Tamil
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

{mosimage}தமிழ் படம் பார்த்தே கொஞ்சம் நாட்கள் ஆகிவிட்டது. வேலை பளுவினால் அல்ல... பார்ப்பதற்கு தரமாக எந்த படமும் இல்லை. சமீபத்தில் எல்லோரும் 'கற்றது தமிழ்' படத்தை பற்றி ஆஹா... ஓஹோ என்று புகழ்ந்து தள்ளினார்கள். Infact அந்த படம் வரும் முன்பு நானும் அதை பார்க்கவேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் ஒரு திரைவிமர்சனம் நிகழ்ச்சியில் ஒரு குறிப்பிட்ட காட்சியை பார்த்தவுடன் என் முடிவை மாற்றிக்கொண்டேன். எல்லோருக்கும் பிடித்த ஒரு சூப்பர் ஹிட் படம் எனக்கு பிடிக்காமல் போவது இது முதல் முறை அல்ல. எல்லா விஜய்யின் படங்களும் அபத்தங்களின் உச்சக்கட்டம் & தமிழ் சினிமாவின் அவமான சின்னங்கள். பல நேரங்களில் எனக்கு பிடித்த படம் ஓடாத தோல்வி படமாக மாறிவிடுவதும் உண்டு. ஓரு முறை எனக்கு சந்தேகம் வந்தது... நாம் ஒரு வேளை 'Out of Sync'-ல் வளர்ந்து விட்டோமோ என்று. பின்பு 'இது எனக்கு பிடித்தது, பிடிக்காதது, இதை மற்றவர்கள் influence செய்யவேண்டிய அவசியம் இல்லை' என்று ஒரு திமிர் வந்துவிட்டது. இதோ சில படங்கள் வணிகரீதியாக வெற்றி பெற்றவை, இருப்பினும் என்னை தியேட்டரை விட்டு தூர ஓட வைத்த படங்கள்.

{mosimage}1. கற்றது தமிழ்:- இந்த வரிசையில் சமீபத்திய வரவு. நான் பார்த்த அந்த காட்சி 'இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து இருக்கும் தமிழுக்கு இரண்டாயிரம் ரூபாய் சம்பளம் கூட இல்லை, இப்போ வந்த பொட்டியை (கம்ப்யூட்டர்) வேலை செய்ய வைக்க இருபதாயிரம் கொடுக்கிறான்.' என்ன ஒரு அபத்தமான வசனம். நாயகனுக்கு தமிழ் மேல் ஒரு காதல் இருந்திருக்கலாம், அதனால் கல்லூரியில் தமிழ் எடுத்து படித்திருக்கலாம், ஆனால் தமிழ் என்பது ஒரு மொழி மட்டுமே, தொழில்நுட்பம் அல்ல. வேலை செய்பவர்கள் சம்பளம் வாங்குவது தொழிலுக்காக, மொழிக்காக அல்ல. B.A என்பதே அந்த காலத்தில் ஆங்கிலேயர்களால், தங்களிடம் வேலை செய்யும் Clerk-களை தயார் செய்ய, ஆங்கிலத்தோடு ஒரு புரிதல் வர ஏற்படுத்தப்பட்ட டிகிரி. பிற்காலத்தில் கல்யாண பத்திர்கையில் பெயருக்கு பின்னால் ஏதேனும் டிகிரி போட வேண்டுமே என்பதற்காக B.A / M.A படித்தார்களே தவிர, அதனால் மிகப்பெரிய உபயோகம் எல்லாம் இல்லை என்பது அதை படித்தவர்களுக்கே தெரியும்.

'கற்றது தமிழ்' நாயகனுக்கு தமிழ் மேல் காதல் இருந்திருந்தால், logical-ஆக அவனுடைய மதிப்பெண்களுக்கு மருத்துவமோ / பொறியியலோ எடுத்து படித்து, அதில் தமிழில் தற்காலத்துக்கேற்ப மொழிபெயர்த்தோ அல்லது சாமானியருக்கும் புரிகிற நிலைக்கு எடுத்து போயிருக்கலாம். அதை விட்டுவிட்டு தவறான பாதையில் போய், மக்களிடம் இனிமேல் தமிழுக்கு மதிப்பு இல்லை என்ற மாயையை உருவாக்கிவிட்டது இந்த படம். நேசம் வேறு, யதார்த்தம் வேறு. ஏற்கனவே நம் அருமை தமிழ் மக்கள் ஆங்கிலத்தையும் அறிவையும் ஒன்றாக குழப்பிக்கொள்கிறார்கள். இந்த நிலையில் இது போன்ற படங்கள் மக்களை தமிழிடம் இருந்து தூரப்படுத்திவிடும். இது புரியாமல் குழப்பமாக எடுக்கப்பட்ட இந்த படம் நான் பார்க்க விரும்பாத படங்களில் ஒன்று.

{mosimage}2. காதல்:- நான் அபுதாபியில் இருந்தபோது இந்த படம் ரிலீஸாகியிருந்தது. அடிப்படை கருவிலேயே எனக்கு உடன்பாடு இல்லாத போதிலும், உண்மைகதை என்று விளம்பரப்படுத்தப்பட்டதால் சன் டி.வியில் திரையிடப்பட்டபோது பார்த்தேன். நான் மெய்மறந்து போய்விட்டேன் - படத்தினால் அல்ல, சந்தியாவின் நடிப்பால். அந்த பெண்ணை தவிற வேறு யார் நடித்திருந்தாலும் இவ்வளவு தத்ரூபமாக நடித்திருக்க முடியுமா என்று தெரியவில்லை, குறிப்பாக தாலியறுக்கப்படும் அந்த காட்சியில். ஆனால் எனக்கு அந்த காட்சியில் பரிதாபமே வரவில்லை. முதலில்14 வயதில் பெண் காதலித்து ஓடிவிட்டாள் என்ற வெறுப்பில் அந்த பெற்றோர்கள் நடந்துகொண்ட விதம் இயல்பானதே. மேலும் அவ்வளவு பணக்கார பெண் தராதரம் தெரியாமல் மெக்கானிக் பையனோடு ஓடிப்போவது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது - இந்த காதல் படங்களை எடுக்கும் தயாரிப்பாளர்கள்/ இயக்குனர்கள் உட்பட. அந்த பெண்ணின் தந்தையின் நிலைமையில் நான் இருந்திருந்தால் ஒருவேளை கொன்றே போட்டிருப்பேன். அதனால் இந்த 'காதல் காவியம்' என் மன்சை தொடவே இல்லை.

{mosimage}3. லவ் டுடே:- நான் பொறியியல் கல்லூரியில் இருந்தபோது வெளியாகியிருந்த இந்த படம் வாலிபர்களின் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. என் தங்கை அவள் தோழிகளுடன் இந்த படத்துக்கு போயிருந்தபோது, நானும் துணைக்கு போயிருந்தேன். படம் முழுக்க ஆபாசம். நாயகன் படிப்பதை தவிர எல்லாம் செய்கின்றான். நாயகியோ படிப்பதை தவிற வேறெதுவும் செய்வதில்லை, காரணம் அவளுடைய sadist அப்பாவிடம் இருந்து விடுதலை பெற அவளுக்கு படிப்பே ஒரே வழி. நாயகனின் பொறுப்பில்லாத தனத்தால் அவன் தந்தை இறந்த போது கடைசி காரியங்கள் கூட செய்யமுடியவில்லை. ஆனால் இதற்கெல்லாம் காதலிக்கப்பட்ட அந்த பெண் தான் என்பது போல மாயையை உருவாக்கி, கடைசியில் நாயகனை கடற்கரையில் ஒரு நீண்ட வசனம் பேசவைத்து... தாங்கமுடியலை. 'Even my shit would have been better than this crappy shit'. நான் வெளியே நிற்கிறேன் என்று சொல்லிவிட்டு பாதி படத்திலேயே எழுந்து வந்துவிட்டேன். என் அப்போதைய நண்பர்கள் இதற்காக என்னை 'abnormal' என்று விமர்சித்தது தனிக்கதை. இந்த படம் சில வருடங்களுக்கு பிறகு ஹிந்தியில் 'Kya yehi pyar hai?' (இது தான் காதலா?) என்று ரீமேக் செய்யப்பட்டு, ஹிந்தி விமர்சகர்கள் 'one sided' என்று சகட்டு மேனிக்கு திட்டி தீர்த்து, box-office-ல் படுதோல்வியடைந்த போது எனக்கு சந்தோஷமாக இருந்தது. தமிழர்கள் சினிமாவில் கதாநாயகன் என்னத்தை செய்தாலும் 'சரி' என்று ஏற்கும் ஆட்டுமந்தை மனநிலை தான் பரிதாபத்திற்குறியது.

{mosimage}4. அந்நியன்:- இதுவும் நான் அபுதாபியில் இருந்தபோது வந்திருந்தது. இதன் கதையை கேட்டவுடன் 'ஷங்கர் ஒரே கதையை வைத்துகொண்டு எத்தனை வருஷத்துக்கு தான் ஓட்டுவான்?' என்று தோன்றியது. திருட்டு விசிடி ஓசியில் கிடைத்தது. சரி பொழுது போகனுமே என்று போட்டேன். கருமம்... 20 நிமிஷம் கூட பாக்கமுடியவில்லை. பாட்டெல்லாம் கூட கேவலமாக இருந்தது. ஷங்கர் படத்தில் AR ரகுமான் இல்லாத குறை அப்போது தான் தெரிந்தது. குறிப்பாக 'ரண்டக்க ரண்டக்க' பாடலில். அதை கேட்கும் போதே காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றுவதை போல நாராசமாக இருக்கும். ஆனால் அந்த பாடல் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமானது. நண்பர்கள் சொன்னார்கள் 'படம் இந்தியாவில் சூப்பர் ஹிட்' என்று. தலையில் அடித்துக்கொண்டேன்.

இது வெறும் டிரைலர் தான், காரணம் மிகபெரும்பாலான 'வெற்றி' தமிழ் படங்களை நான் பார்ப்பதே இல்லை. சராசரியாக வருடத்திற்கு 4-5 தமிழ் படங்கள் மட்டுமே பார்ப்பது வழக்கம். வித்தியாசமான பரீட்சார்த்த படங்கள் வேண்டும் என்றால் இருக்கவே இருக்கிறது பாலிவுட். படம் நன்றாக இருக்கிறதோ இல்லையோ, அவர்களின் அந்த 'experiment' முயற்சி எனக்கு பிடித்திருக்கிறது.