Girls
Typography
{mosimage}இது சுஜாதா எழுதிய 'அனிதாவின் காதல்கள்'ஐ விட சுவாரசியமானது. பரபரப்பும் மீரா ஜாஸ்மினும் இரட்டை பிறவிகள். மீராவின் நடிப்புத்திறமையைவிட அந்தரங்க வாழ்க்கையே அதிகம் விவாதிக்கப்பட்டது. பல நேரங்களில் மீராவே இந்த சர்ச்சைகளுக்கு தீனிபோட்டதாகவும் கிசுகிசுக்கப்படுவதுண்டு. 'சூத்ரதாரன்' படம் மூலம் மலையாளத்தில் லோகிததாஸ் அறிமுகம் செய்த இந்த நடிப்பு புயலுக்கு பெரிதாக எதிர்பார்ப்பு இருந்தது. இதே லோகிததாஸ் அறிமுகம் செய்த மஞ்சு வாரியர் மலையாள திரையுலகின் இளவரசியாக வலம் வந்ததும், சத்யன் அந்திகாடுடன் இணைந்து அறிமுகம் செய்த சம்யுக்தா வர்மா கோலோச்சியதும், அதே இயக்குனரின் அறிமுகம் என்பது மட்டுமல்ல இந்த எதிர்பார்ப்பின் காரணம். அறிமுகமாகும் ஃபாசிலின் மகனோடு நடிக்க ஃபாசில் மீராவை அணுகியதாகவும், அதற்கு மீரா அவரிடமே கதை கேட்டதாகவும் மலையாள பத்திரிகைகள் எழுதியது. அதே சமயம் அனைத்து மலையாள பத்திரிகைகளுக்கும் ஒரு தபால் கார்டில் 'குறிப்பிட்ட தினத்தன்று மேற்படி ஹோட்டலில் லோகிததாஸ்' உடன் மீரா இருந்ததாகவும், வேண்டுமானால் சோதித்துக்கொள்ளுங்கள் என்று செய்தி வந்தது. இது போதாதா மஞ்சள் பத்திரிகைகளுக்கு. இதை அனுப்பியது மீராவின் முதல் காதலன் என்றும், மீரா ஜாஸ்மின் நடிப்பது பிடிக்காததால் செய்ததாக சொல்லப்பட்டது.

Gossips 1 to 4

{mosimage}'லோகி அங்கிள்' என்று மீரா என்ன தான் பாசமாக கூப்பிட்டாலும், பத்திரிகைகள் சொன்னது வேறு. இதற்கு வலு கூட்டுவது போல மீராவுக்காக மட்டுமே கதைகள் எழுதி இயக்கினார் லோகிததாஸ். அவரது இயக்கத்தில் வந்த 'கஸ்தூரிமான்' மீராவுக்கு நல்ல பேரை வாங்கி தந்தது. இந்த படத்தை பார்த்துவிட்டு தான் மணிரத்னம் தனது 'ஆயுத எழுத்து' படத்தில் வாய்ப்பளித்ததாக கூறப்படுகிறது. தான் இயக்குனர் கமலுக்காக எழுதிய 'சக்ரம்' (இந்த படத்தின் மூலமாகத்தான் 'Bollywood'-இன் இன்றைய புயல் வித்யா பாலன் அறிமுகப்படுத்தப்படுவதாக இருந்தது) நிறுத்திவைக்கப்பட்டவுடன், அதை மீண்டும் தூசி தட்டி மீராவையும், பிருத்விராஜையும் வைத்து இயக்கினார். படுதோல்வி அடைந்த இந்த படத்தை 4 நாளேனும் ஓடும் அளவுக்கு பிரபலப்படுத்தியது மீரா-லோகி கிசுகிசு.

இதனிடையில் லோகிததாசின் அறிவுரைபடியும், குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி டி.வி.சந்திரனின் இயக்கத்தில் சம்பளம் இன்றி 'பாடம் ஒன்னு ஒரு விளாபம்' என்ற படத்தில் நடிக்கபோனார். அந்த படத்தை தயாரித்தது மந்திரியின் மகனான திரு. ஆர்யன் ஷௌகத் என்பவர், ஏற்கனவே திருமணம் ஆனவர். படம் முடியும் முன்பே ஆர்யனுக்கும் மீராவுக்கும் திருமணம் முடிந்துவிட்டதாக செய்திகள் வெளியாயின. ஆர்யனின் பலமான சிபாரிசாலேயே மீராவுக்கு தேசிய விருது கிடைத்ததாக சில பொறாமை உள்ளங்கள் விசும்பின. ஆர்யனின் அடுத்த படமான 'தெய்வ நாமத்தில்..' என்ற படத்தில் பாவனா-வை ஒப்பந்தம் செய்தவுடன் கிசுகிசுக்கள் அடங்கி போயின. இது காதல் நெ. 3.

'பாடம் ஒண்ணு ஒரு விளாபம்' (முதல் பாடம்: அழுகை) படத்தின் மூலம் தேசத்தின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்திருந்த மீரா, மா நில அளவில் பாராட்டு கூட்டத்தில் மேடையில் தன் குடும்பத்தினர் தன் சொத்துக்களை பிடுங்கிகொண்டதாக அழுதது லோகிததாஸின் திரைக்கதையில் உருவான வெற்றிகரமான நாடகம் என்று கூறப்பட்டது. பின்பு இதே லோகிததாஸ் மீராவை வைத்து தமிழில் எடுத்த 'கஸ்தூரிமான்' தோல்வி அடைந்ததும், அதில் ஏற்பட்ட நஷ்டத்துக்காக ஆலுவாவில் ஆற்றோரத்தில் அமைந்திருந்த வீட்டை விற்றதும், மீரா லோகியின் அடுத்த படத்துக்கு கால்ஷீட் தர மறுத்ததும், பகிரங்கமாக லோகிததாஸ் மீராவை 'வெறும் hype' என்று திட்டியதும் யாரும் எதிர்பார்க்காத அதிரடி திருப்பங்கள்.

{mosimage}ஊடாக மீரா ஜாஸ்மினுக்கும், பிருத்விராஜுக்கும் 'சக்ரம்' படத்தின் மூலம் நட்பு ஏற்பட்டதாகவும், அதற்கு லோகிததாசும் பச்சை கொடி காட்டிவிட்டதாகவும் 'side track' ஓட்டப்பட்டது. 'ஆய்த எழுத்து' படபிடிப்பில் சொல்லிக்கொள்ளாமல் மீரா ஜாஸ்மின் பிருத்வி வீட்டு பால் காய்ச்சுக்கு போனதால் மணிரத்னம் 'tension' ஆனதாகவும், அதனாலேயே நன்றாக நடித்தும் மீராவை பற்றி எதுவும் சொன்னதில்லை என்ற வதந்தியும் உண்டு. அழகாக இருந்தும் அதிர்ஷ்டம் இல்லாத காரணத்தால் 25 படங்களில் நடித்த பின்பும் புதுமுகமாகவே இருந்தார் பிருத்வி. மீராவின் விஸ்வரூபத்துக்கு முன்பு பிருத்விராஜ் காணாமல் போனார், காதலும் கூட. இவ்வாறாக காதல் நெ. 4 முறிந்தது.

மீராவின் மீதிலிருந்த பாசத்தால் (மயக்கத்தால்?) மற்ற இயக்குனர்களையும், கதானாயகர்களை மதிக்காததும், மலையாள திரையுலகத்தினரால் ஒதுக்கி வைக்கப்பட்ட லோகிததாஸ் இன்று மீராவின் பேரை கூட கேட்கப்பிடிக்காத நிலையில், முற்றிலும் புதுமுகங்களை வைத்து,புதிய கேமிராமேன், இசையமைப்பாளர்களை வைத்து 'நைவேத்தியம்' என்ற படத்தை எடுத்து வருகிறார். நெ. 2 மற்றும் நெடுங்கால காதல் இவ்வாறாக முற்றும்.

Gossips 5 to 7

லோகித்தாஸுடன் பிணக்கு ஏற்பட்டதும், பாதுகாப்பிற்காக தன்னை காமத்துடன் துரத்தி வந்த சென்னை வாழ் கேரளத்து போலீஸ் அதிகாரியுடன் நட்பை ஏற்படுத்திக்கொண்டதாகவும், அதற்கு கன்னட பிரசாத் பகீரத பிரயத்னம் செய்து 'மல்லிகை' நடிகையை கூட்டிகொடுத்த்தாகவும் மஞ்சள் பத்திரிகைகள் கிளுகிளுப்பூட்டின. இவ்வாறாக மீராவின் காதலர்கள் வரிசையில் ஐந்தாவதாக வந்து போனார் இந்த ஐ.பி.எஸ்.

{mosimage}தமிழ் சினிமாவின் 'play boy' ஆக தன்னை முன்னிறுத்திய SJ. சூர்யா-வுக்கு அதே இமேஜே வில்லனாகி போனது. அவரது 'திருமகன்' படத்துக்கு நாயகியர் அனைவரும் சொல்லி வைத்தார் போல நடிக்க மறுத்துவிட்டனர். தொடக்கூடாது, கிளுகிளுப்பான காட்சிகள் கூடாது என்று ஏகப்பட்ட நிபந்தனைகளுடன் நடிக்க வந்தார் மீரா ஜாஸ்மின். ஆனால் சூர்யாவுக்கும் மீராவுக்கும் துவங்கிய நட்பின் அடிப்படையில் எல்லா கண்டிஷன்-களும் காற்றில் விடப்பட்டு படு நெருக்கமாக நடித்திருந்தார். உண்மையான இயக்குனரான இரத்னகுமார் தான் எழுதிய கதையை SJ சூர்யா மீராவுக்கு சாதகமாக மாற்றிவிட்டதாக புகார் கூறினார். இதற்கிடையில் மீராவுக்கும், சூர்யாவுக்கும் வேளாங்கன்னியில் வைத்து ரகசிய திருமணம் நடந்துவிட்டதாக செய்திகள் கசிய விடப்பட்டன. வழக்கமாக தனது நாயகிகளோடு இணைத்து கிசுகிசு வெளியிடுவது சூர்யாவின் பழக்கம். எனவே எல்லோருக்கும் இந்த கிசுகிசுவின் பின்னணியில் இருப்பது யார் என்று தெரிந்துவிட்டது. 'அய்யக்கா'வாக வாழ்ந்து காட்டியபோதும், படம் ஓடாததால் சூர்யா-மீரா காதல் நெ. 6-க்கு மூடுவிழா நடத்தப்பட்டது.

இம்முறை சற்று பலமாகவே கிசுகிசுக்கப்படுவது 'மாண்டலின்' ஸ்ரீனிவாசின் சகோதரரான 'மாண்டலின்' ராஜேஷுடன். இவர்கள் இருவரும் திருப்பதியில் வைத்து கடந்த வாரம் திருமணம் செய்துகொண்டதாக 'தினமலர்'-ல் வெளியான பின்பு தான் இந்த 'மாண்டலின்' ராஜேஷ் யார் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டது. வித்யாசமாக திரையுலகத்தில் இருந்து நடிகரோடு கிசுகிசுக்கப்படாமல், கர்னாடக இசைத்துறையில் உள்ள புள்ளியோடு கிசுகிசுக்கப்படுவது சஸ்பென்ஸை கூட்டியுள்ளது. வழக்கம்போல மீராவின் தரப்பிலிர்ந்து வெறும் மௌனமே பதில். (எத்தனை கல்யாணங்களை பார்த்திருக்கிறார்). காதலர் நெ. 7 ராஜேஷ் வழக்கம்போல நாங்களிருவரும் 'நல்ல நண்பர்கள்' என்ற பல்லவியை பாடுகிறார்.

{mosimage}இத்தனை காதல் கிசுகிசுக்களில் எதுவும் மீராவை அசைத்து பார்க்க முடியவில்லை. இதற்கு மீரா தேர்ந்தெடுத்திருக்கும் ஆயுதம் 'மௌனம்'. சில விஷயங்கள் பதிலளிக்காமல் இருக்கும்போது மேலும் பரபரப்பாகிவிடுகிறது. தமிழ், தெலுங்கில் சுமாரான படங்களில் நடித்து பணம் சேர்க்கும் மீரா, தனது தாய்மொழியான மலையாளத்தில் மட்டும் சிறப்பான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதுவும் வருடத்திற்கு 1-2 படம் மட்டும் என்ற வீதத்தில். தற்போது மம்மூட்டியுடன் 'ஒரே கடல்' என்ற படத்தில் போட்டி போடும் மீரா, 'தன்மாத்ரா' புகழ் இயக்குனர் 'பிளெஸ்ஸி'யுடன் 'கல்கத்தா நியூஸ்' என்ற படத்திற்காக ரூ. 15 லட்சம் வாங்கி மலையாளத்தில் அதிகம் சம்பளம் பெறும் நடிகையாக செய்தியாயிருக்கிறார். இது தமிழ், தெலுங்குக்கு வாங்கும் சம்பளத்தில் பாதியாம்.

Related Articles/Posts

Vidya Balan - Classic Beauty... {mosimage}I just saw "Parineeta" and more than the movie I w...

Desire to be fit..... "It's just goes to show that there's never too late to achieve somethi...

Calcutta News... {mosimage} Et tu Blessy? Despite being a highly prolific film maker of...

Missing Stars... {mosimage}They were the thinking man's actresses... Stunning, tale...

Meera, Bhumika, Asin & Vinodhi... {mosimage}Meera Jasmine:- Simply amazing in the movie, I loved her in ...

About myself
Maheshwaran
Author: MaheshwaranWebsite: https://www.maheshwaran.com
I am a SAP Consultant in my late 30s, residing in the happeing IT City - Bangalore. My interests vary from reading to travelling to handicrafts to photography. My latest interest is on Body building. May be this vivid interest keeps me going in my life without getting bored.