15
Fri, Dec
0 New Articles

Ramblings
Typography
{mosimage}தமிழில் ஒரு பழமொழி உண்டு "தலைவலியும் பல்வலியும் தனக்கு வந்தால் தான் தெரியும்".. ஏன் இதை திடீரென்று சொல்கிறேன்? சில வாரங்களுக்கு முன்பு கன்னட "கோல்டன் ஸ்டார்" கணேஷ் தான் காதலித்த பெண்ணை திடீரென்று திருமணம் செய்துக்கொண்டார். இதிலென்ன விசேஷம் என்கிறீர்களா? அந்த பெண் ஒரு பிரபலமான கட்டுமான தொழிலதிபருடன் குழந்தை பெற்று விவாகரத்தானவர். இந்த திருமணம் நல்ல விஷயம் என்ற போதும், இவ்வளவு பிரபலமான நடிகருக்கு, அதுவும் நிறைய பெண் விசிறிகள் கொண்டவருக்கு திருமணம் ஆகாத பெண்ணே கிடைக்கவில்லையா என்று முதலில் தோன்றியது வருத்தமான தாழ்ந்த அபிப்பிராயம். விவாகரத்தானவர்கள் மீண்டும் திருமணம் செய்தால் அதுபோன்றவர்களை மட்டுமே கல்யாணம் செய்துக்கொள்ள வேண்டும் என்ற குறுகிய சமூக சிந்தனையை நானும் என்னையறியாமல் வாங்கியிருக்கிறேன் என்று சிரிப்பு வருகிறது. இதென்ன திடீர் ஞானோதயம் என்று நினைக்கிறீர்களா?சமீபத்தில் என் நண்பர் ஒருவருக்கு (அவர் சில வருடங்களுக்கு முன்பு விவாகரத்து பெற்றவர்) பெண் தேடும் வேலையில் இறங்கினேன். நான் தேடுவது எனக்கு பிடித்த நண்பர் என்பதால் தேட ஆரம்பித்தபோது "என்ன தான் இரண்டாவது திருமணம் என்றாலும், அவர் குணத்துக்கு அந்தஸ்துக்கு பொருத்தமில்லாத பெண்ணை தேடமுடியுமா?" என்று தோன்றியது. சில (வருங்கால மணப்)பெண்களிடம், அவர்கள் வீட்டில் பேசும்போது என் நண்பருக்காக வக்காலத்து வாங்கி பேசினேன். விவாகரத்து துரதிர்ஷ்டவசமானது என்ற போதும், நம் சமூகத்தில் அவர்கள் குறித்த சந்தேகங்களும், யூகங்களும் பூதாகரமாக பரவுகின்றன. என் நண்பரின் கதை தெரிந்த காரணத்தாலும், "என் நண்பர்" என்ற அன்பாலும் நான் அவரை பரிவோடு தான் பார்க்கிறேன். இதை ஏன் நான் முந்தின கேசில் apply செய்யவில்லை? தலைவலியும்...

{mosimage}மேலும் என் நண்பர்களில் சிலர் ஓரினச்சேர்க்கையாளர்கள். ‘ஹோமோக்கள்' என்று மீடியாக்களால் இளக்காரமாக, கொடூரமாக சித்தரிக்கப்பட்டது போல அவர்கள் நிச்சயம் இல்லை. அந்த நண்பர்கள் எங்களிடம் மிகவும் மரியாதையாக, கம்பீரமாக நடந்துகொள்கிறார்கள். பாலியல் விருப்பம் என்பது அவர்களின் தனிப்பட்ட உரிமை. இதில் என் அபிப்பிராயங்கள் அவர்களுக்கு அனாவசியம். திரையில் காட்டப்படுவது போல அனைத்து ஓரினச்சேர்க்கையாளர்களும் பெண்மை சாயல் மிகுந்து, பார்க்கும் ஆண்கள் மீது எல்லாம் விழுந்து பலாத்காரம் செய்பவர்கள் அல்ல. இன்னும் சொல்லப்போனால் பலர் தங்கள் பாலியல் விருப்புக்களை முழுமையாக உணராதவர்கள். மனநிலை மருத்துவர்கள் கூற்றுப்படி பெண்ணோடு உடலுறவு கொண்டபிறகும் ஆண்கள் மீது பற்று ஏற்படுபவர்களே உண்மையான ஓரினச்சேர்க்கையாளர்கள். அந்த நண்பர்களில் பலர் "கன்னி கழியாமலேயே" தங்களை "முழு ஓரினச்சேர்க்கையாளர்கள்" என்று நம்புவது பரிதாபமே. இதை நான் பலமுறை அவர்களிடம் சொல்லி குற்ற உணர்விலிருந்து விடுவிக்க முயற்சி செய்திருக்கிறேன். அதனால் தான் என் ப்ளாகுகளில் நான் பலமுறை இவர்களை பற்றி எழுதியிருக்கிறேன். உதாரணமாக "Infidelity in Homosexual affairs",

பொதுவாக ஹோமோக்கள் என்றாலே நாம் கேவலமாக பார்ப்பது இயல்பு. ஆனால் நாம் மதிப்பு வைத்திருக்கும் சக நண்பர் அப்படிபட்ட பாலியல் விருப்பினராக இருந்தால் அல்லது சமூகத்தின் தீண்டாமைகளில் ஒன்றான விவாகரத்து பெற்றவர்களாக இருந்தால், அவர்களை இனிமையான குணத்தை முழுமையாக புரிந்தபின்பும் நாம் கேவலமாக நினைப்போமா? தலைவலியும் பல்வலியும்...

இதுவரை இந்த கிறுக்களை {oshits} பேர் படித்துள்ளார்கள்... நீங்கள் உட்பட!

Related Articles/Posts

First Anniversary... {mosimage}Vaithy, the anniversary things may remind me that it had bee...

Pen has no gender, so do tears... {mosimage}Last week when I went to Bangalore, I happened to see a Tami...

மறந்த / மறைந்த வரலாறு... சில நாட்களுக்கு முன்பு எனது நண்பனை சந்திக்கப் போனபோது அவனிடம் "என்னடா?...

Is Society a voyeur?... {mosimage}Finally I have decided to sever my ties with cousin sister S...

Mental Images...... {mosimage}the best colour for you, we'll tell more about you. Orde...

About myself
Maheshwaran
Author: MaheshwaranWebsite: https://www.maheshwaran.com
I am a SAP Consultant in my late 30s, residing in the happeing IT City - Bangalore. My interests vary from reading to travelling to handicrafts to photography. My latest interest is on Body building. May be this vivid interest keeps me going in my life without getting bored.

Monthwise Archives

Powered by mod LCA

You may also like...!

Reeling from rejection...... This is an extension of the sequences that made me blog the previous a...

Surprise meeting..... It was quite surprisingly shocking to catch up Vijay outside my office...

Why a husband alone is blamed ... Like any Malayalam movie fan of 1990's, I too waited with a bated br...

Songs evoke nostalgia...... A Foreword: {mosimage}This is not a music review blog. I downloaded th...

Am I fighting a losing battle.... {mosimage}It had been a long time I have been dreaming an IT career. E...