Yandamoori Virendranath
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

Pallavan Pandyan BhaskaranShift-ல் வேலை செய்யும்போது எப்போதுடா regular time-ல் வருவோம் என்று மனம் துடிதுடிக்கும். இப்போது மாலைகளில் வீட்டுக்கு வருவது என் அம்மாவுக்கு சங்கடமாக உள்ளது. காரணம் - அவர்களது மெகா சீரியல்கள் பார்ப்பது தடைபடுகிறது. வயதானவரை எதற்கு கஷ்டப்படுத்தவேண்டும் என்று என்னை அறைக்குள் சிறை வைத்துக்கொள்வதால் சில சமயம் SAP-ல் என்னை update செய்துகொள்வது, புத்தகம் படிப்பது என்று ஏதோ பொழுதுபோகிறது. அந்த வகையில் இன்று ஒரே மூச்சில் 328 பக்கங்கள் படித்து முடித்த புத்தகம் - “இந்திரா சௌந்தர்ராஜன்” எழுதிய “பல்லவன் பாண்டியன் பாஸ்கரன்”. இ.சௌ-வின் புத்தகங்களை படித்தவர்களுக்கு அவருடைய ஆன்மீக த்ரில்லர்களின் layout தெரிந்துவிடும். அதிலிருந்து அச்சு அசல் மாறாத அடுத்த assembly production இந்த “பல்லவன் பாண்டியன் பாஸ்கரன்”.

பழங்காலத்தில் நடப்பதாக ஆரம்பிக்கிறது இந்த நாவல். ஒரு சில பக்கங்களிலேயே இந்த பக்கங்களை எழுதியது மதுரையில் வசிக்கும் எழுத்தாளர் பாஸ்கரன் என்று நவீன காலத்துக்கு தாவுகிறது கதை. சமணீயநல்லூர் அருகே உள்ள பெருமாள்கரடு என்னும் ஊரில் கற்சிலை ஒன்று பேசுவதாக சக்திவேல் என்னும் வாசகன் ஃபோன் செய்து பாஸ்கரை அந்த ஊருக்கு அழைக்கிறான். அங்கே ஒரு கல்வெட்டில் பாஸ்கரன், சக்திவேல், அருள்மொழி ஆகியோரின் பெயர்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியுறுகிறார்கள். அந்த பெருமாள் கரட்டில் ஏறும் ஆட்கள் அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் மரணத்தை தழுவ, கடைசியில் அங்கே புதைக்கப்பட்டிருக்கும் மீனாட்சியின் தங்க விக்கிரகமும் அதை காவல் காக்கும் சமண துறவிகளின் ஆவியும் தான் காரணம் என்று முடிவு செய்யப்படுகிறது. ஆனால் முடிவில் அவை மனித சூழ்ச்சி என்று கதையை முடிக்கிறார்.

இந்திராவின் plot-கள் இந்நேரத்துக்கு அத்துபடியாகி விட்டதால் ஆரம்பத்திலிருந்தே எந்த சஸ்பென்ஸும் இல்லை. கதையில் நுழையும் ஒவ்வொரு கதாபாத்திரமும் பின்னர் எப்படி வண்ணம் மாறுவார்கள் என்று நாம் யூகிக்கும் விதத்தில் கச்சிதமாக செய்கிறார்கள். வழக்கமாக இந்திரா கோவில்களின் பின்னணியில் மனித மனங்களின் சூழ்ச்சியில் உருவான திட்டங்களை கூறுவார். ஆனால் இதில் பக்திக்கு பதிலாக அமானுஷியத்தை கையில் எடுத்திருக்கிறார். பாஸ்கரனை convince செய்ய என்று ஏகத்துக்கும் கட்டுகதைகளை அள்ளித்தெளித்து, அவை கட்டுக்கதை என்பதை நாம் எளிதில் யூகிக்கும்படி எழுதி, படிப்பவர்களை ”போதுமடா சாமி” என்னும் அளவுக்கு துப்பித்தள்ளியிருக்கிறார்.

கதையில் ஏகப்பட்ட ”ஏன், எப்படி”கள்... சக்திவேலுக்கு மட்டும் கற்சிலை பேசுவதாக ஏன் வரவேண்டும்? பெருமாள் கரட்டில் நடப்பது எல்லாமே மனித செயல் என்றால் சொல்லிவைத்தாற்போல மகேஸ்வரி, இன்ஸ்பெக்டர் ரத்னம், வராகன் ஆகியோரின் மரணத்துக்கு என்ன காரணம்? சும்மா effect-க்காகவா? சரபேஸ்வரர் சிலை, யானை மாலை போடுவது எல்லாம் setup என்று சிறு குழந்தை கூட சொல்லும். அதுபோல எல்லாமே நாடகம் என்னும் பட்சத்தில் அந்த மீனாட்சி சுந்தரத்தின் யானைமலை பயணம், அதை தொடர்ந்து அருள்மொழியை அழைத்து செல்வது யாருக்காக? படிப்பவர்களி அனவசியமாக திசைதிருப்பவா?

இந்திரா சௌந்தர்ராஜன்முன்பு ஒருமுறை இந்திரா எழுதிய “சிவம்” குறித்த பதிவில் சொன்னது இதற்கும் பொருந்தும். இதுவும் கிட்டத்தட்ட “சிவம்” போல எதிர்பார்ப்பை ஏற்றி புஸ்வானம் ஆக்கிய கதை தான். இப்போது தான் கவனித்தேன் - இந்த நாவலை எழுதி 10 வருடங்கள் ஆகிவிட்டனவாம். கிட்டத்தட்ட “விட்டுவிடு கருப்பா”, “சொர்ணரேகை” எழுதிய காலகட்டத்திற்கு அடுத்து. ஒருவேளை இந்திராவுக்கு சரக்கு தீர்ந்து வருவதை இந்த நாவல் காட்டியிருந்ததோ? படிக்க வேறு புத்தகம் கிடைக்கவில்லை என்றாலொழிய இந்த புத்தகத்தை don't even touch with a bargepole.

புத்தக விவரம்:-
பதிப்பாளர்கள்: திருமகள் நிலையம், வெங்கட்நாராயணா சாலை, சென்னை.
பக்கங்கள்: 328
விலை: ரூ. 100/-