Miscellaneous
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மின்னல் மழை மோகினிஉடல் பொருள் ஆனந்தி’ படித்ததிலிருந்து ஜாவர் சீதாராமனின் ரசிகனாக மாறிய பின்பு படித்த நாவல் தான் ‘மின்னல் மழை மோகினி’. இதுவும் ‘உ.பொ.ஆ’ போலவே supernatural thriller-ஆக இருக்கும் என்ற நினைப்பில் வாங்கினேன். இதிலும் ஆரம்பம் ‘A' class... 'matter இல்லேங்க... தரமானதுன்னு சொன்னேன்’. அதே இடி, மின்னல், மழை பின்னணியில் நமது கதாநாயகி மோகினி அறிமுகம் ஆகிறாள் - குழந்தையாக. ஆனால் அவள் பேய் இல்லை. வாழ்க்கையில் அதீத அழகே ஆபத்தாக மாற, தகுந்த உறைவிடம் தேடி அலையும் அபலையாக வருகிறாள். படித்து முடித்துவிட்டு புத்தகத்தை மூடிவைத்து அசைபோடுகையில் - ’இது ஒரு அபலை பெண் குழந்தை தனது நல்ல மனதுக்காக ஒரு நல்ல வாழ்க்கை அமையப்பெறும் பயணம்’ என்பதை சாராம்சமாக உணரமுடிகிறது. ஏனோ.. இந்த புத்தகத்தை ஆமை வேகத்தில் படித்தேன். முதல் 150 பக்கங்களை படிக்க பல மாதங்கள் ஆனது. ஆனால் மீதி 300 பக்கங்களை கடந்த வாரம் சேலம் - பெங்களூரு பயணத்தில் கிட்டத்தட்ட 2-3 மணி நேரங்களிலேயே கடந்துவிட்டேன்.

எனது ‘உடல் பொருள் ஆனந்தி’யை துபாயில் ரவி என்ற மேலாளர் வாங்கிகொண்டுவிட்டதால் எனக்கு என்று அடுத்த பிரதியை தேடி சென்னை ‘அல்லையன்ஸ் பதிப்பகத்துக்கு’ போனபோது Out of print என்று சொன்னார்கள். அடுத்த பதிப்பு எப்போது என்று காத்துக்கொண்டிருக்கிறேன். ஒருவேளை பழைய பதிப்பு புத்தகம் பிரதி ஒன்று உங்கள் கண்களில் பட்டால், அதை வாங்கிக்கொண்டு எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பவும்.... உலகின் எந்த மூலையில் இருந்தாலும் நான் வந்து வாங்கிக்கொள்கிறேன்.

புத்தகவிவரம்:
பதிப்பாளர்கள்: அல்லையன்ஸ் பதிப்பகம், மயிலாப்பூர், சென்னை
பக்கங்கள்: 468
விலை: ரூ. 150/-