Ramblings
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

Playschoolநேத்திக்கு என்னோட நண்பர் கிட்டே பேசிகிட்டே இருந்தப்போ புட்டுவை (ஆதித்யா) ஸ்கூல்ல போடுறது பத்தி பேச்சு வந்துச்சு. அவனுக்கு ரெண்டு வயசு முடிஞ்சுடுச்சே அப்போ இன்னும் ஆறு மாசத்துல ப்ளே ஸ்கூல்ல போட்டுடுங்கன்னு சொன்னார். எனக்கு என்னவோ அதில் உடன்பாடு இல்லை. அதுங்க LKG-க்கு ஓட ஆரம்பிச்சா அடுத்து 20 வருடங்களுக்கு (PG உட்பட) ஸ்கூலுக்கு ஓடிகிட்டே இருக்கனும். இதிலே எதுக்கு ஒரு வருஷம் முன்னாடியே ஓடவிடனும்னு தோணுது. முன்னாடி பெற்றோர்கள் ரெண்டு பேரும் வேலைக்கு போறதால குழந்தையை பாத்துக்க நேரமில்லாம Creche, உடனே Play Schoolனு போட்டாங்க. அது பின்னே Peer Pressure-ல “பக்கத்து வீட்டு புள்ள Play School போகுது, நம்ம புள்ளக்கு முன்னாடியே ABCD கத்துகிச்சு”ன்னு பெற்றோர்கள் முண்டியடிச்சு சேர்த்து இப்போ PlaySchoolங்குறது ஒரு Norm ஆகவே மாறிப்போச்சு. My parents dote on Buttu. அவங்களும் அவன் கூட இன்னும் கொஞ்ச நாள் செலவழிக்கட்டுமே.

எனது கவலை எல்லாம் குழந்தைகள் அவர்களுடைய innocence-ஐ சீக்கிரம், அதாவது அந்த வயதுக்கு முன்னாடி இழந்துவிடக்கூடாது என்பது தான். அகிலாவின் நண்பர் ஒரு நாள் சொன்னார் - அவருடைய பையன் படிக்கும் Pre School-ல் காலாண்டு தேர்வாம். Alphabets, 5-10 Rhymes எல்லாம் அதில் இருக்கிறதாம். அந்த குழந்தை பள்ளிக்கு போக தினற என்னவென்று இவர் விசாரிக்க Pre School-ல் பரிட்சை பயம் பையனை தொற்றிக்கொண்டதை தெரிந்துக்கொண்டாராம். பின்னர் பள்ளிக்கு சென்று ஏன் என்று விசாரித்தால் “அடுத்த வருஷம் பள்ளிக்கு போகும்போது இதெல்லாம் வரும்” என்று சொன்னார்களாம். அதற்கு அவர் “அடுத்த வருடம் வரும் என்றால் அப்போது படித்துக்கொள்ளட்டுமே. எல்லாத்தையும் இப்போவே படிச்சுட்டா அடுத்த வருஷம் என்ன பண்ணப்போறான்?” என்று ஆச்சரியப்பட்டார்.

என்ன தான் இப்போதைய பிள்ளைகள் கல்லூரிக்கு போனாலும் அவர்கள் இன்னும் பள்ளியில் இருப்பது போலவே இருக்கிறார்கள். கல்லூரி வாழ்க்கை என்பது school life-ன் தொடர்ச்சியாகவே மாறிவிட்டது. கல்லூரி வாழ்க்கையில் நாங்கள் அனுபவித்த சுதந்திரம் இப்போதைய மாணவர்களுக்கு கனவு தான். சரியாக 70% attendence மட்டும் maintain செய்துவிட்டு மீதிக்கு கல்லூரியை கட் அடித்துவிட்டு சந்தோஷமாக இருந்தோம். சினிமாவுக்கு போவோம், இல்லை ஊருக்கு போவோம்... அது மாணவர்களை பொறுத்து.

அப்போதெல்லாம் கல்லூரிக்கு வந்த உடனேயே பறவைக்குஞ்சுக்கு சிறகு முளைத்துவிட்டது போன்ற உணர்ச்சி. வெறும் syllabus-ஐ மட்டும் வாங்கிக்கொண்டு நாங்களே reference materials தேடிப்பார்த்து, Group study செய்து... ஒருவித முதிர்ச்சி / responsibility இருந்தது. ஆனால் இப்போதைய கல்லூரி மாணவர்கள் Uniform போட்டுக்கொண்டு, காலேஜ் பஸ்ஸில் போய், விடுப்பு எடுக்கும் நாட்களுக்கு அப்பா அம்மாவிடம் கையெழுத்து வாங்கி, சில காலேஜ்களில் ரேங்க் கார்டு கூட வருகிறது. இப்போது கல்லூரி கூட வெறும் மார்க் வாங்கி campus placement-ல் வேலைக்கு போகத்தூண்டும் agency போல ஆகிவிட்டது.

எனக்கு ஆதியை small town sensibility உள்ள ஒரு படாடோபமில்லாத பள்ளியில் போடவேண்டும் என்று தோன்றுகிறது. அப்போது தான் அவன் யதார்த்தத்தோடு ஒத்து இருப்பான் என்பது என்னுடைய நம்பிக்கை. என்ன நடக்கப்போகிறதோ என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். மேலும் முன்பேனும் குழந்தைகளுக்கு நிறைய தகவல்கள் தரவேண்டும் என்ற ஆர்வத்தில் நாம் நிறைய மெனக்கட்டோம். ஆனால் இப்போதைய குழந்தைகளுக்கு Inormation overflow தான் ஆகிறது. அவர்கள் வயதுக்கு மீறி நிறைய விஷயங்கள் அவர்களுக்கு கிடைக்கிறது. அவர்களுக்கு எது கிடைக்கக்கூடாது என்று தடுப்பதே பெரிய விஷயமாக இருக்கிறது.