Girls
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
{mosimage}”என்னங்க... கொஞ்ச நாளா உங்க போக்கே சரியில்லையே... ஜொள்ளு விடறதே இல்லை... அப்படியே விட்டாலும் ரேவதி ஆண்ட்டியை போய் ஜொள்ளு விடுறீங்க... இப்போ என்னடான்னா உங்க புது நண்பர் கூட சேர்ந்துகிட்டு odd-ஆ சமையல் குறிப்பு எல்லாம் போடறீங்க... எல்லாம் கல்யாணத்தோட effect-ஆ?”ன்னு பல நண்பர்கள் கேட்க, அவர்களுக்கு என்னோட ஒரே பதில் “செவிக்கு உணவு இல்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்”னு சொன்னார் வள்ளுவர்.... ”கண்ணுக்கு உணவு இல்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயனும்”னு சொல்றான் இந்த மகேஷ். நான் என்ன சாமியாராவா போயிட்டேன்..? கண்ணுக்கு குளிர்ச்சியா சரியான ஃபிகருங்களே கிடைக்க மாட்டேங்குதே சாமி. நான் மலையாள படங்கள் ரெகுலராக பார்ப்பதாலும், இப்போது தமிழில் வரும் புதுமுக ஹீரோயின்கள் எல்லாரும் ஏற்கனவே பார்த்து புளித்த (படத்தை சொல்றேன்) மலையாள இறக்குமதிகளான காரணத்தாலும் தமிழ் சினிமாவில் ஒன்னும் புதுசாக தேறமாட்டேங்குது. இப்போ ஹிந்தி திரையுலகில் எல்லா முன்னணி தமிழ் தெலுங்கு ஹீரோயின்களே கூடி கும்மியடிக்க தொடங்கிவிட்டதால் அங்கேயும் பார்க்க முடியமாட்டேங்குது. சரி! தெலுங்கு பக்கம் பாக்கலாம்னா ஏதோ சுமாரான 2 ஃபிகருங்க - கார்த்திகா, காஜல் அகர்வால்னு தேறுதுங்க.


{mosimage}கார்த்திகா - அந்த கால கனவுகன்னி ராதாவோட பொண்ணு. நாகார்ஜுனாவின் மூத்த சம்சாரத்து பையன் நாக சைத்தன்யா கதாநாயகனா அறிமுகம் ஆகிற ”ஜோஷ்” தெலுங்கு படத்துல கதாநாயகியா அறிமுகம் ஆகியிருக்கா. (அந்த பையனை விட அவன் அப்பா நாகார்ஜுனா இன்னும் கஜஸ்மார்ட்டா இருக்கார்... என்ன, பேண்ட்டை தொப்பைக்கு மேலே தூக்கி போட்டுகிட்டு கொஞ்சம் ’அங்கிள்’ களை காட்டுறார்.. பேண்ட்டை கொஞ்சமா கீழே இறக்கி போடுங்களேன் நாகா சார்... இந்த வரியில டபுள் மீனிங் தெரிஞ்சுதுன்னா அது படிக்கிற உங்க பிரச்சினை). ராதாவோட பொண்ணு அறிமுகம் ஆகுதுன்ன உடனேயே எனக்கும் மத்தவங்க போல கார்த்திகா எப்படி இருப்பான்னு ஒரு ஆர்வம். அந்த படக்குழுவும் ரொம்ப நாளுக்கு கார்த்திகாவோட படத்தை மீடியாவுக்கு கொடுக்காமலேயே சஸ்பென்ஸ் ஏத்திவிட்டுட்டு கடைசியா ஆடியோ ரிலீஸ் அப்போ தான் கார்த்திகாவையும் மீடியாவுக்கு ரிலீஸ் பண்ணினாங்க (மறுபடியும்... இந்த வரியில டபுள் மீனிங் தெரிஞ்சுதுன்னா அது படிக்கிற உங்க பிரச்சினை). பொண்ணு அவ்ளோ பிரமாதமான அழகு இல்லை.. ஆனா ஃபோட்டோவை திரும்ப ஒரு தடவை பார்க்க வைக்குற களை இருக்கு. கொஞ்சம் ராதா சாயல், உதடும் சிரிப்பும் அப்பப்போ ஜோதிகாவை நினைவுபடுத்து (உதட்டை பிதுக்கி பிதுக்கி சிரிக்கிறா - உபயம்: மறைந்த வைத்தி). அந்த இடது பக்க புருவம் ரொம்ப தூக்கிகிட்டு நிக்குறதால ஒரு சிடுமூஞ்சி தோற்றம் தான் மனசுல முதல்ல தோனுது. பொண்ணு அவ அம்மா போல screen presence-ல தேறுறது கஷ்டம் தான். அம்மா பாதி சென்னையை வளைச்சு போட்டா... பொண்ணு ஒரு பெரிய பங்களாவை வளைக்கிறதே பெரிய விஷயம் தான்.

{mosimage}காஜல் அகர்வால் - தமிழிலும் தெலுங்கிலும் சரியான வாய்ப்புகள் இல்லாம தடுமாறிகிட்டு இருந்தப்போ தெலுங்கில் கிடைச்ச ஜாக்பாட் தான் “மகதீரா”. இந்த படத்தை நான் இணையத்திலிருந்து டவுன்லோட் பண்ணினேன். கொஞ்சம் பார்த்தேன். அப்பவே இது திரையில் பார்க்கவேண்டிய அல்லது Original DVD-இல் பார்க்க வேண்டிய படம்னு தெரிஞ்சுது. அந்த பிரம்மாண்டத்தை திருட்டு கேமிரா பிரிண்டில் பார்த்தா என்னோட TV / PC-க்கு தான் கேவலம். எனவே அந்த படம் பாக்குறதை பாதியிலேயே நிறுத்திட்டேன். அந்த படத்தின் பாடல்களில் காஜல் அகர்வால் பயங்கர சுட்டி / துறுதுறுப்பாக இருக்குறது பார்க்க ரொம்ப நல்லா இருக்கு (ஹீரோ ராம் சரண் தேஜாவும் நல்லா இருக்கான் ஆனா மூஞ்சியில நடிப்பு தான் வரமாட்டேங்குது). ஆனா பொண்ணோட anatomy (நான் இப்போ மூஞ்சோட அனாடமியை சொல்றேன்) ஆராய்ச்சி பண்ணி பார்த்தா (நாட்டுக்கு ரொம்ப அவசியம்!!!) {mosimage}பிரம்மா முதலில் ஸ்கெட்ச் பண்ணிவிட்டு பிரிண்ட் அவுட் எடுக்கும்போது, கண்ணுக்கு கீழே உள்ள பாகங்கள் தவறுதலா கொஞ்சம் இழுத்து (strech / elongate ஆகி) அச்சாகி, அந்த draft-ஐ வைத்து படைத்தது போன்ற தோற்றம். கொஞ்சம் அகலமான / நீட்டமான தாடை, மொச்சைகொட்டை பற்கள் என கொஞ்சம் இழுவை தான். ஆனால் ஏதோ ஒரு கவர்ச்சி. இந்த பொண்ணை பார்த்தா ஹிந்தி (விவாஹ் படத்தில் தங்கையாக) / மலையாளத்துல ”மஞ்ஞு போலொரு பெண்குட்டி” படத்தில் நடித்த அம்ரிதா பிரகாஷோட அக்காவோன்னு தோணுது. அது அவங்க குடும்ப குழப்பம்.. நமக்கெதுக்குங்குறீங்களா? அதுவும் சரி தான்.

{mosimage}முன்பெல்லாம் (ஏன்... இப்ப கூடத்தான்) எனக்கு ரொம்ப பிடிச்ச பேரு - திவ்யா. 10வது படிக்கும் போது ’மௌன ராகம்’ல ரேவதியை துறுதுறு திவ்யாவா பார்த்து அசந்ததில் இருந்து அந்த பேர் மேல ஒரு பற்று. எனக்கு பொண்ணு பொறந்தா, ஜாதகப் பெயர் என்னவாவோ இருந்திட்டு போகட்டும், அவளுக்கு திவ்யான்னு தான் பேர் வைப்பேன்னு கல்யாணத்துக்கு முன்னாடியே என் மனைவி கிட்டே சொல்லிட்டேன். எனக்கு அந்த பேர் அவ்ளோ பிடிக்கும். வர்ற நவம்பர் நடுவிலே தான் தெரியும் - எனக்கு பொறக்க போறது பொண்ணா / பையனான்னு. எனக்கு பொண்ணு பொறந்து அது ’மௌனராகம்’ திவ்யா போல சமர்த்தா, துறுதுறுன்னு, அதே சமயம் ரொம்ப சென்ஸிடிவ் பொண்ணா இருந்தா வாழ்க்கையிலே ஒரு அப்பாவா எனக்கு அந்த சந்தோஷமே போதும். I'll just spoil her by pampering to the core. ம்ம்ம்.... எனக்கு ரொம்ப பிடித்த (மறைந்த) நடிகை திவ்யபாரதிக்கு பிறகு பிடிச்ச திவ்யான்னா அது இசையருவி சேனல்ல வர்ற திவ்யா. இப்போ எனக்கு திவ்யாவுக்கு அடுத்து ரொம்ப ஃபேவரைட் பேருன்னா அது மீரா - மீரா விஜயகுமார் (என் அண்ணன் பொண்ணு), மீரா விஜயகிருஷ்ணன் (நம்ம புது செஃப்ஃபோட மனைவி), மீரா ஜாஸ்மின், மீரா நந்தன்... இன்னும் எத்தனை மீராக்கள் என் வாழ்க்கையிலே வரப்போறாங்களோ?. அதே போல பசங்கல்ல என் வாழ்க்கையிலே அதிகம் அடிபட்ட பேரு - பாலா. இதை பத்தி நான் முன்னாடியே எழுதியிருக்கேன்.

{mosimage}மீரா நந்தன் மலையாளத்திலேயும் தமிழிலேயும் கலக்குவான்னு எதிர்பார்த்தேன்.. ஆனா ’வால்மீகி’ அவளை கைவிட்டுட்டாரே!. அந்த பொண்ணு மலையாளத்துல அறிமுகமான “முல்லா” படத்தில் 40 வயது திலிப் கூட வச்சு பார்க்க கோழிக்குஞ்சு போல தக்குளியோண்டு இருந்த மீரா, இப்போ ‘வால்மீகி’யில கொஞ்சம் சதை போட்டு உருண்டையா இருக்கு. ஆனா அந்த சிரிப்போட வசீகரம் குறையலை. வால்மீகி படத்துல வர்ற “கூட வருவியா?” பாடல் இப்போ என்னோட பயங்கர ஃபேவரைட். இவ்வளவு நல்ல மெலடியை கேட்டு ரொம்ப நாளாச்சு... கடைசியா கேட்டது “முன்பே வா என் அன்பே வா” தான். முதல்ல அந்த பாட்டை பாடினது ஷ்ரேயா கோஷல்-ன்னு நினைச்சிட்டு இருந்தேன், பாடல்களை டவுன்லோடு செய்யும் வரை. அப்புறம் தான் தெரிஞ்சுது அதை பாடியிருக்கிறது “பேலா ஷிண்டே”ன்னு ஒரு புதுப்பொண்ணு. இளையராஜாவுக்கு ஏன் வடக்கத்திய பொண்ணுங்க குரல் மட்டும் பிடிக்குதுன்னு யாராவது தெரிஞ்சா சொல்லுங்க... ப்ளீஸ். ஆனா “பேலா”வோட குரல்ல இருக்கிற மென்மையும், தமிழ் உச்சரிப்புல இருக்குற தெளிவும், அந்த பொண்ணு ரொம்ப சீக்கிரம் தமிழிலே பிஸியாயிடும்னு சொல்லுது. ”பேலா ஷிண்டே” ஹிந்தியில “உஸ்தாத் & டிவாஸ்”ங்குற ஒரு பிரைவேட் ஆல்பம்-ல உஸ்தாத் சுல்தான் அலி கான் (அதாங்க... அலைபாயுதேல “சினேகிதனே” பாட்டில தமிழ் மேல புல்டோஸர் ஏத்தியிருப்பாரே ஒரு தாத்தா) கூட பாடியிருக்கு.

{mosimage}அப்புறம்... ’பூ’ பார்வதி நடிச்சிருக்காங்குற ஒரே காரணத்துக்காகவே கன்னட படமான “மிலனா”வை DVD-ல் (உபயம்: என் மனைவி அகிலா - புருஷனுக்கு பார்வதியை பிடிக்குதுங்குற காரணத்துக்காகவே பெங்களூர்ல இருந்து DVD வாங்கிட்டு வர்ற அளவுக்கு ரொம்ப நல்லவ!) பார்த்தேன். அந்த பார்வதி பொண்ணோட நடிப்பு திறமையை பார்த்து சிலிர்த்துட்டேன் (’தெறம’ இல்லீங்க... அது வேற). பின்னே அந்த ஹீரோ புனீத் ராஜ்குமாரை குளோசப்புல பார்த்திட்டு பயத்தை சாமர்த்தியமா மறைச்சிட்டு நடிக்கிறதுக்கே தனி திறமை வேணுமே!!! ஹிந்தி படமான “Hum Dil De Chuke Sanam"-இன் கிட்டத்தட்ட 2ம் தர காப்பி... இருந்தாலும் கொஞ்சம் பாக்குற மாதிரி தான் இருந்திச்சு.. காரணம் - பார்வதி, பார்வதி, பார்வதி... மட்டுமே. அப்புறம் 2 பாட்டு - ”அந்த்து இந்த்து ப்ரீதி பந்த்து.. (அப்படி இப்படின்னு கடைசியா காதல் வந்திருச்சு... இதை ரொம்ப சந்தோஷமா என் பொண்டாட்டிகிட்டே கேமரா இல்லாம சொன்னேன்)” & “நின்னதல்லே..” பாடல்கள் பார்க்கவும், கேட்கவும் நல்லா இருந்திச்சு. அம்மணி நடித்த மற்றொரு கன்னட படமான “மழே பராலி மஞ்ஞு இராலி” படத்தோட DVD கிடைக்கலையாம். அதிலே பார்வதி நல்லா நடிச்சு இருக்கான்னு நல்ல விமர்சனங்கள் கேள்விப்பட்டு இருக்கேன். எப்போ பார்ப்பேன்னு தான் தெரியலை. பார்வதி.... DVD கிடைச்சா தோ வந்துட்றேன்..

{mosimage}ஹே! கந்தசாமி-ல ஷ்ரேயா சரண் குட்டை முடி ஸ்டைல்ல பயங்கர ஹாட் இல்லை? இது வரை அவள் நடித்த படங்களிலேயே அம்மணி செம கிக்கா இருந்தது இந்த படத்து பாட்டுல தான்னு எனக்கு தோனுது. ஆனா அந்த இடுப்பு ஆட்டுறது எல்லாம் பயங்கரமான “ஊர்மிளா மாடோண்ட்கர்” பாதிப்பு. ஊர்மிளா நடித்த “Pyar Tune Kya Kiya (Hin)", ”அனக அனக ஒக ரோஜு (தெலுங்கு)” படங்கள்ல ஊர்மிளா இந்த ”பெல்லி” டாண்ஸ் எல்லாம் 10 வருஷத்துக்கு முன்னாடியே பண்ணிட்டா. குறிப்பா “அனக அனக ஒக ரோஜு” படத்தில் “ஏதோ தஹதஹக்கோ..” பாட்டுல ஒரு மியூசிக் பிட்டுல ஊர்மிளா தொப்புளை மட்டும் தனியா ஆட்ட, நான் உணர்ச்சிவசப்பட்டு “ஐய்யோ..”ன்னு வாய்விட்டு கத்த தியேட்டரில் முன் சீட்டுக்காரர்கள் என்னை திரும்பி பார்த்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியை உங்களுக்காக் இங்கே நினைவுகூர்கிறேன் அன்பர்களே!

{mosimage}திரும்ப திரும்ப வழக்கமா பாடுற அதே பல்லவி தான் - ”வித்யா பாலன், ரேவதி, மஞ்சு வாரியர், மீரா ஜாஸ்மின், அசின் போல முதல் படத்துலயே மனசில நச்சுன்னு பதியிற மாதிரி ஒரு நல்ல ஹீரோயினை சீக்கிரம் கொடு” - ன்னு கடவுளை வேண்டாத நாளே இல்லை. இதில பேசாம மஞ்சு வாரியர் திரும்ப நடிக்க வந்தா, படம் வெளியாகுற 2 நாள் முன்னாடியே கேரளாவுக்கு டிரெயின் ஏறி, தியேட்டர்ல கியூவில தூங்க நான் ரெடி... திலீப்பும், மஞ்சுவும் மனசு வைக்கனுமே. யாராவது மலையாள இயக்குநர் அவங்களை convince பண்ணுங்களேம்ப்பா. நாளைக்கு கடலூர் கிருஷ்ணாலயாவில “நினைத்தாலே இனிக்கும்” பார்க்கலாம்னு இருக்கேன். “பனாரஸ் பட்டு கட்டி” பாட்டு செம கலாட்டா.... என்னோட iPod-ல அது தான் Non-Stop-ஆ கதறுது. ”செக்ஸி லேடி.. கிட்ட வாடி” பாட்டுல அந்த குண்டு லேடியை விட, குளோசப்புல அவளை விரலால கூப்பிடுற பிருத்வி தான் என்னை பொருத்தவரை செம ஹாட். பிருத்விக்கு அவன் கண்ணே போதும் ஆளுங்களை கவுக்க... பையன் கொஞ்சம் இளைச்சுட்டான் போல.. முன்னாடி இருந்த அந்த charm குறைச்சல் தான். அம்மா கூட தான் படத்துக்கு போகப்போறேன் (நான் மனசளவில இன்னும் குழந்தை தான்) இருந்தாலும் தியேட்டர்ல அந்த பாட்டுக்கு விசில் அடிச்சாலும் அடிச்சுடுவேன்.

{oshits} வாசகர்கள் - இந்த பதிவுக்கு.....