Girls
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

{mosimage}

சமீபத்தில் எந்த படத்தின் பாடலையும் நான் இந்த படத்தில் வரும் பாடல்கள் அளவுக்கு எதிர்பார்க்கவில்லை... பாடல்கள் மட்டுமல்ல, படத்தின் டிரெய்லர் கூட எப்போ வரும் என்று ஆர்வமாக பார்த்துக்கொண்டு இருந்தேன். நான் இவ்வளவு ஆர்வமாக எதிர்பார்த்துக்கொண்டு இருந்த அந்த படம் - ’பா (2009)’. Adman பால்கி (எ) பாலகிருஷ்ணன், ‘இசைஞானி’ இளையராஜா, மற்றும் ‘கேமிரா குரு’ பி.சி. ஸ்ரீராம் என நம்மவர்கள் பாலிவுட்டை ஏற்கனவே ‘சீனி கம் (2007)’-இல் கலக்கி இருந்தார்கள். மேலும் இந்த முறை இன்னும் ஒரு ‘தெற்கிந்திய’ நட்சத்திரம் இந்த கூட்டனியில் சேர்கிறது. இந்த படத்தை பற்றி தெரிந்தவர்களுக்கு நான் யாரை குறித்து ஜொள்ளு விட்டுக்கொண்டு இருக்கிறேன் என்று தெரியும். தெரியாதவர்களுக்கும் நான் யாரை சொல்கிறேன் என்பது என்னுடைய பழைய பதிவிலிருந்தே தெரியும். ’பா (2009)’ படத்தின் முன்னோட்டத்தை பார்த்து அப்‘பா’ என்று மலைத்தது வித்யா பாலனை பார்த்து, நம் இசைஞானியின் பாடலான ‘முடி முடி..” பாடலையும் கேட்டு தான். இந்த பதிவை எழுதும்போது ஜொள்ளும் ’மூடு’க்கு வர ’பா’ படத்தின் பாடல்களை கேட்டுக்கொண்டு தான் இருக்கிறேன்.

 

வித்யா பாலனை பார்த்தே ரொம்ப நாளாயிற்று. ‘குரு, ஹேய் பேபி, பூல்புலையா’ என 2007-ல் மூன்று தொடர் சூப்பர் ஹிட்டுகள் கொடுத்தபிறகு அம்மணி கொஞ்சம் break எடுத்துகொண்டாராம். 2007-ல் நடித்து கொடுத்து 2008-ல் வெளியான ‘ஹல்லா போல்’, ’கிஸ்மத் கனெக்‌ஷன்’ ஆகியவை சுமாராகவே போனது. அம்மணியின் ஓய்வுக்கு பிறகு நடிக்க ஆரம்பித்த ‘பா (2009)’, ‘இஷ்க்கியா’ மற்றும் நடிக்க இருக்கும் ‘செனாப் காந்தி’ ஆகிய படங்கள் வரிசையாக வந்து வித்யாவின் ரசிகர்களுக்கு விருந்தளிக்குமாம். இந்த கேப்பில் தெற்கிலிருந்து ஏற்றுமதியான ‘அசின்’, ‘ஜெனிலியா டிசூஸா’ ஆகியோர் கொஞ்சம் பட்டையை கிளப்பினாலும், வித்யாவுக்கு உள்ள மவுசு குறையவில்லை என்பதற்கு வித்யா பாலன் நடித்து வரும் படங்களின் இயக்குநர்களையும், தயாரிப்பாளர்களையும் பார்த்தாலே புரியும். ஒரு படத்தின் bound script-ஐ படித்தாலே படம் எப்படி இருக்கும் என்று யூகித்து ஒத்துக்கொள்வதோ / மறுப்பதிலிருந்தே அம்மணியின் script sense தெரிந்துவிடும். எவ்வளவு புகழ் பெற்ற இயக்குநராக இருந்தாலும் ’கேரக்டரை புரிந்துகொள்ள முடியவில்லை, எனவே நடிக்கமுடியாது’ என்று மறுத்துவிடும் வித்யா பாலனின் straight forward & blunt approach பல இயக்குநர்களை கோபப்படுத்தி இருக்கிறது.

‘இந்த பெண்ணுக்கு முதல் படத்தில் கிடைத்த பெயரும் புகழும் தலைக்கேறிவிட்டது’ - இது சுதிர் மிஸ்ரா தன்னுடைய ‘கோயா கோயா சாந்த்’ படத்தில் வித்யா நடிக்க மறுத்தபோது கோபப்பட்டு மீடியாவில் கொந்தளித்தது. அதற்கு பதிலாக வித்யா மிக அமைதியாக ‘எனக்கு அவருடைய கதாநாயகியான நிகத்-தின் பல செயல்களை பரிமாணங்களை ஒத்துக்கொள்ள முடியவில்லை. எனவே மறுத்துவிட்டேன். அவ்வளவு தான். அவர் தனது அடுத்த படத்தை எனக்கு அளித்தால் அதில் கதாபாத்திரம் பிடித்து இருந்தால் கட்டாயம் ஒத்துக்கொள்ளுவேன்’ என dignity-யோடு பதிலளித்தார். ’கோயா கோயா சாந்த்’ வெளியான பிறகு ஒட்டுமொத்த விமர்சகர்களும், ரசிகர்களும் படத்தை புறக்கணிக்க, அதற்கு பிறகு சுதிர் மிஸ்ரா கப்சிப்.

{mosimage}

பல வருடங்களுக்கு முன்பு வித்யா பாலனையும், அபிஷேக் பச்சனையும் தனது படமான ‘சம்ஜௌதா எக்ஸ்பிரஸ்’ஸில் அறிமுகப்படுத்துவதாக முயற்சித்தார் ராகேஷ் மெஹ்ரா, ஆனால் அது நடக்கவில்லை. தனது ‘ரங்க் தே பஸந்தி’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு அபிஷேக் பச்சனையும், வித்யா பாலனையும் வைத்து ‘தில்லி - 6’ படத்தை அறிவித்தார். அதன் திரைக்கதையை படித்த வித்யா பாலன் இது வேலைக்கு ஆகாது என்று நிராகரிக்க, ராகேஷ் மெஹ்ரா ”என் கதைக்கு இளமையான பெண் தான் பொருத்தமாக இருப்பாள்” என்று சோனம் கபூரை வைத்து படத்தை முடிக்க, தில்லி - 6, பெயரில் உள்ள 6 நாட்கள் கூட ஓடவில்லை. இப்போது ராகேஷ் மெஹ்ராவும் கப்சிப்.

பாலிவுட்டின் Most Powerful Personality என்று வர்ணிக்கப்பட்ட யஷ் சோப்ரா / ஆதித்ய சோப்ராவின் யஷ்ராஜ் ஃபிலிம்ஸில் இலவசமாக கூட நடிக நடிகையர் போட்டிபோட வித்யா ஒன்றல்ல இருமுறை மறுத்தது பாலிவுட்டை திரும்பி பார்க்கவைத்தது. ‘ஜூம் பராபர் ஜூம்’ படத்தில் “குட்டி உடைகளில் நான் comfortable-ஆக feel பண்ணவில்லை, சாரி”, தன்னை அறிமுகப்படுத்திய பிரதீப் சர்க்காரின் “லாகா சுனரி மேன் தாக்” படத்தில் நடிக்கக்கேட்ட தேதிகளில் “ஹேய் பேபி” படத்தின் படப்பிடிப்பு உள்ளது என்று இரு முறை யஷ்ராஜை மறுக்க, இது உங்களுக்கு பின்னடைவாக இருக்காதா என்ற கேள்விக்கு “எனது சங்கடங்களை வெளிப்படையாக சொன்னேன், ஆதித்ய சோப்ராவும் பெருந்தன்மையாக ஒத்துக்கொண்டு பின்னொரு படத்தில் இணையலாம் என்று சொல்லியிருக்கிறார்” என்று வித்யா diplomatic-ஆக பதில் சொன்னாலும், ’ஜூம் ப்ராபர் ஜூம்” மற்றும் “லாகா சுனரி மேன் தாக்” ஆகியவற்றின் படுதோல்விகளுக்கு பிறகு யஷ்ராஜ் வித்யாவை மன்னிப்பதாக இல்லை.

{mosimage}

ப்ரியதர்ஷன் தனது ‘பில்லு பார்பரை’ (தமிழில் குசேலன்) வித்யாவுக்கு அளிக்க, அது ஷாருக் கானின் தயாரிப்பு என்ற போதும் வித்யா மறுக்க, பின்பு “பில்லு பார்பர்” பாக்ஸ் ஆபீஸில் சுருண்டது ஊரறிந்தது. ’எனக்கு படம் முழுக்க வரும் கதாபாத்திரம் இல்லை என்றாலும் பரவாயில்லை, நான் வரும் 4 காட்சிகளை நறுக்கென்று கொடுங்கள்’ - இது தான் வித்யாவின் நிபந்தனை. மணிரத்னத்தின் ’குரு’ படத்திலும், ராஜ்குமார் சந்தோஷியின் ‘ஹல்லா போல்’-இலும் வித்யா பாலனுக்கு முழுநீள பாத்திரங்கள் இல்லையென்ற போதும், அவற்றின் சிறப்பு அம்சங்கள் என்று கணக்கிட்டால் வித்யா பாலன் வரிசையில் முன்னாடி நிற்கிறார்.

இந்த பெண்ணின் script sense-ம், நடிப்புத்திறனும் குறைகூற முடியாத அளவுக்கு அற்புதமாக இருக்கிறது, எனவே எதை வைத்து மட்டம் தட்டலாம் என்று பார்த்துக் கொண்டிருந்த வட இந்திய பத்திரிகைகளுக்கு வித்யாவின் கொஞ்சம் குண்டான உடம்பும், உடைகளும் தீனிபோட்டன. கரீனா கபூர் ‘சைஸ்’ ஜீரோ ஆகிக்கொண்டிருக்கிறார் ஆனால் வித்யா பாலன் உடம்பு ஊதிக்கொண்டே போகின்றது என்று கொளுத்திப்போட ‘நான் சைஸ் ஜீரோ ஆகமுடியாது, ஆனால் ஆரோக்கியமான அளவிலேயே இருக்கிறேன் அது போதும் எனக்கு’ என்று பேசியவர்களின் வாயை அடைத்தார் வித்யா.

அம்மணிக்கு நல்ல ஃபேஷன் சென்ஸ் இல்லை, வித்யா பாலன் என்று சொன்னால் ‘பழங்காலத்து கறுப்பு வெள்ளை நடிகை என்ற உருவம் தான் நினைவுக்கு வருகிறது’ என்று மீடியா கேலி செய்ய, தன் ‘இந்திய’ இமேஜை உடைக்கும் முயற்சியில் இறங்கினார் வித்யா. மேற்கத்திய off shoulder உடைகளிலும், கவுனிலும், தொடையளவு உடைகளிலும் வலம்வர இன்னும் சிரிப்பு பொருளானார் வித்யா. ஒரு கட்டத்தில் தான் தன் தனித்துவத்தை மற்றவர்களுக்காக இழப்பதாக வித்யா உணர, தனக்கும் தன்னுடய திரைப்பட கதாபாத்திரங்களுக்கு ஏற்ற உடைகளை மட்டுமே அணிவது என்று முடிவு செய்து தன்னுடைய டிரேட் மார்க் புடவைகளிலும், அனார்கலி சுரிதார்களிலும் மீண்டும் உலா வர ஆரம்பித்தார்.

இப்போது ஒரு இடைவெளிக்கு பிறகு மீண்டும் ‘பா’ படத்தின் மூலம் அடுத்த இன்னிங்க்ஸுக்கு களம் இறங்கியிருக்கும் வித்யாவை ‘கேமிரா குரு’ பி.சி ஸ்ரீராம் தனது லென்ஸுகளின் மூலம் ஒரு தேவதையாக படம்பிடித்து இருக்கிறார். ‘பா’ படத்தின் முன்னோட்டத்தில் கரும்பச்சை சுரிதாரில், சுருள் முடிகளோடும் இளைத்து அழகாக தோன்றும் வித்யாவை பார்த்ததுமே இந்த இடைவெளியில் வந்த ‘நேற்று முளைத்த காளான்கள்’ எல்லாம் மறந்து போயின. நம்ம இசைஞானியின் இசையில் / பி.சி ஸ்ரீராமின் ஒளிப்பதிவில் நடிக்கும் வாய்ப்பை நிச்சயம் வித்யா ரசித்து நடித்திருப்பார் என்று நம்புவோம். இதில் வித்யாவின் மகனாக வரும் அமிதாப் பச்சன் ஏற்கனவே வித்யாவின் பரம ரசிகர். அமிதாப் வித்யா பாலனின் முதல் படமான ’பரிணீதா’வை பார்த்துவிட்டு ’இந்த பெண்ணுக்கு கண்கள் மட்டுமே போதும் மொழிகள் தேவையில்லை... இவர் வழக்கமான இந்தி திரைப்பட கதாநாயகிகளில் இருந்து வேறுபட்டவர்’ என்று பாராட்டுகளை அள்ளித் தெளித்திருந்தார். அந்த கெமிஸ்ட்ரி திரையிலும் தெரிந்திருக்கும் என்பதற்கு படத்தின் ஸ்டில்களே சான்று.

[youtube:http://www.youtube.com/watch?v=TDqzwApQvHQ]

‘இசைஞானி’ இளையராஜாவின் பாடல்களை பற்றி நான் எதுவும் சொல்லப்போவதில்லை, காரணம் இதே டீமின் முந்தைய படமான ”சீனி கம்” படத்தின் பாடல்களை ஆரம்பத்தில் வெறுத்தபோதும், போகப்போக அவை என்னுடைய favourite பாடல்களாக ரொம்ப நாட்களுக்கு மொபைலில் பாடிக்கொண்டிருந்தது. “பா” படத்தில் ஷில்பா ராவ் பாடிய “முடி முடி இத்தெஃபாக் சே..” பாடல் நிச்சயம் சூப்பர்ஹிட் ரகம். “புத்தம் புது காலை” பாடலின் ஹிந்தி பதிப்பான “ஹல்கே சே போலே..”, “சங்கத்தில் பாடாத கவிதை” பாடலின் ஹிந்தி பதிப்பான “கும்சும்கும்” பாடலும் ஒரிஜினலின் பாதிப்பில் இருந்து மீண்டு நம் உள்ளே இறங்க கொஞ்சம் நாள் பிடிக்கும். இதே “சங்கத்தில் பாடாத கவிதை” பாடலை ஹிந்தியில் ஏற்கனவே இளையராஜா “அவுர் ஏக் பிரேம் கஹானி” படத்தில் உபயோகப்படுத்தி உள்ளார். எனினும் ஏன் மீண்டும் அதே பாடல் என்பது கொஞ்சம் கேள்விக்குறியாகவே உள்ளது.

{mosimage}

{oshits} வாசகர்கள் என்னோடு சேர்ந்து வித்யா பாலனை ஜொள்ளு விட்டுள்ளனர்.