Girls
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

{mosimage}

இந்த வாரம் தொலைகாட்சியில் உலவிக்கொண்டிருந்த போது கலைஞர் தொலைகாட்சி குழுமத்தின் 'இசையருவி'யின் நேரலையை பார்த்தேன். தமிழ் இசை சேனல்களில் உருப்படி என்றால் அது 'இசையருவி' என்று சொல்லலாம். காரணம் அவர்களின் பாடல் தெரிவுகள். சன் மியூசிக், ஜெயா மேக்ஸ் போல இல்லாமல் இனிமையான பாடல்களை, குறிப்பாக இந்த தலைமுறைக்கு தெரியாமல் இருக்கும் அற்புதமான & அபூர்வமான மெலடிகளை பார்க்க முடிந்தது. சில தொகுப்பாளர்கள் பேசும் நேரம் தவிர மற்ற நேரத்தில் ரிமோட் கண்ட்ரோலுக்கு அதிகம் வேலை வைக்காமல், அலுக்காமல் பார்க்ககூடிய சேனல் இது தான். மேலும் திவ்யா போன்ற 'புத்திசாலி' & நல்ல தமிழ் பேசும் தொகுப்பாளினிகள் இசையருவியில் இருப்பது கூடுதல் ப்ளஸ். இந்த பெண் 'என்ன சமைச்சீங்க, படம் பார்த்தீங்க' என்ற ரீதியில் பேசாமல், படிப்பு, மனோநலம், சமூகம் என்று 'அறிவார்த்த ரீதியில்' பேசுவது நன்றாக உள்ளது. திவ்யாவுக்கு 'பெப்சி' உமா போல நீண்ட நாள் தொலைகாட்சியில் இருக்கும் வாய்ப்பு உள்ளது. The best among all Tamil VJs. சன் மியூசிக்கில் வரும் 'புது பாடல்களை' கேட்பது காதுக்குள் ஈயத்தை காய்ச்சி ஊற்றுவது போல நாராசமாக இருக்கிறது.

 

ஜூட் vs லட்சுமி வந்தாச்சு
இந்த ஞாயிற்றுக்கிழமை சன் டி.வி-யில் 'ஜூட் - ஆர் யூ ரெடி?' படம் போட்டு இருந்தார்கள். 'இளமை & இனிமை' மீரா ஜாஸ்மின், வித்யாசாகரின் மெல்லிசை (என்ன என்ன? உந்தன் கண்கள் கேட்பதென்ன & அழகிய கூந்தல் தலைநகரம்.. பாடல்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும்) என விஷயங்கள் இருந்தாலும், படத்தை கொஞ்ச நேரம் கூட தொடர்ந்து பார்க்க முடியவில்லை. 'பெப்சி' விஜயனை பயங்கர வில்லனாக காட்டுகிறேன் என்று கேமராவை சுற்றி சுற்றி கடுப்படித்தார்கள். இயக்கியது 'டும் டும் டும்' அழகம்பெருமாளா? என்று ஆச்சரியம் தான். அதைவிட ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் தமிழில் மீரா ஜாஸ்மினுக்கு ஹீரோவுக்கு இணையான கதாபாத்திரம், இன்னும் சொல்லப்போனால் மீராவும், விவேக்கும் கலக்கும் காமெடி என்று ஸ்ரீகாந்த்தை விட நிறைய 'ஃபூட்டேஜ்' கொடுத்து இருந்தார்கள். படத்தின் சரி காமெடி என்னவென்றால் 'என்ன என்ன்? உந்தன் கண்கள்...' பாடலின் முதல் BGM-ல் மீரா கடமைக்கே & uninterested-ஆக ஆடும் ஆட்டம். அடுத்த முறை பாடல் காட்சியில் கவனியுங்கள். மீரா ஜாஸ்மினுக்காக இந்த படத்தை PIP-யில் போட்டுவிட்டு டி.டி-1 (பொதிகை)-ல் 'லட்சுமி வந்தாச்சு' படம் பார்த்துக் கொண்டிருந்தேன். பாடல் காட்சிகளை மட்டும் முழுசாக பார்த்தேன்.

{mosimage}அதற்கு முதல் நாள் தான் SAB TV-ல் ஹ்ரிஷிகேஷ் முகர்ஜியின் 'கூப்சூரத் (khoobsurat)' படம் பார்த்தேன். 'கூப்சூரத்'தின் அச்சு அசலான பதிப்பு தான் இந்த 'லட்சுமி வந்தாச்சு'. தமிழில் சின்னி ஜெயந்த் - செந்தில் - கோவை சரளா காமெடி டிராக், க்ளைமேக்ஸில் தாய்க்குலங்களின் முந்தானையை நனைக்க ரேவதிக்கு கேன்சர் என்று சில இடைசெருகல்களை திணித்து ஹிந்தி மூலத்தின் இயல்பை கொஞ்சம்போல கெடுத்து இருந்தார்கள். ஆனால் "ரேகா-அஷோக் குமார்" கூட்டணியில் இருந்த கலகலப்பை பல சமயங்களில் "ரேவதி - சிவாஜி கணேசன்" கூட்டணி பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் முந்தியிருந்தார்கள். ஹிந்தி மனோரமா நடிப்பை காட்டிலும் தமிழில் பத்மினியின் நடிப்பு கொஞ்சம் Stiff-ஆக, டிராமாத்தனமாக இருந்தது. ரேவதியின் நடிப்பை சொல்லி தெரிய வேண்டிய அவசியமில்லை. அம்மணி அவ்வளவு அழகாக இருந்தார், படு பாந்தமாக நடித்து இருந்தார். சிவாஜி - ரேவதி 'கெமிஸ்ட்ரி' அற்புதமாக இருந்தது. ரொம்ப நாளுக்கு அப்புறம் தொலைகாட்சியில் சேனல் மாற்றாமல் முழுதாக பார்த்த படம் என்றால் 'லட்சுமி வந்தாச்சு'. இதன் சிடி-யோ அல்லது டிவிடி-யோ கிடைத்தால் கட்டாயம் வாங்கி வைக்கவேண்டும். ஏற்கனவே என்னிடம் 'கூப்சூரத்' விசிடி இருக்கிறது. 'அபிமான்' பார்த்த புதிதில் ஹ்ரிஷிகேஷ் முகர்ஜியின் படங்களை தேடியபோது 'கூப்சூரத்'தும், 'சுப்கே சுப்கே'வும் வாங்கி போட்டேன்.

பி.கு: ரேவதியும், மீரா ஜாஸ்மினும் 'கிராமஃபோன்' என்ற மலையாள படத்தில் ஒன்றாக நடித்து இருக்கிறார்கள்.

{mosimage}ரேவதி பற்றி பேசும்போது... 'உலக மகளிர் தினம்' முன்னிட்டு கலைஞர் டி.வி-யில் 'மகளிர் மட்டும்' படம் போட்டு இருந்தார்கள். கிட்டத்தட்ட 25-30வது தடவையாக இந்த படத்தை பார்க்கிறேன் (ரிலீஸ் ஆனபோதே 12 தடவை தியேட்டரில் பார்த்தேன்). எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காத படம். குறிப்பாக ஊர்வசி மற்றும் ரோகினி ஆகியோரின் கிச்சுகிச்சு மூட்டும் நடிப்பு. டாக்டராக வேஷம் போடும்போது ஊர்வசி ரோகினியிடம் 'நீ வார்ட் வுமன், நான் டாக்டர்' என்று சொல்லும்போது, 'வார்டு வுமன்-ன்னா என்ன?' என்று ரோகினி கேட்க, 'கூட்டுற, பெருக்குற வேலை' என்று ஊர்வசி பதிலளிக்க, 'இங்கேயும் அதே வேலையா' என்று ரோகினி அங்கலாய்த்துக் கொள்வது சரி காமெடி. அப்புறம் ரேவதியும் ரோகினியும் சீரியஸாக யோசித்துக் கொண்டு இருக்கும்போது 'அது இல்லை.... ஒரு சிலர் யோசனை வரும்போது நகம் கடிப்பாங்க, நான் நகம் கடிக்கிறேன் அப்போவாச்சும் யோசனை எதுவும் வருதான்னு பாக்குறேன்..' என்று ஊர்வசி சொல்ல, ரேவதியும் ரோகினியும் தலையில் அடித்துக்கொள்ளும் காட்சி, சுப்புலட்சுமி ஊர்வசியிடம் மேனேஜரை கொல்லனும்னு நினைச்சேன்னு சொல்லும்போது 'ஆத்தி நீ நெனச்சே..' என்று ரோகினி pause விட்டு சொல்லும் காட்சி... என அடுக்கிக் கொண்டே போகலாம். பாவம் இவர்கள் நடிப்பில் தொலைந்து போனது என்னவோ ரேவதி தான். இதன் டிவிடி-யையும் தேடிக்கொண்டு இருக்கிறேன். கிடைத்தால் யாராவது சொல்லுங்களேன், இல்லை ஒரு பிரதி எடுத்து தந்தால் கூட நலம்.

அப்பாடா!!! முதல் முறையா மீரா ஜாஸ்மின் படம் இல்லாத மீரா ஜாஸ்மின் குறித்த பதிவு.... Tongue out