Tamil
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

யுத்தம் செய்பொதுவாக எல்லோராலும் சிலாகிக்கப்பட்ட 2 மிஷ்கினின் படங்களை நான் பார்த்ததில்லை. அவரது முதல் படமான "சித்திரம் பேசுதடி" வெளியானபோது "தமிழ் சினிமாவை ரட்சிக்க இன்னொரு தெய்வம் வந்துவிட்டார்" என்று விமர்சகர்களெல்லாம் கொண்டாட, அதை நம்பி நான் "சித்திரம் பேசுதடி"யை ஆர்வத்தோடு பார்க்க - ஒரு மூன்றாம் தர கதையை வித்தியாசமான ஒளிப்பதிவாலும், புதுமுகங்களை மட்டுமே வைத்து எடுத்ததாலும், எளிதாக விமர்சகர்களை ஏமாற்றியிருந்தார் மிஷ்கின். அதற்கு அடுத்து வந்த "அஞ்சாதே"வை நான் பார்க்கவில்லை - காரணம் படத்தில் சில கற்பழிப்பு காட்சிகள் இருக்கிறது என்று எனது நண்பர்கள் எச்சரித்துவிட்டது தான். 'நந்தலாலா' எதோ காரணமாக தவறிப்போக, இப்போது 'யுத்தம் செய்' பார்த்தேன். மிஷ்கினின் முத்திரையான 'சிறு கதைகளம்" அதை வைத்து பின்னப்பட்ட திரைக்கதை என கொஞ்சம் சுவாரசியமாகவே போனது 'யுத்தம் செய்'.

கொட்டும் மழையில், Top angle-ல் ஒரு இளம்பெண் குடையோடு ஆட்டோவை தாண்டி செல்ல, அப்போதே "Alfred Hitchcock' பாணியில் ஒரு திகில் படத்துக்கான அடித்தளத்தை பலமாக போட்டுவிடுகிறார். இதே படத்தில் வேறொரு இடத்தில் அகிரா குரோசோவாவின் "ராஷோமொன்" படத்தை refer செய்து உலக சினிமாவின் பலமான பாதிப்பு தன்னிடம் இருப்பதை சொல்கிறார் மிஷ்கின். கதை இது தான் - சென்னையில் சில இளம்பெண்கள் காணாமல் போகின்றனர். இதை விசாரிக்க வந்த CBCID இன்ஸ்பெக்டர் சேரனின் தங்கையும் காணாமல் போகிறார். இந்த கொலைகளுக்கும், சில காலங்களுக்கு முன்பு நடந்த ஒரு குடும்பத்தின் கூட்டு தற்கொலைக்கும் சம்பந்தம் இருப்பதாக சந்தேகித்து பழைய கேசை தோண்ட... கொஞ்சம் தொய்வுகளுக்கப்புரம் முடிச்சு அவிழ்கிறது. ஆனால் அதற்கு அப்புறம் ஒரு மணி நேரம் கழித்து தான் படம் முடிகிறது.

சமீபத்தில் எனக்கு சேரன் படங்களென்றால் அலர்ஜி. கமல்ஹாசனோடு narcissm / self obsession level-களில் போட்டிப்போட்டுக்கொண்டு திரையை ஆக்கிரமிக்கும் சேரன், தன்னை இன்னும் இளம்வயது பையன் என்று காட்டிக்கொள்ள அவருடைய உடல்மொழி செய்யும் பிரம்மப்பிரயத்தனம்... அழுமூஞ்சி (சிவாஜிக்கப்புறம் திரையில் அம்சமா அழுவது சேரன் மட்டுமே) என இப்போதெல்லாம் சேரனை பார்த்தாலே பயந்து ஓடிக்கொண்டிருக்கிறேன். அதையும் மீறி "யுத்தம் செய்" பார்க்க துணிந்தது படத்தை பற்றி வெளியான விமர்சனங்களால் தான்.

முதல் பாதியில் கதை கொஞ்சம் விறுவிறுப்பாக செல்கிறது. எனினும் யதார்த்தமாக காட்டவேண்டும் என்று மிஷ்கின் முயற்சித்திருப்பதால் கொஞ்சம் தொய்வு தென்படுகிறது. எனினும் it is engaging. முதல் பாதி முழுக்க பிற்பகுதியில் அவிழவேண்டிய முடிச்சுக்களின் தடயங்கள் அங்கங்கே தெளிக்கப்பட்டுள்ளது. பிணவறையில் கோட் போர்த்திக்கொண்டு தூங்கும் டாக்டர் ஜூதாஸ், வேலையில் ஏற்படும் frustration - ஐ ஒரு வெறித்த பார்வையின் மூலம் வெளிப்படுத்தும் சேரன், போலிஸ் இலாகாவில் கருப்பாடுகளாக இசக்கி, துணிக்கடை முதலாளியாக பாடகர் 'மாணிக்க விநாயகம்', அவமானப்பட்டு தற்கொலை செய்துக்கொள்ளும் ஓய.ஜி மகேந்திரன் என செதுக்கப்பட்ட பாத்திரங்கள் இருந்தும் முதல் பாதி முடியும்போது "இது வரைக்கும் என்ன நடந்துச்சு? யார் யாரை கடத்துனாங்க?" என்று நமக்குள் ஒரு கேள்வி எழுவது தான் மிச்சம். படம் முழுவதும் இருட்டிலேயே நடப்பதாலும், கேமிரா கதாபாத்திரங்களின் கால்களை சுற்றியே சுழல்வதாலும் இந்த பாதிப்பு என்று நினைக்கிறேன்.

இரண்டாவது பாதியில் சில இடங்கள் எனக்கு புரியவில்லை. குறிப்பாக எப்படி போலீஸ்காரர் சரியாக அந்த கொலைக்கார பையனிடம் சென்று விசாரிக்கிறார், அதை சேரனும், அவரது உதவியாளர் தமிழும் தூர இருந்து கண்காணிக்கிறார்கள், எந்த அடிப்படையில் அவனை zero in செய்தார்? சில போலீஸ் அதிகாரிகள் மீது தனக்கு சந்தேகம் இருப்பதாக சொல்லும் சேரன், அவர்களை எந்த விதத்திலும் கண்காணிக்கவில்லையே? கொலைகளுக்கான காரணம் வெளியான பின்பு ஏனோ கொஞ்சம் drama அதிகமாக போய்விட்டது போன்ற பிரமை. இளம் பெண்கள் கடத்தல், போலீஸ், தொழிலதிபர்களின் வக்கிரங்கள் எல்லாம் அரதப்பழசு என்ற போதும் Peep Show என்பது புதிய மற்றும் அதிர்ச்சிகரமான விஷயம் தான். சென்னையில் அப்படி எல்லாம் நடக்கிறதா என்ன? மிஷ்கினின் படங்களில் எல்லாம் செக்ஸ் குற்றங்கள் தூக்கலாக இருப்பது ஏன்?

யுத்தம் செய்

நடிப்பு என்று பார்த்தால் மிக எளிதாக பேரை தட்டிச்செல்வது - டாக்டர் ஜூதாஸாக வரும் ஜெயப்ரகாஷும், லக்ஷ்மி ராமகிருஷ்ணாவும் தான். குறிப்பாக லக்ஷ்மியின் நடிப்பு இந்த படத்தில் பல மடங்கு அபாரம். அவரை பற்றி எழுதினால் படத்தின் முடிச்சை சொல்லவேண்டியிருக்கும். சேரனின் உதவியாளர் தமிழாக வரும் தீபா ஷா-க்கு வெறுமனே கூட நடப்பதும், ஓடுவதும் மட்டுமே. Better luck next time. வெகு நாட்களுக்கு பிறகு பெரிய திரையில் ஒய்.ஜி. நல்ல திரும்பிவரவு. சேரனை அடக்கி வாசிக்கவைத்து இருப்பது மிஷ்கினின் திறமை என்று தான் சொல்லவேண்டும். பாலத்தில் பத்து அடியாட்களை வெறும் நகவெட்டி கொண்டு சமாளிப்பது நல்ல stunt choreography. சத்யாவின் ஒளிப்பதிவு படம் பார்ப்பவர்களை அந்த த்ரில் மூடில் கொண்டுப்போவதில் பெரும்பங்கு வகிக்கிறது. அமரனின் கலை இயக்கத்தில் அந்த சவக்கிடங்கு, போலீஸ் ஸ்டேஷன் எல்லாம் உண்மையோ என்று நம்புமளவுக்கு இயற்கை. எனக்கென்னவோ கொஞ்சம் குறையாக பட்டது - பின்னணி இசை. படம் பார்ப்பவர்களை ஒரு விதமான depression - க்கு கொண்டுபோவது போல ஆரம்ப காட்சிகளில் இருந்தாலும், படம் நகர நகர பழகிவிட்டது என்பதே உண்மை.

Spoiler என்று பார்த்தால் - இந்த படத்துக்கு அடிக்கப்பட்ட 10-வது நாள் சுவரொட்டி தான். பஸ்ஸில் வரும்போது யதேச்சையாக பார்த்தது, படம் பார்க்கும்போது யார் குற்றவாளி என்று இரண்டாவது பாதியில் யூகிக்க முடிந்துவிட்டது. அந்த போஸ்டரை பார்க்காமல் இருந்திருந்தால் என்னால் யூகித்திருக்க முடியாது. மொத்தத்தில் 'யுத்தம் செய்' தமிழ் சினிமா அதிகம் தொடாத த்ரில்லர் genre-ஐ சாமானிய ரசிகருக்கும் கொண்டுபோகும் முயற்சி. கௌதம் மேனனின் 'வேட்டையாடு விளையாடு'வும் கிட்டத்தட்ட இதே போன்ற கதையமைப்பு / கதையோட்டம் கொண்டது என்றாலும் அது கொஞ்சம் glamorous - ஆக, இன்னும் அதிகம் சாமானிய ரசிகர்களுக்கு போய் சேரும் வகையில் பல வணிகரீதியான அம்சங்களை கொண்டு வெற்றியும் பெற்றிருந்தது. அந்த 'glamour' இல்லாதது 'யுத்தம் செய்'-ஐ பொறுத்தவரை பலமும் (விமர்சகர்களை கவர) பலவீனமும் (என் போன்ற சாமானிய ரசிகர்களுக்கு appealing - ஆக இல்லாதது). இன்னும் கொஞ்சம் இறுக்கி பிடித்து படத்தை ஓட்டியிருக்கலாம் என்ற போதும், 'யுத்தம் செய்' பார்க்கத் தகுந்த / பார்க்கவேண்டிய முயற்சி.

{oshits} வாசகர்கள் இந்தப் பதிவை படித்துள்ளனர். இதில் எத்தனை பேர் என் கருத்தோடு ஒத்துப்போகிறார்கள் என்று தெரியவில்லை.