Mid Life Crisis

Ramblings
Typography

36 வயதினிலே படத்தில் வந்த - நாலு கழுதை வயசானா எல்லாமே போச்சா.. நாப்பதுக்கு மேலே உன் வாழ்க்கை ஓடாத வாட்சா? "என்ற பாடல் எனக்குள் எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும். சமீபத்தில் ஒரு உளவியல் பதிவை படித்தபோது மிகவும் சுவாரசியமாக இருந்ததால் அதை குறித்து மேலும் பல பதிவுகளை தேடினேன். அதில் உங்கள் நடவடிக்கைகளில் கீழ்கண்டவை இருக்கிறதா என்று ஒரு 35 நடவடிக்கைகளை சொல்லியிருந்தார்கள். அவற்றில் சில எனக்கு பொருந்தியிருந்தது. வாழ்த்துக்கள்! நான் தற்போது நடுத்தர வயது குழப்பத்தில் (midlife crisis)இருக்கிறேன்.

அந்த 35 அறிகுறிகளில் எனக்கு பொருந்தியவை:-

 1. இருக்கும் நல்ல வேலையை விட்டுவிட தோன்றுவது - ஆம். எனது ஆஸ்திரேலியா குடியுரிமையை காப்பாற்றிக்கொள்ள இந்த கடைசி வருடத்தில் அங்கே இருக்கவேண்டும். அதனால் வேலையை விட்டுவிட்டு அங்கே போய் மீண்டும் தேடலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.
 2. காரணம் இல்லாமல் பிடித்த வேலையை செய்யும்போது சோகமாக இருப்பது - எனக்கு அவ்வப்போது mood swings ஏற்படுவது வழக்கம்.
 3. பழக்கவழக்கங்களில் மாற்றங்கள். ஒருகாலத்தில் மனதுக்கு பிடித்ததாக கருதப்பட்ட வேலைகளில் இப்போது கவனம் செலுத்த முடியாமல் தடுமாறுவது. - உண்மை, எனக்கு மிகவும் பிடித்த புத்தகங்கள் படித்தல், தஞ்சாவூர் ஓவியங்கள் வரைவது போன்ற பொழுதுபோக்குகள் இப்போது மிகவும் demanding- ஆக தோன்றுகிறது.
 4. நல்ல உடற்கட்டை பெற ஆர்வம் - உண்மை, கடந்த பிறந்தநாளிலிருந்து நான் உடற்பயிற்சிக்கு தயாராகி வந்து கடந்த இரு வாரங்களாக தீவிர உடற்பயிற்சி செய்து வருகிறேன்.
 5. உடல் ரீதியாக Free Flowing- movement (Running, Biking, Dance, Fast red sports cars, Sky diving, etc) மீது திடீர் ஆர்வம் - உண்மை.
 6. திடீரென்று புதிய இசைக்கருவி ஒன்றை வாசிக்க கற்றுக்கொள்ள ஆர்வம் தோன்றுதல் - உண்மை, சில மாதங்களுக்கு முன்பு கிடார் ஒன்று வாங்கினேன்.
 7. தூங்கும் பழக்கங்களில் மாற்றம், இயல்பான தூக்க நேரத்தை குறைப்பது - உண்மை, இப்போது எல்லாம் காலை 5 மணிக்கு எழுந்திருக்க முயற்சிக்கிறேன்.
 8. உணவு பழக்கங்களில் அதீத மாற்றங்கள் - உண்மை. இப்போது சாப்பாட்டில் நிறைய புரதங்களும், குறைந்த எண்ணெயும் சேர்த்து சாப்பிடுகிறேன்.
 9. திடீரென்று வைட்டமின், dietary supplements ஆகியவற்றை ஆரோக்கியத்துக்காக உட்கொள்ள ஆரம்பிப்பது - 100% உண்மை.
 10. புதிய உடைகளில் ஆர்வம், அழகாக தோற்றம் பெற கூடுதல் நேரம் செலவழிப்பது - உண்மை.தன்னை சுற்றியுள்ள சூழலை முற்றிலுமாக மாற்ற ஆசை - நிச்சயமாக இருக்கிறது.
 11. தன்னை விட மாறுபட்ட தலைமுறையுடன் அதிகமாக பழகி புதிய எண்ணங்களையும், புத்துணர்ச்சியும், பெற முயற்சிப்பது. - உண்மை, ஆனால் அது இப்போதைய பழக்கமல்ல. எனக்கு என்னுடைய சமவயது நண்பர்கள் மிக குறைவு. என் நண்பர்கள் என்னைவிட மூத்தவர்களாக இருப்பார்கள் அல்லது மிகவும் இளையவர்களாக இருப்பார்கள். நான் மிகவும் நெருக்கமான நண்பர்களாக கருதும் விஜயகிருஷ்ணன், அனன்யா அக்கா, பரந்தாமன் எல்லாம் என்னை விட பல வருடங்கள் மூத்தவர்கள். மேலும் சில நெருங்கிய நண்பர்கள் என கருதும் கோடீஸ்வர ராவ், சுதாகர், சதீஷ்குமார், வைத்தீஸ்வரன் எல்லாரும் என்னைவிட 8-12 வருடங்கள் இளையவர்கள்.
 12. சமுதாயத்தின் மீது அதிருப்தி - அது எப்போதுமே இருப்பது தான்.
 13. பொருளாதார ரீதியாக கூண்டுக்குள் மாட்டிக்கொண்டது போன்ற உணர்வு - உண்மை. பல முறை எனக்கு பிடித்த பொருட்களை வாங்க ஆசைப்பட்டு பின்னர் ஆசையை அடக்கிக்கொண்டுள்ளேன்.
 14. குடும்பத்தை விட்டுவிட்டு துறவரம் போய்விடலாமா என்ற எண்ணம் தோன்றுதல் - உண்மை. கடந்த வருடம் எனக்கு அப்படி தோன்றியது. ஆனால் ஆதியை வளர்க்க வேண்டிய தார்மீக பொறுப்பு என்னை கட்டிப்போட்டுள்ளது.
 15. மற்றவர்களுக்கு சொல்லித்தரவேண்டும் அல்லது mentor ஆகவேண்டும் என்ற எண்ணம் - அது எனக்கு கடந்த சில வருடங்களாகவே உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு எனது வேலையின் பாகமாக இல்லாமல், நட்பு அடிப்படையில் ஒரு college fresher-க்கு SAP training கொடுத்து, இப்போது அவன் நல்ல project-ல் இருக்கிறான்.
 16. எளிய வாழ்க்கைக்கு ஆசைப்படுதல் - எப்போது நாலு காடு சேர்த்துவிட்டு எங்கேனும் சிறிய ஊரில் சென்று செட்டில் ஆகிவிடுவோம் என்ற எண்ணம் ரொம்ப நாளாகவே எனக்கு உண்டு. அதற்காகவே long term onsite project கிடைக்காதா என்று அலைந்துக்கொண்டிருக்கிறேன்.
 17. செய்யவேண்டுமே என்பதற்காக சில செயல்களை செய்வது - உண்மை. Better left unsaid more about this.
 18. வாழ்க்கையில் அடுத்து என்ன செய்யப்போகிறோம்? என்ற கேள்வி அடிக்கடி தோன்றுதல். - உண்மை. இந்த பூமியில் பிறந்தோம், இறந்தோம் என்று வாழும் கூட்டத்தில் சேரப்பிறந்தவன் நான் அல்ல என்ற எண்ணம் எனக்கு பல வருடங்களாகவே உண்டு. ஆனால் இப்போது நான் வாழும் வாழ்க்கையில் நான் என்ன செய்துக்கொண்டிருக்கிறேன் என்ற ஆற்றாமையும் என்னை வாட்டுகிறது.
 19. சாவை பற்றி தத்துவார்த்தமாக யோசிப்பது - உண்மை. மக்கள் தாங்கள் இந்த பூமியில் நிறைவாக வாழ்ந்தது போதும் என்று தோன்றும்போது, அவர்கள் தங்கள் வாழ்க்கையை தாங்கள் விரும்பியது போல முடித்துக்கொள்ளும் உரிமை வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உண்டு.

இந்த list-ஐ படிக்கும் முன்னரே கடந்த சில மாதங்களாக எனக்கு ஒரு வெறுமை தோன்றியதை உணரமுடிந்தது. எனது வாழ்க்கையில் முக்கியமானவர்கள் எல்லோருமே அவர்களது வாழ்க்கையை அவர்களது terms & conditions-ல், அதுவும் எந்த ஒரு சமரசமும் இல்லாமல் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் நான் மட்டும் தான் அனைவரிடமும் மாட்டிக்கொண்டு எனது வாழ்க்கையை நான் விரும்பியவாறு வாழமுடியாமல் கம்பியில் அகப்பட்ட காத்தாடி போல வாழ்ந்துக்கொண்டிருப்பது போல ஒரு மூச்சு முட்டல். எப்போது கயிறு அறுகும், பட்டம் தன் இஷ்டத்துக்கு பறக்கும் என்பது போல ஒரு தேடல்..

அதே சமயம் பொருளாதாரமும் மூச்சு முட்டுகிறது. நான் இருக்கும் ஐ.டி துறையில் பாதுகாப்பின்மை அதிகம். அரசாங்க வேலை போல பென்ஷன் எல்லாம் கிடைக்காது. எனக்கு நாளை ஏதேனும் துர்மரணம் சம்பவித்தால் எனது சேமிப்பு தான் என் குடும்பத்துக்கு. இப்போது என்னிடம் அவ்வளவு சேமிப்பு எல்லாம் இல்லை.

ஒருவேளை இவை எல்லாம் என் ஆழ்மனதில் என்னை ஆழ்த்திக்கொண்டிருந்ததால் தான் என்னை நானே pamper செய்துக்கொள்ளும் ஆர்வம் வந்ததோ என்னவோ. அது தான் இத்தனை வருடங்களுக்கு பிறகு உடற்பயிற்சிக்கு என்னை இட்டுசென்றதோ? இந்த உடற்பயிற்சிகளால் உடல் அசதியாகி எல்லாம் மறந்து தூங்குவதில் ஒரு சந்தோஷமோ?

midlife2எனினும் நான் இந்த வெறுமையை போக்க மதுவையோ, இல்லை லாகிரி வஸ்துக்களையோ நாடாமல் உருப்படியான விஷயங்களை தேர்ந்தெடுத்து ஆறுதல். இந்த midlife crisis குறித்து மேலும் படித்தபோது இது எல்லாரும் பயமுறுத்தும் அளவுக்கு பயங்கரமான பிரச்சனை அல்ல என்றும், ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் மாற்றங்களை ஏற்படுத்தும் தருணம் என்றும் உணர்ந்தேன். இந்த தருணம் ஒரு மனிதனை உயர்த்தலாம் அல்லது வீழ்த்தலாம் - எந்த திசையில் செல்வது என்பது அவரவர் தீர்மானங்களை பொறுத்தது.

இதுவும் கடந்து போகும் - இந்த சமயத்தில் நான் மிகவும் தனிமையாக உணர்கிறேன். எனது நண்பர்கள் அனைவரும் அவரவர் வாழ்க்கையில் பிஸியாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அதனால் self help என்னும் சுய உதவி தான் என்னை உளவியல் ரீதியாக மேலும் பலமாக்கும். பொதுவாக 35-45 வயது ஆண்களும், பெண்களும் இந்த அழுத்தத்துக்கு ஆளாவார்களாம். தங்கள் பிரச்சினை என்னவென்று அறிந்தால், அதனை தீர்க்கும் வழியறிந்து நல்ல மாற்றங்களோடு முன்னேற 1-2 வருடங்கள் பிடிக்குமாம். சுஜாதா, பாலகுமாரன், ஜெயமோகன் என பல எழுத்தாளர்களும் தங்கள் புகழின் உச்சத்தை தொட்டது இந்த midlife crisis காலகட்டத்தில் தான். அவர்களை போல நானும் இந்த காலகட்டத்தில் என்னை மேன்மேலும் மெருகேற்றிக்கொள்வேன் என்ற நம்பிக்கையில் இதுவும் கடந்து போகும் என்று காத்திருக்கிறேன்.

Related Articles/Posts

'அம்மா' வானொலி..... ரொம்ப நாள் ஆச்சு... பதிவு எழுதி! இந்த காலகட்டத்துல என்னோட கூகுள் ரேங்க...

RIP - தமிழ்நாடு... கடந்த மாதம் தமிழகமே தன்னெழுச்சியாக தலைமை இல்லாமல் ஜல்லிக்கட்டுக்காக போ...

Objects without objectives...... {mosimage}Last week when cleaning the kitchen I came across lot of pol...

சாதி மோதிய காதல்..... கல்லூரியில் காதல்... சோதனைகள் வந்தபோதும் விடாது இணைந்து நின்று கல்யாணம...

Bye! Bye! Dubai... It is a strange feeling while I am typing this blog flying 35000 feet ...

About myself
Maheshwaran
Author: MaheshwaranWebsite: https://www.maheshwaran.com
I am a SAP Consultant in my late 30s, residing in the happeing IT City - Bangalore. My interests vary from reading to travelling to handicrafts to photography. My latest interest is on Body building. May be this vivid interest keeps me going in my life without getting bored.