Questions
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கடந்த வாரம் முக்கால்வாசி மக்கள் அறிந்திறாத மசாலா பத்திரிகையான குமுதம் ரிப்போர்ட்டரை சமூக வலையும், தேசிய தொலைகாட்சி சேனல்களும் பலருக்கு அப்படி ஒரு பத்திரிகை இருக்கிறது என்று நினைவுபடுத்தியது அவர்கள் பதிப்பித்திருந்த லெக்கிங்ஸ்ஸ் குறித்த கட்டுரையும், அதன் படங்களும். அவர்கள் எதிர்பார்த்தது போலவே அந்த controversy அந்த பத்திரிகையை talk of the town ஆக்கியது.  அந்த கட்டுரையை நான் இரண்டு தினங்களுக்கு முன்பு தான் படிக்க நேர்ந்தது. படித்தவுடன் அப்படியென்ன மோசமாக எழுதிவிட்டார்கள் என்று தான் தோன்றியது. படங்கள் விஷயத்தில் தான் கொஞ்சம் ஓவராக போய்விட்டார்கள். அந்த கலாட்டாவில் அவர்கள் சொல்லவந்த விஷயம் அடிபட்டுவிட்டது.

எனக்கு மட்டும் அதிகாரமிருந்தால் நானும் லெக்கிங்ஸுக்கு தடை போட்டிருப்பேன். முழுவதுமாக அல்ல, யார் அணியலாம், யார் அணியக்கூடாது என்று. எல்லோரும் சொல்வது போல உடை என்பது உடலை மறைக்கவே பிரதானமாக அணியப்படுவது, பின்னர் காலப்போக்கில் aesthetics உள்ளே நுழைந்து கவர்ச்சி அம்சமும் ஆனது. ஒரு உடையை தடை செய்வது என்பது போன்ற முட்டாள்த்தனமான செயல் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அணிபவர்களுக்கு எந்த உடையை எப்போது, எப்படி அணியவேண்டும் என்ற பொறுப்புணர்ச்சியும் இருக்கவேண்டும். நமது ஊரில் trend ஆகும் எந்த உடையுமே சினிமாவை பிரதியெடுக்கப்படும் உடை தான். அந்த வகையில் லெக்கிங்ஸும் சினிமாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது தான். இன்று லெக்கிங்ஸ் அணியும் 99% சதவிகிதம் பெண்கள் முதலில் சினிமாவிலிருந்தோ இல்லை தொலைகாட்சியிலிருந்தோ தான் கவரப்பட்டிருக்கவேண்டும். அதில் அணியும் கதாநாயகிகள் அழகாக tone செய்யப்பட்ட உடலில் இந்த லெக்கிங்ஸ்களை அணியும்போது பார்க்க அழகாக இருக்கும். ஆனால் சினிமாவில் வரும் எல்லா உடைகளையும் நாம் தினசரி வாழ்வில் அணியமுடியுமா என்று யோசிக்கிறோமா?

leggings 3

சரி, நான் ஆணாதிக்கக்காரனாகவே இருந்துவிட்டு போகிறேன். லெக்கிங்ஸ் போடும் உடல்வாகுள்ள பெண்கள் அதை அழகாக, ரசிக்கும் விதமாக dignified-ஆக உடுத்தட்டும், நாங்கள் கண் குளிர ரசிக்கிறோம். ஆனால் அதை உடம்பெங்கும் தனித்தனியாக சதை பிதுக்கிக்கொண்டு இருக்கும் பெண்கள் இந்த உடம்போடு இறுகும் லெக்கிங்ஸ்களை போடும்போது பார்ப்பவர்களுக்கு Nightmare தான்.  ஒவ்வொருவருக்கும் தாங்கள் அழகு தான். மறுப்பதற்கில்லை. ஆனால் பார்பவர்களுக்கு அப்படி இல்லையே? என் வாழ்க்கை, நான் அப்படி தான் என்பது எல்லாம் அவர்களது வீட்டு சுவர்களுக்குள்ளே தான். பொது இடம், சமுதாயம் என்று வந்துவிட்டால் we have to play to the gallery. ஹ்ரித்திக் ரோஷன் சாலையில் வெற்று மார்போடு நடந்தால் அது செய்தி, எதிர்ப்புகளை விட ரசிப்பவர்கள் அதிகம். ஆனால் நான் என்னை ஹ்ரித்திக் ரோஷன் என்று நினைத்துக்கொண்டு சட்டை இல்லாமல் தெருவில் போனால் கல்லடி படலாம், வெறி நாய் என்னை துரத்தலாம், என் மேல் public nuisance வழக்கு பாயலாம். ஆனால் என் வீட்டுக்குள் நான் வெற்று மார்போடு இருக்கிறேனா இல்லை என்பதை பார்த்து கேலி, கிண்டல் செய்யும் உரிமை யாருக்கும் இல்லை. அதே லாஜிக் தான் இங்கும். பொது இடத்துக்கு வரும்போது மற்றவர் கண்களை, கவனத்தை உறுத்தாத வகையில் உடை அணிவது நமது கடமை. அதை செய்ய தவறிவிட்டு - இந்த சமுதாயம் கெட்டுவிட்டது, என் வாழ்க்கை, என் உரிமை -என்று புலம்புவது அனாவசியம்.

இப்போது எல்லாம் சுரிதாரில் slit என்று ஒன்று வைக்கிறார்களே எதற்கு? முதலில் சுரிதாரில் slit-ஏ கிடையாது. பின்னர் நடக்கும்போது கால்கள் எட்டிவைத்து நடப்பதற்கு கஷ்டமாக இருக்கிறதே என்று பக்கவாட்டில் கொஞ்சம் slit வைத்தார்கள். பின்னர் அது மேலே ஏறி ஏறி இப்போது side slit என்பது இடுப்புக்கு மேலே போய்விட்டது.  இப்படி slit-ஐ ஏற்றியதால் பெண்கள் என்ன நாலு கால் பாய்ச்சலிலா நடக்கிறார்கள்? இல்லையே? இந்த நீண்ட slit-ஆல் சுரிதார் பேண்ட்டுக்கும், slit ஆரம்பத்துக்கும் இடையே இடுப்பு காண்பிப்பது என்பது fashion ஆகிவிட்டது.  கொஞ்சம் வேகமாக காற்று அடித்தால் முன்பக்கமும் பின்பக்கமும் பறந்து  **-ஐ அப்பட்டமாக காட்டுவது தான் மிச்சம். இன்னும் கொஞ்ச நாளில் இந்த slit அக்குள் வரைக்கும் ஏறி, பிராவை காட்ட ஆரம்பித்துவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

leggings 1

கோவில்களில் உள்ள சிலைகள் எல்லாம் மேலாடை இல்லாமல் மார்பகங்களை காட்டியவாறு தானே உள்ளது ஆனால் பெண்கள் கொஞ்சம் உடம்பு தெரிவது போல உடையணிந்தால் இந்த ஆண்களுக்கு என்ன பிரச்சனை? என்று கேட்கு பெண்ணியவாதிகளே... ஆங்கிலத்தில் - context - என்ற வார்த்தை ஒன்று உள்ளது. சூழலுக்கேற்றபடி அர்த்தம் எடுத்துக்கொள்வது என்று சொல்வார்கள். உங்கள் உடைகளும் இடத்துக்கேற்ற மாதிரி, உங்கள் உடல் வாகுக்கேற்ற மாதிரி இருந்தால் பார்ப்பவர்களுக்கு விகல்பமாக தோன்றாது. பச்சையாக உதாரணம் சொல்லவேண்டுமென்றால் - நடிகை தமன்னா கச்சை கட்டி ஆடியதை யாரும் ஆபாசம் என்று முகம் சுழித்ததில்லை. மாறாக sensuous, அழகு என்று ரசித்தவர்கள் தான் அதிகம். ஆனால் அதைவிட கொஞ்சம் அதிகமாக நடிகை அஞ்சலி அணிந்து ஆடியபோது அதை ஆபாசம் என்று திட்டியவர்கள் அதிகம். இருவரும் நடிகைகள் தான்.. ஆனால் ஏன் இந்த வேறுபாடு? அவரவர் உடல்வாகு என்றுனொன்று உண்டு. அதற்கேற்ப ஆடை அணிந்தால் பார்ப்பவர்கள் கண்களில் மரியாதையோ இல்லை admiration-ஓ பெறலாம். சில வருடங்களுக்கு முன்பு மேற்கத்திய உடைகள் அணிய முயற்சித்து கேலி கிண்டல்களுக்கு ஆளான வித்யா பாலன் பின்னர் தன் உடல்வாகுக்கேற்ப புடவைகளுக்கு மாறி, சேலையை மீண்டும் fashion ஆக்கியதும் case study தான்.

leggings 2


ரொம்ப அழகான பெண்கள் டைட் ஜீன்ஸ், மினி ஸ்கர்ட் என்று எது போட்டாலும் பார்ப்பவர்கள் ரசித்து ஜொள்ளு விடுவதோடு நிறுத்திக்கொள்வார்கள். ஆனால் இந்த அட்டு ஃபிகர்கள் தான் தங்களை தேவதைகள் என்று நினைத்துக்கொண்டு அலப்பறை செய்து தெருவில் வாங்கிக்கட்டிக்கொண்டு  இந்த சமுதாயம் கெட்டுவிட்டது என்று ஊரை கூட்டும். இந்த low cut சுரிதார்களோ, குர்தாக்களோ அணியும் பெண்கள் - கொஞ்சம் குணிந்தாலே முக்கால்வாசி மார்பகங்களை காட்டும்படி அணிபவர்கள் - அவர்கள் தங்கள் மார்பகத்தை மற்றவர்கள் பார்க்கவேண்டும் என்பதற்காகத் தான் அப்படி போடுகிறார்கள் என்பதை மறுப்பார்களா? டைட்  லெக்கிங்ஸும், short kurta-க்களும் அணியும் பெண்களுக்கு தெரியாதா - இந்த உடையால் தங்கள் தொடைகளும், பின்புறமும் அப்பட்டமாக தெரியும் என்று? இருந்தாலும் அவர்கள் அணிவது அடுத்தவர்களின் கவனத்தை கவரட்டும் என்பது தானே? இதில் பாதி sexually aggressive கேஸுகள், மீதி பாதி என்ன செய்கிறோம் என்று அதன் தீவிரத்தை உணராதவர்கள். ஆக கடைசியா என்ன சொல்ல வர்றேன்? லெக்கிங்ஸ், நைட்டி எல்லாம் வீட்டுக்குள்ளே போட்டுக்கோங்க. சுரிதார்களில் slit-களை தொடையோடு நிறுத்திக்கொள்ளுங்கள். உங்கள் உடைகள் பார்ப்பவர்கள் கண்களில் மரியாதை ஏற்படுத்தாவிட்டாலும், உங்களை objectify செய்யக்கூடாது.