Yandamoori Virendranath
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
Sagarasangamamதெலுங்கு எழுத்தாளர் எண்டமூரி விரேந்திரநாத் எழுதி, தமிழில் கௌரி கிருபானந்தன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட இந்த நாவலை சமீபத்திய பயணத்தில் தான் படித்தேன். பெங்களூரில் இருந்து வரும்போது ஏறிய அந்த பாடாவதி Express Bus-க்கு நன்றி. என் வழக்கமான கொள்கைக்கு எதிராக ஒரு புத்தகத்தை முழுமூச்சாக படிக்க நேர்ந்தது அந்த பயணத்தில் தான். அதனால் தானோ என்னவோ அந்த நாவலின் தாக்கத்தை முழுமையாக என்னுள் இறக்கிக்கொள்ள முடிந்தது. படித்து முடித்தவுடனேயே கௌரி அவர்களுக்கு SMS மூலம் எனது கருத்தை அனுப்பினேன். அவ்வளவு பிடித்திருந்தது அந்த புத்தகம். எனினும் முழுவதுமாக உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அதை பற்றிய பதிவு வேண்டாம், ஒரு 3-4 நாட்கள் கழிந்த பின்பும் அப்படியே உணர்ந்தால் தோன்றியதை எழுதலாம் என்று சிறு அவகாசத்தின் பின்பு எழுதப்படும் பதிவு இது. பயங்கர பில்டப் கொடுக்கிறேன் எனவே இது ஒரு path breaking நாவலாக இருக்கும் என்றெல்லாம் கற்பனை செய்துக்கொள்ளாதீர்கள். It is a 60-70s styled drama with an old world charm. சில சமயங்களில் பின்னோக்கி செல்வதும் ஒரு இனிமையான அனுபவமே.
தன் வாழ்க்கை மிக இனிமையானது என்று சந்தோஷமாக கதையை ஆரம்பிக்கும் தரளாவுக்கு, அவளுடைய கணவன் ஆனந்துக்கு அந்த இரவில் வந்த தொலைபேசி அழைப்பும் அதை தொடர்ந்த சம்பவங்களும் ஏற்படுத்தும் அதிர்ச்சியில் வாழ்க்கை படகு தள்ளாடுகிறது. திடீரென்று ஆனந்தின் மகள் என்று சொல்லிக்கொண்டு ஒரு பெண் விபச்சார வழக்கில் கைதாகிறாள் மற்றும் அவளை காப்பாற்ற தரளாவுக்கு தெரியாமல் ஆனந்த் முயற்சிக்கிறான். அதை தொடர்ந்து ஏற்படும் திருப்பங்களில் முற்பகல் செய்ததின் பலன்கள் இப்போது விளைவதை கையாலாகாமல் பார்த்துக்கொண்டிருக்கின்றனர் ஆனந்த் - தரளா தம்பதியினர். முடிவு வழக்கமான சுபமாக இல்லாமல் கொஞ்சம் நெஞ்சை தொடுவதாக முடிகிறது.

கதை என்று பார்த்தால் கிட்டத்தட்ட கமல்ஹாஸன் நடித்த ‘கடல் மீன்கள்’ படத்தின் கதை தான். எனினும் இந்த ‘சாகர சங்கமம்’ நாவலின் சிறப்பம்சம் என்னவென்றால் இதன் நடை (திரைக்கதை) நேர் சீரானது அல்ல. இதில் வரும் 5 முக்கிய பாத்திரங்களின் பார்வையில் சொல்லப்பட்டிருப்பதே. அதனால் ஒரே நிகழ்ச்சி அதில் சம்பந்தப்பட்டவர்களின் பார்வையில் வெவ்வேறு கோணத்தில் சொல்லப்பட்டு அவர்களுடைய செயலில் உள்ள நியாயத்தை தெரிவித்திருப்பது இயல்பாக இருக்கிறது. கதை ‘தரளா’ வின் பார்வையில் தொடங்கி, பின்னர் அனந்தனின் நிலைப்பாட்டுக்கு மாறி, பின்னர் முறையே பிருந்தா, கோபிச்சந்த், ஜி.பி ராவ் ஆகியோரின் பார்வையில் நகர்கிறது. அதிலும் கோபிச்சந்த்தின் பார்வையில் நகரும் கதை தவிர மற்றவை எல்லாம் ஒரே நிகழ்ச்சியை சுற்றி இருப்பதால் படிக்க சுவாரசியமாக இருக்கிறது. அந்த வகையில் எண்டமூரி சாதாரண கதையை மற்றொரு தளத்துக்கு உயர்த்தியிருக்கிறார்.

தரளாவின் கதாபாத்திரம் மிக ஆர்ப்பாட்டமாக திடங்குகிறது. கொஞ்சம் impulsive-ஆன ஆனால் நேர்மையான பெண்ணாக அந்த கதாபாத்திரத்தை நிலைநிறுத்த சில சம்பவங்களுடன் ஆரம்பிக்கிறார் எண்டமூரி. அதனால் நமக்கு கதை நகரும் போது ஆரம்பத்தில் தரளாவின் மீது ஒரு அனுதாபம் தோன்றுகிறது. பின்பு ஆனந்தனின் பார்வையில் நடந்த சம்பவங்களை பார்க்கும்போது நமக்கு தரளாவின் நேர்மையான குணங்கள் என்று கருதப்பட்டவை மீது ஒருவித கோபம் தோன்றுவதை உணரலாம். பின்னர் கதையில் பிருந்தாவின் கதாபாத்திரம் நுழைந்த பின்பு ஆனந்தன் மீது ஒருவித அன்பும் அனுதாபமும் உருவாவதை தவிர்க்கமுடியவில்லை. பிருந்தாவின் கதாபாத்திரத்தை பற்றி எழுதினால் கதையின் சுவாரசியமே போய்விடும், எனவே அதிகம் எழுதவில்லை. பிருந்தாவின் கதாபாத்திரம் தான் கதையின் உயிர்நாடி.

ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பார்வையிலும் கதை நகரும்போது ஒவ்வொரு வித உணர்ச்சி மேலோங்குகிறது. தரளாவின் கதையில் பிடிவாதமும், ஆனந்தனின் கதையில் ஒரு வித இயலாமையும், பரிதாபமும், பிருந்தாவின் கதையில் காதலும் அதை தொடர்ந்த துன்பமும், ஜி.பி ராவின் கதையில் பெற்ற பெண்ணின் மீதான பாசமும், அதை நிறைவேற்ற செய்யும் சூழ்ச்சியும் என பலவித உணர்ச்சிகள் கலவையாக சங்கமிக்கிறது இந்த ‘சாகர சங்கம’த்தில். எனினும் விறுவிறுப்பு என்று பார்த்தால் ஜி.பி ராவின் பார்வையில் நகரும் அத்தியாயங்களும், கடைசி 40 பக்கங்களும். குறிப்பாக கடைசி அத்தியாயமும், 40 பக்கங்களும் படிப்பவர்களின் நெஞ்சில் கனத்த பாரத்தை ஏற்றிவைக்கும். அதிலும் பிருந்தாவுக்கும், கோபிச்சந்துக்கும் இடையே நடக்கும் உரையாடல் படிக்கும்போதே கண்ணீரை வரவழைப்பன. அந்த segment-ல் எண்டமூரியின் எழுத்தும், கௌரி கிருபானந்தனின் மொழிப்பெயர்ப்பும் fine form-ல் இருக்கிறது. வெறுமனே கதாபாத்திரங்களின் உரையாடலை மற்றும் சொல்லாமல் அவர்கள் இருக்கும் சூழலையும் விவரித்திருப்பதை படிக்கும்போது நாமும் அந்த இடத்தில் கதாபாத்திரங்களோடு இருப்பது போன்ற உணர்வை தோற்றுவிக்கிறது. Hats off to Yendamoori Virendranath and Gowri Kirupanandan. இந்த நாவலின் மேலும் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் கதையின் ஓட்டத்தில் காவிரி நதியையும் ஒரு கதாபாத்திரமாக, முக்கியமான பின்புலமாக சேர்த்திருப்பது தான். ஒவ்வொரு நிகழ்வையும், கதாபாத்திரங்களின் மனநிலையையும் காவிரியின் ஓட்டத்துக்கு ஒப்பிட்டிருப்பது அழகு.

கதை கொஞ்சம் dramatic மற்றும் old school of story telling தான். கடைசியில் நிகழ்வதற்கு முன்னமே ஓரிடத்தில் நமக்கு கோடி காட்டியிருக்கிறார் எண்டமூரி, எனினும் கடைசி முடிச்சு அவிழும்போது சுவாரசியமாகவே இருக்கிறது. இது தொழில்நுட்பம் பெரிதாக வளர்ந்திராத காலகட்டத்தில் நடப்பதாக எழுதப்பட்ட கதையென்பதாலும், எளிமையான மனிதர்கள் நிறைந்தது என்பதாலும் ஒரு வித old world charm நிறைந்தைருப்பது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

பதிப்பாளர்கள்: அல்லையன்ஸ் பதிப்பகம், மயிலாப்பூர், சென்னை.
பக்கங்கள்: 256
விலை: ரூ. 56/-
இது வரை இந்த பதிவை படித்தவர்கள்: {oshits} வாசகர்கள்.