Sujatha
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சுஜாதாOne thing leads to another... and we end up experiencing new pleasures.. சுஜாதாவின் 'பிரிவோம் சந்திப்போம்' நாவலின் முன்னுரையில் அதன் நாயகி நிதியை 'பிரிவோம் சந்திப்போம்' மதுமிதாவுடன் ஒப்பிட்டு இருப்பார். எனவே கோவையில் புத்தகம் வாங்க போனபோது 'பிரிவோம் சந்திப்போம்'-இன் இரண்டு பாகங்களையும் வாங்கினேன். சுஜாதாவிடம் இருந்து ஒரு hard hitting stark நாவலை எதிபார்த்த எனக்கு இனிய அதிர்ச்சி. 24 வயதில் வரும் முதல் காதலை அதன் அப்பாவித்தனம் குறையாமல், பிரமிப்பு நீங்காமல், மிக அழகாக, தெளிந்த நீரோடையின் நடையை போல சலசலத்திருக்கிறார்.

Page 1

இந்த முறை கதை நடப்பது திருநெல்வேலி பாபனாசத்தில், குறிப்பாக ஒரு அணைக்கட்டு பின்புலத்தில். அதில் வேலை பார்க்கும் குடும்பத்தினர்களில் இருப்பவர்கள் இதன் கதாபாத்திரங்கள். சுஜாதாவின் வர்ணனைகள் நம் கண் முன் திரைவிரித்து அதில் ஓர் அழகான உலகத்தை திரையிடுகிறது. நான் உருவகபடுத்திக்கொண்ட இடங்கள் - நான் பார்த்த, மிகவும் ரசித்த தொடுபுழா ரப்பர் தோட்டங்களும், அருவிகளும், மலம்புழாவின் அணைக்கட்டு பகுதிகளும். மேலும் கதாபாத்திரங்களுக்கு என் தேர்வு - ரகுவாக இளம் வயது வினீத், மதுமிதாவாக 'நிவேத்யம்' பாமா, கோவிந்தராஜுவாக 'ராகவன்', மற்றும் கோபிநாத்-ஆக 'மூன்று முடிச்சு' நடராஜன், அவர் மனைவியாக 'ஃபாத்திமா பாபு', ஜெயந்தியாக 'மலைசாரல்' சீமா.

கதை ரகுபதியின் பார்வையில் நகர்கிறது. எனவே ஒரு moon struck இளைஞனை இயல்பாக சித்தரித்திருக்கிறார். கதையில் மிகப்பெரும் திருப்பம் என dramatic-ஆக எதுவும் இல்லை. Infact நாம் பிற்பகுதியில் ஏதேனும் துரதிர்ஷ்டம் நடக்கும் என தயாராகிவிடுகிறோம் ஆனால் அது என்னவாக இருக்கும் என்பது சஸ்பென்ஸ். அதுவரை முதல் முக்கால்வாசி நாவலுக்கு திகட்ட திகட்ட காதல். நடுவில் ஒரு வரி வருகிறது 'என்ன இது.. வில்லனே இல்லாத காதல்' என்று... Too good to be true. இது நம் மனதை மாட்டியிழுக்க சுண்டப்பட்ட தூண்டில் என்று அறியாமல் நாமும் அந்த காதல் நதியில் ஒரு விதமான voyeuristic pleasure - உடன் திளைக்கிறோம். காதலில் வேலை நிமித்தம் வரும் பிரிவை இன்ப வேதனைகளை சுவாரசியமாக எழுதியிருக்கிறார் சுஜாதா.

சுஜாதா எதிர்பார்த்தது போல இரை சரியாக தூண்டிலில் சிக்குகிறது. அதாவது நாம் ரகுவோடு சேர்ந்து ஒரு roller coaster ride-க்கு தயாராகிறோம். குறிப்பாக மூன்றாவது பாகத்தில் (130வது பக்கத்தில்) இருந்து நம் மனதில் வாழைப்பழத்தில் ஊசி போல மெதுவாக வலியை ஏற்றுகிறார். பகலென்றால் இரவு வரும் என்ற நியதிப்படி, சொட்ட சொட்ட காதல் மழையில் நனைந்த நாம், கண்ணீரையும் வடிக்கும் நிலைக்கு போகிறோம். ரகுவின் கல்யாணம் நிற்கும் அந்த சூழலை ஒரு வித அசாதாரண pressure-ஐ உருவாக்கி நம்மை tension-இன் உச்சத்துக்கே கொண்டுபோகிறார். திரை வடிவம் போல குளோசப் காட்சிகள், பின்னணி இசை எதுவும் இல்லாமல், தன் எழுத்துக்களாலேயே அந்த பாதிப்பை நம்முள் இறக்குகிறார்.