Girls
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

Click the image to read furtherஇன்று பிரபாஸ் - காஜல் அகர்வால் நடித்து கருணாகரன் இயக்கிய “டார்லிங் (2010)” படம் பார்த்த பிறகு ஏனோ எனக்கு காஜல் அகர்வாலை மிகவும் பிடித்து போனது. காஜல் அவர்வால் அழகான சிரிப்பும், உற்சாகமான கண்கள் கொண்ட நடிகை என்ற மட்டும் தான் இதுவரை எனக்கு அவர் மீது அபிப்பிராயம் இருந்தது. ஆனால் இன்று ‘டார்லிங்’ பார்த்தப்புறம் அந்த பெண்ணை குறித்து புதிதாக ஒரு ஈர்ப்பு தோன்றியுள்ளது. பொதுவாக Love specialist கருணாகரன் தனது கதாநாயகிகளை அழகாக present செய்பவர் என்ற கருத்து ஆந்திர சினிமா ரசிகர்களிடையே நிலவுகிறது. அந்த வகையில் “டார்லிங்” படத்தில் காஜல் ஒரு தேவதையை போல காண்பிக்கப்பட்டதில் ஆச்சரியம் இல்லை தான். அதிலும் ’மகதீரா’வின் மகத்தான வெற்றி காஜலுக்கு ஒரு தனி நம்பிக்கையையும், பொலிவையும் தந்திருப்பதால் ”டார்லிங்” படத்தில் அவருடைய அழகு கூடிப்போயிருப்பது போல ஒரு தோற்றம்.



2004-ல் ஐஸ்வர்யா ராயின் தோழியாக “Kyon... Ho Gaya Na?" படத்தில் துணை நடிகையாக அறிமுகமான காஜலுக்கு சிவப்பு கம்பளம் விரித்ததேன்னவோ தெலுங்கு திரையுலகம் தான். பாரதிராஜாவின் கண்ணில் பட்டு “பொம்மலாட்டம்” படத்தின் கதாநாயகியாக தென்னிந்திய திரையுலகத்துக்கு அறிமுகமாகவேண்டியவர் அந்த படம் வெளியாவதில் தாமதமாக, தெலுங்கு பக்கம் பார்வையை திருப்பினார். தேஜா இயக்கிய “லக்‌ஷ்மி கல்யாணம்” தான் காஜலின் முதல் தெலுங்கு படம். எனினும் அடுத்த படமான கிருஷ்ணா வம்சியின் “சந்தாமாமா” தான் காஜலை லைம் லைட்டுக்கு கொண்டு வந்தது. ஆனால் அடுத்து வந்த ‘ஆட்டடிஸ்தா, பௌருடு ஆகிய படங்கள் சுருண்டுக்கொள்ள, தமிழில் “பழனி”, தாமதமாக வெளிவந்த “பொம்மலாடம்” ஆகிய படங்களின் தோல்வி காஜலின் திரையுலக வாழ்க்கையை கிட்டத்தட்ட முடிவுக்கு கொண்டுவந்துவிட்ட சமயத்தில் வெளிவந்த “மகதீரா” தெலுங்கு திரையுலகத்தை புரட்டிப்போட்டது மட்டுமல்லாமல் காஜலுக்கு புது வாழ்க்கையை கொடுத்தது.

 


Kajal Agarwal in Magadheera


வெற்றி வரும்போது தன்னம்பிக்கையும், பொலிவும் சேர்ந்து அல்லவா வரும்? “மகதீரா”வின் வெற்றிக்கு பிறகு முன்னணி தெலுங்கு இயக்குநர்களின் பார்வை காஜல் மீது பட்டுவிட அதுவரை முன்னணியில் இருந்த இலியானாவின் அரியணையை அசைத்துப்பார்த்தார் காஜல். கருணாகரனின் “டார்லிங்” காஜலுக்கு தேவதை அந்தஸ்து அளிக்க, காஜலின் பிரபலம் கூடியது. இப்போது தெலுங்கின் முன்னணி படைப்பாளிகளின் முதல் தேர்வாக விளங்கிக்கொண்டிருக்கும் காஜலுக்கு தமிழ் படங்கள் தண்ணி காட்டிக்கொண்டிருப்பது ஆச்சரியம் தான். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட “நான் மகான் அல்ல” காலை வாரிவிட இப்போது காஜலுக்கு தெலுங்கு படங்கள் மட்டுமே கை கொடுத்து வருகின்றன.

Kajal Agarwal

அழகான சிரிப்பு, கூட சேர்ந்து சிரிக்கும் கண்கள், மிதமான உயரம், நல்ல உடை தேர்வு என காஜல் திரையில் இதமான screen presence கொண்ட நடிகை என்பதில் சந்தேகம் இல்லை. இப்போது 25 வயது என்ற போதும் 16 - 17 வயது பெண்ணின் துறுதுறுப்பும், சிரிப்பும் எனக்கு இன்று ‘டார்லிங்’கில் இந்த பெண்ணை பார்த்த போது நிறைய ரேவதியை நினைவு படுத்தியது. அந்தப் பெண் மேலும் மேலும் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.