Questions
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

{mosimage}

வாழ்க்கையிலே எது கற்றுக்கொண்டேனோ இல்லையோ இஷ்டத்துக்கு அறிக்கை விடக்கூடாது என்பதை தெளிவாக கற்றுக்கொண்டேன். சிறிய வயதிலிருந்தே எனக்கு எதை பற்றியும் ஒரு திடமான அபிப்பிராயம் உண்டு. அது சரியா தவறா என்று ஆராயாமலேயே அதன் அடிப்படையில் அறிக்கைகள் விடுவது உண்டு. ஆனால் கடவுள் "மகனே! நீ ரொம்ப பேசிட்டே.." என்று எதை நான் செய்யமாட்டேன் என்று மார்தட்டிக்கொண்டேனோ அதை வேறு வழியில்லாமல் செய்யவைத்துவிடுவார். பல அறிக்கைகளை இப்போது என்னால் சொல்ல முடியாது (சுயமரியாதை தடுக்கிறது) ஆனால் சொல்லக்கூடியவை ஒரு சில... உதாரணத்துக்கு - "எத்தனை கோடி கொடுத்தாலும் சென்னையில் வேலை செய்வதைகாட்டிலும் அபுதாபியிலோ இல்லை கோவையிலோ தெருவில் பிச்சை எடுப்பேன்...." ஆனால் விதி வேறுவிதமாக விளையாடியது. இப்போது நான் 2 ஆண்டுகளாக சென்னைவாசி. மனதுக்கு பிடிக்காமல் போனாலும் சமரசம் செய்துக்கொள்ளும் திறன் இல்லாததால் எப்போடா இந்த ஊரை விட்டு போவோம் என்று ஒவ்வொரு நாளும் பொழுதை ஓட்டுவது ரொம்ப கடினம். இது கூட பரவாயில்லை ஒரு நாள் பொறுமை எல்லை கடந்தால் வேலையை விட்டுவிட்டு ஊரை விட்டு ஓடிப்போய்விடலாம், ஆனால் கல்யானத்திலிருந்து..?

 

இது பொதுப்படையான கருத்தாக கூடாது என்றாலும் என் அனுபவத்தில் நான் ஏற்படுத்திக்கொண்ட, ஆனால் இதுவரை சேலஞ் செய்யப்படாத கருத்து - "சேலம் மக்கள் போல Dumb personalities தமிழகத்தில் இல்லை". இது என் வாழ்க்கையில் கடந்துவந்த சில மனிதர்களை கொண்டு ஏற்படுத்திக்கொண்ட கருத்து என்றபோதிலும் இதுவரை இந்த கருத்தை உடைப்பது போல வேறு எந்த சேலத்து மனிதர்களையும் பார்க்கவில்லை. அதனாலேயே "சேலம் பெண்னை கல்யாணம் செய்வதை விட காலத்துக்கும் தனியாகவே இருப்பேன்" என்று ஒரு அறிக்கை விட்டு இருந்தேன். இப்போது அதற்கும் ஆபத்து வரும் போல...

சேலத்து பெண் சம்பந்தம் என் பெற்றோர்களிடம் வர, அவர்களுக்கு ரொம்ப பிடித்துவிட நான் அந்த பெண்ணிடம் பேசி பார்த்தபோது என் எண்ணங்களுக்கும் அந்த பெண்ணின் ரசனைக்கும், மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் என்று தெரிந்தது. மேலும் எனக்கு வரப்போகும் பெண் தனக்கென்று ஒரு திடமான அபிப்பிராயங்களும், திடமான சுயபுத்தியுடனும் இருக்கவேண்டும் என்று விருப்பம். ஆனால் வீட்டோடு பொத்தி பொத்தி வளர்க்கப்பட்ட இந்த பெண்ணோடு எனக்கு அவ்வளவாக ஈடுபாடு தோன்றவில்லை. அந்த பெண் அற்புதமான மனுஷியாகவே இருக்கலாம், எனக்கு ஒத்து வராது என்பது என் வாதம். "எங்க காலத்துல நாங்க கல்யாணத்துக்கு அப்புறம் தான் நாங்க பேசினோம், இப்போ நாங்க நல்லா இல்லையா? இலக்கிய ரசனை இருக்கிற பெணை கல்யாணம் பண்ணிகிட்டு, ரெண்டு பேரும் என்ன சொற்பொழிவா நடத்த போறீங்க?" என்று என்னை ஒத்துக்கொள்ள வைக்க சாம, தான, தண்ட, பேத என பெரியவர்கள் அனைத்து வழிகளையும் பிரயோகிக்க, அவைகளிடம் இருந்து என்னை காப்பாற்றிக்கொள்ளும் போராட்டத்தில் என் அடுத்தடுத்த அறிக்கைகளும் தூள் தூளாக தொடங்கின.

அது என்ன அடுத்தடுத்த அறிக்கைகள்? பொதுவாக என நண்பர்கள் அவர்கள் தாய் தந்தையரிடம் மரியாதை குறைவாகவோ, இல்லை எரிந்து விழுந்தாலோ நான் திட்டுவது வழக்கம். "ஆயிரம் இருந்தாலும் நம்மை பெத்தவங்க... அவங்ககிட்டே மரியாதை இல்லாம பேசுறியே.. வெட்கமா இல்லை?" என்று என் பங்குக்கு அறிக்கை மூலம் விளாசுவேன். ஆனால் இப்போது என்னை இந்த சம்பத்ததிலிருந்து காப்பாற்றிக்கொள்ளும் போராட்டத்தில், வீட்டில் எதாவது சொல்ல வந்தால் "என்ன?" என்று ஒரு உச்ச ஸ்தாயியில் கேட்டு மேலும் பேசாமல் இருக்க கத்திரிக்கிறேன். எனவே அடுத்த ஒரு அறிக்கையையும் வாபஸ் பெற வேண்டியதாயிற்று.

எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கிறேன் என்று என் முன்னால் அலுவலக நண்பர்கள் சொல்வது வழக்கம். "Mahesh's smile is seductive" என்பது எனக்கு கிடைத்த சிறந்த compliment. ஆனால் இப்போது என்னை காப்பாற்றிக்கொள்ள முரட்டு முகமூடியை போட்டுக்கொண்டு, எப்போது புருவங்கள் உயர்த்தியும், சுருக்கியுமே இருந்ததாலோ என்னவோ இன்று மாலை கண்ணாடியில் என்னை பார்த்தபோது கொஞ்சம் 'திக்'கென்றது. புருவங்கள் நிரந்தரமாக நெறிந்துவிட்டது போல நெற்றியில் சுருக்கம். வழக்கமான அந்த புன்சிரிப்பு இல்லை. அது இந்த போராட்டத்தில் மறக்கடிக்கப் பட்டுவிட்டது. "அதிக பட்சம் என்ன நடக்கும்? எனவே எப்போது சிரித்து கொண்டே இருக்கவேண்டும்" என்று என் நண்பர்களிடயே விட்ட அறிக்கையை யாராவது இப்போது நினைவுபடுத்தாமல் இருந்தால் தேவலை... நம்மை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று வந்தால் இப்படி தான் எல்லாமே மறந்துபோகவேண்டியிருக்குமோ?

விவேக்கின் "எப்படி இருந்த நான்..." காமெடியை மீண்டும் பார்த்தபோது எனக்கு சிரிப்பு வரவில்லை. விவேக் என்னை பார்த்து சிரிப்பது போல இருந்தது.

{oshits} readings...

Related Articles