந்த பெண் ஒருவகையில் சமர்த்து என்றே தோன்றுகிறது. நல்ல படமோ மொக்க படமோ... கிடைச்ச சான்ஸை எல்லாம் விடாம நடிச்சு தனக்குன்னு ஒரு வட்டம் சேர்த்துகிட்டு சமயம் கிடைக்கிறப்போ நல்ல வேஷம் கிடைச்சா வெளுத்து வாங்குது. Out of sight out of mind பிரச்சினை இல்லை... பார்வதி மாதிரி.

இது போன்ர படங்கள்ல antagonist அழுத்தமா இருந்தா மட்டுமே படம் எடுபடும் (உதாரணம் - தூம் series where the villians are played by the top most actors while heroes are the non-entity Abhishek and Uday Chopra). இங்கே வில்லனும் இல்லை, வில்லியும் இல்லை.. இடைப்பட்ட திருநங்கை தான் antagonist என்னும்போது ஒரு பரபரப்பான mind games வேண்டாமா? அதை விட்டுவிட்டு protagonist-ம் antagonist-ம் (வில்லன்னு எழுதுறதா இல்லை வில்லின்னு எழுதுறதான்னு தெரியலை.. அதனால antagonist-னு போட்டுக்குறேன்) நேருக்கு நேர் சந்திச்சுக்குறப்போ எல்லாம் அனல் பறக்காம ஏதோ ரெண்டு நண்பர்கள் காய் விட்டு மூஞ்சிய திருப்பிக்கிட்டு போகிற மாதிரி காட்சியமைப்புகள்.

இந்த படம் சூப்பர் ஹிட்டாமே... என்னால ஆச்சரியப்படாம இருக்க முடியலை. ஒரு வேளை இப்போ நயன்தாரா ஜாதகம் உச்சத்துல இருக்குறதால அவங்க ராசியிலே அவங்க தொட்டதெல்லாம் துலங்கிட்டு இருக்கா இல்லை நம்ம தமிழ் ரசிகர்கள் எல்லாம் காஞ்சி கிடக்குறாங்களான்னு தெரியலை.. எப்படியோ பணம் போட்டவர் தலையிலே துண்டை போட்டுக்கலைன்னு அவருக்காக மனிதாபிமான அடிப்படையிலே சந்தோஷப்படலாம். மத்தபடி ஒரு சராசரி ரசிகனா என்னால் ஒன்னும் சொல்லிக்கிறதுக்கு இல்லை.