Tamil
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

{mosimage}

இன்னும் முழுதாக படம் முடியவில்லை, எனினும் என்னால் எழுதாமல் இருக்க முடியலை - ‘ஆனந்த தாண்டவம்’ அதன் மூலமான சுஜாதாவின் ‘பிரிவோம் சந்திப்போம் - பாகம் 1 & பாகம் 2 ’ நாவலின் கால் தூசிக்கு கூட வரவில்லை. உணர்வுப்பூரமாக நிதானமாக ரசித்து படிக்கப்பட்ட காட்சிகள் திரையில் அவசரம் அவசரமாக நகர்வதை ரசிக்கமுடியவில்லை. வசனங்கள் எல்லாம் அப்படியே நாவலிலிருந்து எடுக்கப்படுள்ளன - கொஞ்சம் கூட update செய்யப்படாமல்... கொஞ்சம் கொஞ்சம் மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன ஆனால் அவை அத்தனை சுவாரசியமாக இல்லை. இரண்டாவது பாதியில் காமெடி காட்சிகள் என்கிற பெயரில் சுருட்டப்பட்ட குப்பை காட்சிகளை பார்த்தால் சுஜாதா தற்கொலை செய்துக்கொண்டு இருப்பார். கதையை ’பிரிவோம் சந்திப்போமி’ற்கு விசுவாசமாக கதை நடப்பதாக சொல்லப்பட்ட இடங்களிலேயே படமாக்கப்பட்டுள்ளது போல, பேசாமல் 80களில் நடப்பதாக periodic படமாக எடுத்திருந்தால் கொஞ்சமாவது authenticity மிஞ்சியிருக்கும். இந்த க்ளாஸிக்கலான நாவலை திரைப்படமாக்க முயற்சித்த ஏ.ஆர் காந்திகிருஷ்ணாவின் முயற்சியை திட்ட மனசில்லை, எனினும் இன்னும் கொஞ்சம் மெனக்கட்டு இருக்கலாம். மதுமிதா-வாக தமன்னா - அம்மணி நன்றாக நடித்து இருந்தாலும் அந்த கதாபாத்திரத்தின் அப்பாவித்தனத்துக்கு மாறாக கொஞ்சூண்டு உருவ முதிர்ச்சி & கேணத்தனம் தெரிகிறது. ரத்னாவாக ருக்மிணி விஜயகுமார் பாந்தமாக நடித்திருக்கிறார். புதுமுகம் சித்தார்த் - I hate that malayali guy. தமிழ் சினிமாவில் நடிக்க தமிழ் பசங்களே கிடைக்கலையா? ஜீவாஷங்கரின் கேமிரா பாபநாசத்தை, ஊட்டியையும் மிக அழகாக match செய்து காண்பித்திருப்பதற்கு ஒரு ஷொட்டு. சுமாரான பாடல்கள் என்ற போதும் குறிப்பிடக்கூடிய பின்னணி இசை (உபயம்: ஜி.வி. பிரகாஷ்குமார்) - {oshits} பார்வைகள்....