Internet
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

JaxtrSMSஎன்னடா இந்த பையன் அடுத்த Android post போட்டிருக்கான்... அவன் கிட்டே smartphone இருக்குறதை காமிக்கிறானோன்னு நினைச்சுக்காதீங்க... இன்னைக்கு காலையிலே ரொம்ப யதேச்சையா இந்த Android app-ஐ பார்த்தேன். Deccan Herald பேப்பர்ல ஒரு மூலையிலே குட்டியூண்டா Hotmail founder-ஆன சபீர் பாட்டியா தான் புதிதாக உருவாக்கிய JaxtrSMS என்ற அவருடைய free SMS application நல்ல வரவேற்பை பெரும் என்று நம்புவதாக சொல்லியிருந்தார். நமக்கு தான் Android, application-ங்குற வார்த்தைகளை பார்த்தாலே கை உதற ஆரம்பிச்சிடுமே. உடனே எனது mobile-ல் download செய்துபார்த்தேன். சரி! அது என்ன JaxtrSMS?

இந்த app-ன் மூலம் உலகின் எந்த நம்பருக்கும்... ஆமாம் உலகமெங்கும் இலவசமாக SMS அனுப்பலாம். இந்த SMS-ஐ பெறுபவர்களின் mobile-ல் இந்த JaxtrSMS பதியப்பட்டிருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. எனது மிக நெருக்கமான நண்பர்கள் எல்லாம் வெளிநாட்டில் இருப்பதால் நான் இது போன்ற ஒரு அம்சத்தை web based-ஆகவேனும் கிடைக்குமா என்று தேடிக்கொண்டிருந்தேன். உதாரனம் - way2sms.com ஆனால் அப்படி எதுவும் கிடைக்கவில்லை. வரப்பிரசாதமாக இந்த application கிடைத்ததும் உடனே அகிலாவுக்கும், ஆஸ்திரேலியாவில் உள்ள விஜயகிருஷ்ணனுக்கும் SMS அனுப்பினேன். இருவரும் தங்களுக்கு SMS கிடைத்துவிட்டதை உறுதி செய்தார்கள்.

இதை Android Phone கூட வரும் default application-க்கு மாற்றாக கூட உபயோகித்துக்கொள்ளலாம் (வெறுமனே அனுப்ப மட்டும்) என்ற option இருந்ததால் அதையும் முயற்சித்தேன். உங்களிடமும் Android phone இருக்குமானால் Android market-ல் JaxtrSMS என்று தேடிப்பாருங்கள். உபயோகித்துவிட்டு பயனுள்ளதாக இருந்தால் பின்னூட்டம் இடவும்.

Related Articles