Sujatha
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பிரிவோம் சந்திப்போம்மனதில் நின்ற, higher benchmarks ஏற்படுத்திய ஒரு நாவலுக்கு sequel எனப்படும் இரண்டாம் பாகம் எழுதுவது எவ்வளவு கஷ்டம் என்பதை எண்டமூரியிடம் கேளுங்கள். மனிதர் 'துளசிதளத்'தில் score செய்து, அதை 'மீண்டும் துளசிதளத்'தில் தொலைத்தார். இப்போது சுஜாதாவின் 'பிரிவோம் சந்திப்போம்' இரண்டாவது பாகத்தை படிக்கலாமா? வேண்டாமா? என்று ஏகப்பட்ட குழப்பங்கள். கடைசியாக 'சரி! புத்தகத்தை வாங்கிவிட்டோம் எனவே படித்து தான் வைப்போமே' என்று படிக்க ஆரம்பித்தேன். எனது 'worst fears come true' போல ஆரம்பித்த நாவல், கடைசியில் மனதில் சிம்மாசனமிட்டு உட்கார்ந்து கொண்டது. எனக்கு முன்பு என் அம்மா இதனை படித்துவிட்டார். எனவே அவரிடம் நிறைய இதனை பற்றி பேசினேன். A worthy sequel for a successful prequel.

Page 1

இது சுஜாதா முதன் முதலாக 80-களில் அமெரிக்கா போய் வந்தபின்பு எழுதிய நாவலாம். அந்த பிரமிப்பு இந்த நாவலின் ஆரம்பகட்டத்தில் தெரிகிறது. ஏற்கனவே ஏகப்பட்ட apprehension-களுடன் படிக்க ஆரம்பித்ததாலோ என்னவோ எனக்கு வெறும் travelogue போல பட்டது. அமெரிக்காவில் இது இப்படி இருக்கிறது, அது அப்படி இருக்கிறது என்று Documentry-தனமான ஆரம்பங்கள். பாவநாசத்து விடலைபையன் அமெரிக்காவை பிரமிப்புடன் பார்ப்பது மிக இயல்பாக இருக்கிறது. நான் அடிக்கடி சொல்வது போல - எனது small town sensibilities ஒத்துப்போகிறது போல.

அது போல குறிப்பிட்டு சொல்லவேண்டிய விஷயம் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கலாச்சார குழப்பங்கள் மிகவும் இயல்பாகவும் அதே நேரம் தெளிவாகவும் விவரிக்கப்பட்ட விதம். அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகளை வைத்திருப்பவர்களின் நிலைமை. வைத்தியநாதனின் கதாபாத்திரம் மூலம் சுஜாதா அழகாக தெளிவுபடுத்தியிருக்கிறார். ஒரு இடத்தில், பிட்ஸ்பர்க் வெங்கடாசலபதி கோவிலுக்கு ரகு - ரத்னா நிச்சயதார்த்தத்துக்கு போகும் காட்சியில், 'காருக்கு வெளியில் அமெரிக்கா, உள்ளே மைலாப்பூர்' என்று ஒரே வரியில் இந்தியர்கள் அமெரிக்காவின் கலாச்சாரத்துக்கு மாற்றிக்கொள்ள முடியாமல் தங்கள் அடையாளத்தை retain செய்து வருவதையும், வைத்தியநாதன் தன் பெண்ணுக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணிவைக்க துடிக்கும் காரணதிலும் அதை பளிச்சென்று படம்போட்டு காட்டியிருக்கிறார்.

அடுத்து அமெரிக்க வாழ் இந்தியர்களின் மணவாழ்க்கையை நுண்ணோக்கியின் அடியில் வைத்து ஆராய்ந்திருக்கிறார். மோகன்ராமும், மதுமிதாவும், ராதாகிருஷ்ணனும் இந்த marriage scanner-ல் உட்படுத்தப்பட்டவர்கள். மோகன்ராம் அமெரிக்க பெண்ணை திருமணம் புரிந்துகொண்டு விவாகரத்து பெற்று குழந்தைகள் வரும் வார இறுதிக்காக வாழ்வதன் மூலம் 'மேற்கத்திய கலாச்சாரமும், இந்திய கலாச்சாரமும் திருமண பந்ததில் நிலைத்திருப்பது கடினமான விஷயம் என்று நிலைநாட்டியிருக்கிறார். மதுமிதாவும், ராதாகிருஷ்ணனும் அமெரிக்காவில் அரங்கேறும் நாடக கல்யாணங்களின் பிரதிநிதிகளாக வலம் வருகின்றனர். ரகுவை நாடும் மேரியின் கதாபாத்திரம் அமெரிக்காவின் கல்யாண வாழ்க்கையை மெலிதாக கோடிட்டு காட்டியிருக்கிறது.

தனது கடமையை மறந்து காதலியை தேடுவது ஆரம்பத்தில் சற்று எரிச்சலை மூட்டினாலும், நம்மை அடுத்து என்ன நடக்கும் என்று எதிர்பார்க்கவே வைக்கிறது. கடைசி வரை ரகு ஒழுங்காக படிக்கிறானா, அவன் தந்தையின் எதிர்பார்ப்புக்கேற்ப நல்ல பையனாக இருக்கிறானா என்று பார்த்தால் சற்று சந்தேகமான பதில் தான் கிடைக்கும். மேரியிடம் இருந்து தன் 'கற்பை' காப்பாற்றிக்கொள்ள முயற்சிக்கும் நொடிகள் மெலிதாக ஒரு புன்னகையை ஒட்ட வைக்கிறது. மதுமிதா குழந்தையிலிருந்து பெண்ணாக ஆனாளா என்று பார்த்தால், கொஞ்சம் திகீரென்று இருக்கிறது. இந்திய பெண்கள் அமெரிக்காவின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் தடம் மாறுவதும் கொஞ்சம் அதிர்ச்சியாக தான் இருக்கிறது.