Relationships
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

Facebookபொதுவா நான் அலுவலக வாழ்க்கையையும், சொந்த வாழ்க்கையையும் முடிஞ்ச அளவுக்கு கலக்காம வச்சுக்க முயற்சிப்பேன். அப்படியும் சில சமயங்கள்ல நம்ம கொள்கைகளுக்கு பாதகம் நேர்ந்திடும். Project-ல சேர்ந்த உடனே ’உங்களுக்கு Facebook-ல invitation அனுப்பியிருக்கேன். Accept பண்ணிக்கோங்க’ன்னு சொல்லுவானுங்க பாசக்கார பயபுள்ளைங்க. மாட்டேன்னும் சொல்ல முடியாது. உங்க அலுவலக நண்பர்களை Facebook / Orkut-ல சேர்த்துக்குறதுங்குறது தடி குடுத்து அடிவாங்குற மாதிரி... இன்னும் coloqial-ஆ சொல்லனும்னா “சொந்த காசுல சூனியம் வச்சுக்குற மாதிரி”. அதுலயும் நமக்கு தினப்படியா Status message போடுற பழக்கம் இருந்துச்சுனா இன்னும் பிரச்சினை. உடம்பு சரியில்லைன்னு சொல்லிட்டு லீவு போட்டுட்டு ஊர் சுத்த முடியாது. எங்கேயாவது வெளியே போயிட்டு வந்தா நமக்கு தான் கை தானா photos-ஐ upload பண்ணிடுமே? ‘Man... you had a good time-ஆ?”ன்னு கண்ணடிப்புகளோடே விசாரணைகள் தொடங்கும்.

 

உடம்பு சரியில்லைன்னு சொல்லிட்டு ஏன் ஊர் சுத்தனும்னு யோக்கியனா நீங்க கேள்வி கேட்குறது என் காதுல விழாம இல்லை. ஆனா ஆபீஸுல எப்பவுமே ஒழுக்கமா நடந்துக்க முடியாதே. நீங்க ரொம்ப நல்லவரா 2 மாசத்துக்கு முன்னாடி லீவுக்கு அப்ளை பண்ணினாலும், கடைசி நேரத்துல “client நாளைக்கு மூச்சா போயிட்டான்னா, துடைச்சு விடுறதுக்க support team (அது தாங்க.... எங்களை போல துரதிர்ஷ்டவசமான offshore support consultants) தயாரா இருக்கனும். உங்க லீவை cancel பண்ணுங்க... இல்லைன்னா 1 நாள் போயிட்டு வந்திடுங்க.”ன்னு கடமைக்கார Project Manager-ம், அதுக்கு ஆள்காட்டி வேலை பார்க்க Team Lead-ங்குற பேர்ல ஒரு அல்லக்கையும் உட்கார்ந்துகிட்டு உத்தரவு போடும். கொஞ்ச நாள் பொறுத்து பார்த்திட்டு “I am on leave today"ன்னு “Out of office" assistant மூலமாக inform செய்யும் தைரியம் வந்துவிட்டது. அப்படி போயிட்டு Facebook-ல update பண்ணினா தான் இவ்வளவு விசாரிப்புகளும்.

Social networking sites-ல் நாம் நமக்காக, நம்முடைய சந்தோஷத்துக்காக, நம்முடைய சந்தோஷமான கணங்களை நண்பர்களுடன் பகிர்ந்துக்கொள்ள profile உருவாக்கிக்கொள்கிறோம். அங்கு கூடவா இந்த அலுவலக நிமித்தங்களுக்காக நடிக்கவேண்டும்? அதனால நைசா அலுவலக சக ஊழியர்களை Facebook-ல் இருந்து கழற்றிவிட்டுக்கொண்டு இருக்கிறேன்.

Reality Shows
Reality Showநம் தமிழ்நாட்டு மக்கள் அவ்வளவு பாசக்காரங்களா? முன்னாடி திரையில் “செண்டிமெண்ட்” என்ற பெயரில் காசு கொடுத்து பார்த்து அழுது தீர்த்தார்கள். அது போதாது என்று தனியார் தொ(ல்)லைகாட்சிகளில் மெகாதொடர்கள் என்ற பெயரில் வீட்டுக்குள்ளேயே வந்து கூடிகூடி கும்மியடித்து அழுது தீர்த்தார்கள். ”TRP ஏறவில்லை என்றால் அழுகையை ஏற்று” என்று போட்டி போட்டு அழுதுக்கொண்டு இருந்தார்கள். முன்பெல்லாம் மாலையில் விளக்கு வைத்தப்பிறகு தாயம் விளையாடக்கூடாது, அழக்கூடாது... அப்படியெல்லாம் செய்தால் வீட்டுக்கு ஸ்ரீதேவி (நடிகை இல்லீங்க.... தெய்வம்) வரமாட்டான்னு சொல்லி வளர்த்த காலம் போய்... இப்போ காலை முதல் நள்ளிரவு வரை ”ஆ..ஆ...” என்று ஒப்பாரிகளாக மெகா சீரியல்கள். நம் தாய்க்குலங்களும் குடும்பம் எப்படி போனால் என்ன என்று திரைக்குடும்பங்களுக்காக feel செய்துக்கொண்டு இருக்கின்றார்கள்.

போதாக்குறைக்கு இப்போ reality show-க்களிலும் செண்டிமெண்ட், அளுகாச்சி.. என் குடும்பத்தில அவங்களுக்கு உடம்பு சரியில்லை.... அதுக்காக பணம் சம்பாதிக்க தான் நான் இந்த show-ல பங்கெடுத்துக்குரேன்னு ஆரம்பத்திலேயே அழுதுட்டு தான் நிகழ்ச்சியையே ஆரம்பிக்குறாங்க. நம்ம தமிழ் மக்களும் அதுக்கு ஆதரவு தர்றாங்களாம்... மூதேவி! அவன் 25,000 பரிசு குடுக்குறதுக்கு ஒரு நிகழ்ச்சி வச்சு, அதுல விளம்பரம் போட்டு கோடிகோடியா சம்பாதிக்கிறானாம். இது போதாததுக்கு நீ உன் கைகாசை போட்டு SMS வேற அனுப்பி.... ஒன்னும் சொல்லிக்கிறதுக்கு இல்லை. எங்கே / எப்போ பார்த்தாலும் அழுகையோட தான் வளரனும்னு தமிழன் / தமிழச்சிகளுக்கு சொல்லிக்குடுத்திருக்காங்களா? இந்த லட்சணத்துல ‘மகளிர் தினம்’னு ஒரு நாள் வேற... தமிழ் பெண்ணினம் விளங்கிடும்.

{oshits} வாசிப்புகள் இந்த பதிவுக்கு!!!