Girls
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

{mosimage}

எப்போடா 'கல்கத்தா நியூஸ்' சென்னைக்கு வரும்? நான் 'நியூஸ் பேப்பரை' சொல்லைங்க! சமீபத்தில் மலையாளத்தில் வந்த திரைப்படத்தை பற்றி. புகழ் பெற்ற இயக்குனர் ப்ளெஸ்ஸியின் இயக்கத்தில் மீரா ஜாஸ்மின், திலீப், விமலா ராமன், இந்திரஜித் முதலானோர் நடித்த படம் திரைக்கு வந்து தோல்விப்படமாய் சுருண்டும் போனது. ஆனாலும் மீரா நடித்த மலையாள படம் என்றால் அம்மணிக்கு அழுத்தமாக கதாபாத்திரம் இருக்கும். அக்கா அதிலே கலக்கியும் இருப்பாங்க.. அதனாலேயே அந்த படத்தை பாக்கனும்னு ரொம்ப ஆவலா ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 'இந்த வாரமாவது சென்னையிலே ரிலீஸ் ஆகியிருக்கா'ன்னு ஆர்வமா பேப்பரை பாக்குறேன். படம் தான் வந்த பாடா இல்லை. இன்னைக்கு தான் ஒரு இணைய தளத்திலே 'கல்கத்தா நியூஸ்' பாடல்களையெல்லாம் டவுன்லோட் பண்ணி பார்த்தேன். ஆகா! அம்மணியின் அழகை காண கண் கோடி வேண்டும்

 

மீரா 'மாண்டலின்' ராஜேஷுடனான காதலை பகிரங்கமா ஒத்துக்கிட்ட பிறகு அவங்க 'காலி'ன்னு தமிழ் ஊடகங்கள் எல்லாம் எழுதி தள்ளுது. கோடம்பாக்கத்திலே இயக்குனர்கள் நடிகைகளை வச்சு கேமிராவிலே படம் எடுக்குறாங்களா, இல்லை நடிகைகளை பார்த்தவுடன் அவங்களோட பாம்பு படம் எடுக்குதான்னு தெரியலை. திறமையான நடிகைகளை பார்த்தாலே இவனுங்களுக்கு ஒரு அலர்ஜி. நடிக்கிற நடிகைகளை விட கூட படுக்குற நடிகைகளுக்கு தான் ரொம்ப ஆதரவு குடுக்குறாங்க. அதிலேயும் ஒரு நடிகை தனக்கு கல்யாணம்னு சொல்லிட்டா போதும், எவ்வளவு அழகு, திறமை இருக்கிற, இவ்வளவு ஏன் பல நாள் கூட படுத்த நடிகையாயிருந்தாலும் அவங்களை விட்டுட்டு துண்டை காணோம், துணியை காணோம்னு இயக்குனர்கள் எல்லாமே ஓடிப்போயிடுறாங்க. அதனால மீரா ஜாஸ்மின் பத்தி தமிழ் பத்திரிகைகள் எழுதுறது ஒன்னும் புதுசு இல்லை.

ஆனா மலையாளத்துலே நிலைமையே வேற. நீங்க ஷகீலா படங்களையும், 'அவளுடே ராவுகள், அஞ்சரைக்குள்ள வண்டின்னு' சில 'காவியங்'களை பார்த்துட்டு ஒரு கற்பனையிலே இருந்தீங்கன்னா கஷ்டம். அங்கே ஒரு நடிகை காதல்னு அறிவிச்சாலும், கல்யாணம் பண்ணிக்கிட்டாலும், அவங்க திறமையான நடிகையாயிருந்தாங்கன்னா அவங்களை தொடர்ந்து நடிக்க வச்சுட்டே இருப்பாங்க. காரணம் - கமல், சத்யன் அந்திக்காடு, ப்ளெஸ்ஸி, லெனின் ராஜேந்திரன்னு கலைக்காக உயிரை குடுக்க ஒரு இயக்குனர் பட்டாளமே இருக்கு. படுக்க அலையுற கூட்டம் 'main stream'லே கொஞ்சம் கம்மி தான். கல்யாணத்துக்கப்புறம் 'ஸாரி! நான் நடிக்கிறதா இல்லை'-ன்னு மஞ்சு வாரியரும், சம்யுக்தா வர்மாவும் ஸ்டேட்மென்ட் விட்டப்புறமும் இன்னும் அவங்க ரெண்டு பேரும் நடிக்க வரமாட்டாங்களான்னு எல்லாரும் எதிர்பார்த்திட்டே இருக்காங்க. கல்யாணம் ஆன அவங்களுக்கே இந்த நிலைமைன்னா இளமையும் திறமையும் இருக்கிற மீரா ஜாஸ்மினுக்கு எதுவும் பாதிப்பு வருமா என்ன?

{mosimage}சத்யன் அந்திக்காடு இப்போ எல்லாம் இளையராஜாவும், மீரா ஜாஸ்மினும் இல்லாம படமே பண்ண மாட்டேங்குறார். தொடர்ச்சியா 4வது முறையா மீரா - சத்யன் - இளையராஜான்னு கூட்டணி ஓடிட்டு இருக்கு. இத்தனைக்கும் ஹீரோவே இல்லாம இந்த கூட்டணி 'அச்சுவிண்டே அம்மா'விலே ஜெயிச்சும் இருக்கு. கமல் இன்னைக்கு 'கதாநாயகியை சுத்தி கதையெழுதினா அது நிச்சயம் மீரா ஜாஸ்மினா தான் இருக்கனும்'னு சொல்றார். இத்தனைக்கும் அவர் படங்களிலே ஆனானபட்ட ஹீரோயினுக்கே அதிகமா 2 முறை தான் வாய்ப்பு கொடுப்பார். ஆனா தன் கொள்கையையும் தளர்த்தி திறமையான மீரா ஜாஸ்மினுக்கு இப்போ 4வது படம் கொடுத்திருக்கார். கூட ஆக்டு குடுக்குறது 'நரேன்'. சாருக்கு இது 3வது படம் - நம்ம அம்மணியோட. 'பிறவி', 'அகம்'-ன்னு உலக சினிமா வித்தகர்களையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த ஷாஜி கருண் தன் 'குட்டி ஷ்ராங்கு' படத்துக்கு மீரா ஜாஸ்மின் தான் வேணும்னு பிடிவாதமா ஒப்பந்தம் பண்ணியிருக்காரு. கூட நடிக்கிறது மம்மூட்டி.

தன் திறமைக்கும், இமேஜுக்கும் மலையாள திரையுலகமே சரின்னு நம்ம மீராக்கா முடிவு பண்ணி கேரளாவிலேயே செட்டிலாயிடுவாங்க போல. தெலுங்கிலே ஜகபதி பாபு கூட ஒரு படம் ஒத்துகிட்டு இருக்காங்க. தமிழிலே நடிக்கிறதா இருந்த 'பயணிகள் கவனத்திற்கு' படத்திலேருந்து விலகிட்டாங்களாம் (காதலை அறிவித்ததாலே படத்திலேருந்து விலக்கிட்டாங்களோ?). அம்மணி பைசா விஷயத்திலே ரொம்ப சூட்டிகை. தமிழிலேயும், தெலுங்கிலேயும் முதல்ல சம்பளம், பின்னே கதைன்னு பேசி துட்டு தேத்தி ஒவ்வொரு சென்னை, எர்ணாகுளம், பெங்களூர், கல்கத்தா-ன்னு ஒவ்வொரு ஊரிலேயும் ஒரு வீடுன்னு வாங்கி போட்டிருக்காங்களாம். மலையாளத்துல இவங்க தான் அதிகம் சம்பளம் வாங்குற நடிகன்னாலும் தமிழிலேயும், தெலுங்கிலேயும் வாங்குறதிலே பாதி தானாம். அதனால பேர்/புகழ்/விருதுகளுக்கு மலையாள படம், காசுக்கு தமிழும், தெலுங்கும்னு தெளிவா இருக்காங்க.

{mosimage}இன்னும் 2 வருஷத்துக்கு கல்யாணம் இல்லைன்னு சொல்றாங்க. ஆத்துக்காரர் ஆட்சேபிக்கலைன்னா கல்யாணத்துக்கபுறம் கூட நடிப்பாங்கன்னு எதிர்பார்க்கலாம். மலையாளத்துல இயக்குனர்களுக்கு 'ஹீரோயின் படம்'னு பேனாவை திறந்தாலே பிள்ளையார் சுழி மாதிரி மீரா ஜாஸ்மின்னு தான் எழுதி ஆரம்பிக்கிறாங்க. அதனால மீராக்கா, கல்யாணத்துக்கப்புறமும் குறைவா நடிங்க... நிறைவா நடிங்க... ஆனா நடிச்சுகிட்டே இருங்க... இப்போ எல்லாம் லட்சுமிகரமான மூஞ்சுகளை திரையிலே பாக்குறது ரொம்ப அபூர்வமாயிடுச்சு... உங்களை மாதிரி இருக்கிற 1-2 பேரும் நடிக்கிறத நிறுத்திட்டா, நானும் பேசாம படம் பாக்குறத நிறுத்திட்டு அப்பப்போ ப்ளூ ஃபிலிமே பாத்துக்கலாம். அதிலேயாவது ஒரு நேர்மை இருக்கு, இவளுங்க நடிக்கிறேன்னு சொல்லிகிட்டு அவுத்து காமிக்கிற போலித்தனம் அதுல இல்லை. அதெல்லாம் சரி! யாரச்சும் 'கல்கத்தா நியூஸை' சென்னையிலே ரிலீஸ் பண்ணுங்கப்பா! ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பேப்பர் பார்த்து தாவு தீர்ந்து போகுது.