Onion

Ramblings
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

எவ்வளவு நாளுக்கு தான் நான் user manual கணக்கா பதிவு போடுறது.. அவனவன் எழுத ஆரம்பிச்சு 2 வருஷத்திலே சுஜாதா கணக்கா எழுத ஆரம்பிக்கிறான் ஆனா என்னோட எழுத்து தரம் நாளுக்கு நாள் கீழே போயிட்டே இருக்குன்னு மனசாட்சி கிண்டலடிக்க... நானும் இனிமே கதை எழுதப்போறேன்னு முரசு அஞ்சல் சாப்ட்வேர் போட்டு வேர்டுபேட்-ஐ தொறந்து வச்சுகிட்டு என்ன எழுதன்னு யோசிக்க ஆரம்பித்தேன்.

நிறைய யோசிச்சதிலே ஒரு கதை எப்படி எழுதனும்னு ஒரு guidelines கிடைச்சுது..

1. நேரடியா விஷயத்துக்கு வரக்கூடாது. Detailing குடுக்குறேன்னு சுத்துவட்டத்துல காத்தடிக்கிறதையும், பக்கத்துல ஒரு பாட்டி பல்லு தேய்க்கிறதையும், தூரத்துல காக்கா பறக்கறதையும் பத்து பாராவுக்கு எழுதிட்டு அப்புறமா சாவதானமா விஷயத்துக்கு வந்தா தான் நம்மளையும் ஒரு எஸ்.ரா, ஜே.மோ -ன்னு நம்பும்.

2. கதையிலே சோகம் தூக்கலா இருந்தா தான் நாம எழுதறதை சீரியஸா எடுத்துக்குவாங்க.

3. கதையிலே ஒருத்தர் ரெண்டு பேருக்கு மேலே இருக்க கூடாது. அவங்க அதிகம் பேசக்கூடாது... அப்போ தான் கதாபாத்திரங்கள் மனசிலே அழுத்தமா பதியும்.

4. நாம என்ன சொல்ல வர்றோமுன்னு படிக்கிறவங்களுக்கு புரியணும்... ஆனா முழுசா புரியக்கூடாது.

5. இது எதுவும் இல்லன்னா கண்ணா பின்னான்னு நகைச்சுவையா இருக்கணும்...

மேலே சொன்ன எல்லா பாயிண்டுகளையும் டிக் அடிச்ச மாதிரி ஒரு கதை எழுதி அதை பதிவிடும் முன்னாடி படிச்சு பார்த்தப்போ என் கண் முன்னாடி பார்த்திபனும் வடிவேலுவும் தான் வந்தாங்க.. "நமக்கு தான் வரலையில்ல.." என்று பார்த்திபன் கொட்ட, வடிவேலு கணக்கா முழிச்சுகிட்டு "Shift+Del" அழுத்தினேன்.

என் பொழப்பே கதையா சிரிக்க, நான் என்ன கதை எழுதுறது...

Related Articles