Sujatha
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இதற்கு பெயரும் கொலைசமீபத்தில் அடுத்தடுத்து படித்த சுஜாதாவின் நாவல் இது. வழக்கம் போல சுஜாதா ஒரு கொலைக்களத்தை எடுத்து விறுவிறுப்பாக கையாண்டிருக்கிறார். வழக்கம் போல கணேஷும், வசந்தும் வருகிறார்கள் என்ற போதும் இம்முறை பாத்திரப்படைப்பில் கொஞ்சம் வித்தியாசம். உதாரணம் - வசந்த் அடிக்கடி பேசும் தே*** பையா மற்றும் இதர கெட்ட வார்த்தைகள். கணேஷ் இதில் இன்ஸ்பெக்டர் இன்பானந்தியை காதலிக்கிறான். வேறு எந்த நாவலிலாவது கணேஷ் கல்யாணம் ஆனதாக வந்ததா என்று யாருக்காவது தெரிந்தால் சொல்லவும். மற்றபடி வழக்கில் இறங்கியதும் துப்பறியும் அந்த வேகம் வழக்கமான துறுதுறுப்பு.


கதை ஆரம்பத்தில் டி.வி ஸ்டார் ப்ரேரணா சந்தர் தன் கணவன் தூக்கில் தொங்க முயற்சிப்பதாக சொல்லி படபடப்புடன் கணேஷ் வசந்தை அழைக்கிறாள். சந்தேகப்பிராணியான அவள் கணவனின் மறைவு அவளுக்கு ஒருவித ஆசுவாசத்தை தருகிறது. ஆனால் அதற்குள் அவளுக்கு மட்டுமல்லாமல் அவளுக்கு உதவும் வசந்த்துக்கும், ப்ரேரணாவை கைது செய்ய வரும் இன்ஸ்பெக்டர் இன்பானந்திக்கும் கொலை மிரட்டல்கள். போதாக்குறைக்கு கள்ளத்தொடர்பு வைத்திருக்கும் பெண்கள் மூவர் அடுத்தடுத்து கொல்லப்பட, killer on the loose என்னும் பதற்றமான சூழல் உருவாகிறது. கடைசியில் ப்ரேரணாவின் தங்கை பிணைக் கைதியாக கடத்தப்பட, கடைசியில் ஒரு பதற்றமான என்கவுண்டரில் அந்த கொலையாளி செல்லப்பா கைது செய்யப்படுகிறான்.

கதையில் பல இடங்களில் ஒருவித dejavu எனப்படும் முன்னமே கேட்ட / பார்த்த effect. கொஞ்சம் சினிமாத்தனமான என்கவுண்டர் கிளைமேக்ஸ். அடுத்த பலவீனம் என்று பார்த்தால் கொலைகாரன் கண்டுபிடிக்கப் பிறகும் வளரும் கதை. ஒருவேளை சுஜாதாவின் கடைசி கால நாவல்களில் ஒன்றாக இருந்ததனால் அந்த முந்தைய spark இல்லாமல் இருந்திருக்கலாம். ஒரு வேளை சுஜாதா உயிரோடு இருந்து இப்போது நாவல் எழுதியிருந்தால் கணேஷை சம்சாரியாக்கி குழந்தையோடு உலாவ விட்டிருப்பாரோ என்னவோ.

பதிப்பாளர்கள்: விசா பதிப்பகம், சென்னை
பக்கங்கள்: 200
விலை: ரூ. 75/-
இதை படித்தவர்கள்: {oshits} உங்களையும் சேர்த்து!!!